For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இருட்டு அறை நாயகியின் முரட்டுத்தனமான படங்கள் - ஃபேஷன் ஜங்க்ஷன்!

By Staff
|

பலத்தரப்பட்ட மக்களின் பல்வேறு கருத்துக்களுடன் ஆரவாரமாக திரையரங்குகளில் ஹவுஸ்புல் ஷோக்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது இருட்டு அறையில் முரட்டு குத்து எனும் அடல்ட் காமடி ஹாரர் திரைப்படம்.

முழுக்க, முழுக்க 18+ என்று ஆரம்பத்தில் இருந்தே கூறி வெளியிடப்பட்ட திரைப்படம் எனிலும், நமது கலாச்சாரத்திற்கு இது உகந்த படம் அல்ல. இது எதிர்காலத்தில் திரை உலகில் இப்படியான படங்களை அதிகம் எடுக்க ஊக்கவிக்கும். இதை வேரிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற கருத்துக்கள் கூறி வருகிறார்கள்.

Iruttu Araiyil Murattu kuthu Movie Fame Chandrika Ravis Sizzling Fashion Pictures

இப்படியான எதிர்மறை விமர்சனங்கள் வரும் அதே சமயத்தில்.., 18+ படம் தானே, பிடிப்பவர்கள் பார்க்கட்டும், பிடிக்காதவர் ஒதுங்கி செல்லுங்கள். உங்களை யார் இந்த படத்தை பார்க்க கூறினார்கள் என ரசிகர்களில் ஒரு பிரிவினர் (முக்கியமாக இளைஞர்கள்) கருத்துக் கூறி வருகிறார்கள்.

இந்த படத்தில் பேயாக சந்திரிகா ரவி எனும் நடிகை நடித்திருக்கிறார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, இவர் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் மாடலிங் செய்துக் கொண்டிருந்த போது பதிவு செய்திருந்த கவர்ச்சி படங்கள் இப்போது சமூக தளங்களில் வைரலாக பரவத் துவங்கியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஆஸ்திரேலியா பொண்ணு!

சந்திரிகா ரவி எனும் இவர் ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த இந்தியாவை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். இவரது பிறந்த நாள் ஏப்ரல் ஐந்து. இவர் ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ன் பகுதியில் வசித்து வருகிறார். சிறு வயதில் இருந்தே இவருக்கு கலைகளில் ஆர்வம் அதிகம் என அறியப்படுகிறது.

முதல் படம்!

சந்திரகா ரவியில் முதல் தமிழ் படம் செய். இதை தொடர்ந்து இவர் ஹரஹர மகாதேவகி படத்தின் இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமாரின் இயக்கத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டுக் குத்து எனும் படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறார்.

மிஸ்... மிஸ்...

சந்திரகா ரவி மிஸ் மேக்ஸிம் இந்தியா ரன்னர் அப் பட்டம் வென்று இருக்கிறார். மேலும், மிஸ் வேர்ல்ட் ஆஸ்திரேலியா மற்றும் மிஸ் இந்தியா ஆஸ்திரேலியா போன்ற அழகிப் போட்டிகளில் இறுதி சுற்று வரை முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் இருந்தே இவருக்கு மாடலிங்கில் பெரும் ஆர்வம் இருந்துள்ளது. இவர் நிறைய விளம்பரங்கள் மற்றும் சர்வதேச நாளேடுகளின் அட்டைப்படங்களில் இடம் பெற்றுள்ளார்.

கலை தாகம்!

சந்திரிகாவிற்கு மாடலிங்கை விட மிகவும் பிடித்தது கலை தான். ஆம்! இவர் இந்திய பாரம்பரிய நடனங்களான பரதநாட்டியம், கதக் போன்றவற்றை முறையாக கற்றுள்ளார். மேலும், தி டெம்பிள் ஆப் ஆர்ட்ஸ் எனும் பயிற்சி மையத்தில் நாடக நடிப்பு கற்றுள்ளதாக அறியப்படுகிறது.

மேலும், சந்திரிகா ஜாஸ், பாலட், கம்டம்போரரி போன்றவற்றை தி ஆஸ்திரேலியன் நேஷனல் யூத் பர்பார்மிங் ஆர்ட்ஸ் குழுவில் கற்றிருக்கிறார். இவர் தி நியூயார்க் பிலிம் அகடாமியில் நடிப்பு பயிற்சியும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனவு!

அன்பு, பேரார்வம், மனத்தாழ்மை என போன்றவை சந்திரிகா ரவியின் தனி சிறப்பு பண்புகள் என இவரது தோழமை வட்டாரங்கள் கூறுகின்றன. எல்லா பெண்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறார் சந்திரிகா ரவி. பாலிவுட்டில் பெரிய நடிகையாக வர வேண்டும் என்பது இவரது கனவுகளில் ஒன்றாக இருக்கிறது.

பறக்கிறார்...

இப்போதைக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் இந்தியா இடையே பறந்து, பறந்து வசித்து வருகிறார். இவர் பெண்கள், பெண்ணுரிமை, பெண்களுக்கான சமவுரிமைக்காக குரல் கொடுக்கவும் தயாராக உள்ளார். முக்கியமாக இந்திய பெண்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதில் ஆவலாக இருக்கிறார்.

அட! கலைத் தாகம் மற்றும் பெண்ணுரிமை போராளியாக பல நல்ல எண்ணங்கள் கொண்ட பெண்ணை போய் இப்படி காமப் பேய் ஆக்கிட்டீங்களே டைரக்டர் சார். இது உங்களுக்கே நியாயமா இருக்கா? இதுக்காகவே மாதர் சங்கங்கள் உங்க படத்துக்கு எதிரா போர் கொடி தூக்குவாங்க போலையே....?!?!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Iruttu Araiyil Murattu kuthu Movie Fame Chandrika Ravi's Sizzling Fashion Pictures

Iruttu Araiyil Murattu kuthu Movie Fame Chandrika Ravi's Sizzling Fashion Pictures
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more