For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லேக்மீ ஃபேஷன் வீக்கில் நடந்த சில மோசமான தர்ம சங்கடமான தருணங்கள்!

இங்கு லேக்மீ ஃபேஷன் வீக்கில் நடந்த மிகவும் மோசமான சில தர்ம சங்கடமான தருணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

2018 ஆம் ஆண்டின் லேக்மீ ஃபேஷன் வீக் சம்மர் ரெசார்ட் ஆரம்பமாகிவிட்டது. ஆனால் இதுவரை நடந்த லேக்மீ ஃபேஷன் வீக்கைப் பார்த்தால், இந்நிகழ்ச்சியில் இதுவரை ஏராளமான தர்ம சங்கடமான தருணங்கள் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு வருடமும் நடக்கும் இந்த ஃபேஷன் ஷோவில் கூட, மாடல்கள், ஷோஸ்டாப்பர்கள் என பலரும் தர்ம சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இக்கட்டுரையில் இதுவரை நடந்த லேக்மீ ஃபேஷன் வீக்கில் நடந்த சில மோசமான தர்ம சங்கடமான தருணங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் பாருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேலாடை நழுவல்

மேலாடை நழுவல்

2006 ஆம் ஆண்டு நடந்த லேக்மீ ஃபேஷன் வீக்கில் சூப்பர் மாடல் கரோல் கிரேசியஸ் ராம்ப் வாக் நடந்து வரும் போது, யாரும் எதிர்பாராத வகையில் அவர் அணிந்து வந்த உடை முற்றிலும் நழுவி அவரை பெரும் தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கிவிட்டது. கரோல் கிரேசியஸ், செக்ஸியான கோல்டன் மற்றும் மஞ்சள் நிற வேலைப்பாடுகள் செய்யப்பட்ட உடையை அணிந்து வந்திருந்தார். அப்போது அவரது உடையின் மேல் பகுதி கழன்று விழுந்துவிட்டது.

கவுஹரின் கிழிந்த ஆடை

கவுஹரின் கிழிந்த ஆடை

கவுஹர் கான் மிகவும் ஸ்டைலான பிரபலங்களுள் ஒருவர். இவர் கூட பிரபலமான லேக்மீ ஃபேஷன் வீக்கில் தர்ம சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளார். அதுவும் 2006 ஆம் ஆண்டு நடந்த லேக்மீ ஃபேஷன் வீக்கில் கோல்டன் கோர்செட் பாடிசூட் அணிந்து, கருப்பு நிற விராப்பரை இடுப்பில் சுற்றி ராம்ப் வாக் நடந்து வந்தார். அப்போது அந்த கருப்பு நிற விராப்பர் கிழிந்து, அவரது பிட்டத்தை வெளிக்காட்ட, அவர் பெரும் சங்கடத்திற்கு உள்ளானார்.

பறந்த உடை

பறந்த உடை

2014 ஆம் ஆண்டு நடந்த லேக்மீ ஃபேஷன் வீக்கில் மாடல் ஒருவர் முன்புறம் ஸ்லிட் கொண்ட மஞ்சள் நிற டாப்ஸ் அணிந்து ராம்ப் வாக் நடந்து வந்தார். அப்போது எதிர்பாராத வகையில் அவரது டாப்ஸ் காற்றில் பறக்க, அவரது மார்பகங்கள் வெளிப்பட மிகுந்த சங்கடத்திற்கு உள்ளாகினார். இது 2014 ஆம் ஆண்டு நடந்த லேக்மீ ஃபேஷன் வீக்கிலேயே யாரும் மறக்க முடியாத ஓர் மோசமான தருணமாக இருந்தது.

ஆரஞ்சு உடை நழுவல்

ஆரஞ்சு உடை நழுவல்

2015 ஆம் ஆண்டு நடந்த லேக்மீ ஃபேஷன் வீக்கில் மாடல் ஒருவர் ஆரஞ்சு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் ஒன்றை அணிந்து ராம்ப் வாக் நடந்து வந்தார். அப்போது அவரது உடை நழுவி விழும் நிலையில் இருப்பதை அங்கிருந்த பார்வையாளர்கள் அறிந்து, அந்த மாடலுக்கு சைகையில் தெரிவித்தார்கள். நல்ல வேளை அந்த மாடல் அவர்களது சைகையைப் புரிந்து கொண்டு உடையைப் பிடித்துக் கொண்டார். இல்லாவிட்டால், இவரும் 2006 இல் நடந்ததைப் போன்று மோசமான தர்ம சங்கடத்திற்கு உள்ளாகியிருப்பார்.

சித்ரங்கதா சிங்

சித்ரங்கதா சிங்

2017 ஆம் ஆண்டு நடந்த லேக்மீ ஃபேஷன் வீக்கில் டிசைனர் நேகா அகர்வாலின் கலெக்ஷன்களுக்கு ஷோஸ்டார்ப்பராக வந்தவர் தான் சித்ரங்கதா சிங். இவர் சக்தி வாய்ந்த போர்வீர இளவரசி போன்ற உடை அணிந்து ராம்ப் வாக் நடந்து வந்தார். ஆனால் அவர் அணிந்து வந்த உடை டீப் நெக்லைன் கொண்டிருந்ததால், சித்ரங்கதா அணிந்திருந்த சிலிகான் நிப்பிள் கார்டுகள் வெளிப்பட்டு, அவரை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கியது.

திஷா பதானி

திஷா பதானி

நடிகை திஷா பதானி 2017 ஆம் ஆண்டு நடந்த லேக்மீ ஃபேஷன் வீக்கில் மிகப்பெரிய தர்ம சங்கடத்தை சந்திக்கவிருந்தார். நல்ல வேளை நடிகரான டைகர் ஷெராஃப் சரியான நேரத்தில் மேடையில் வந்து அவரைக் காப்பாற்றிவிட்டார். திஷா பதானி டிசைனர் மனீஷ் மல்ஹொத்ராவின் மின்னும்படியான மிகவும் குட்டையான உடை அணிந்து ராம்ப் வாக் நடந்து வந்தார். இந்த உடையில் இப்படியே நடந்து வந்திருந்தால், அவர் உள்ளாடை அணியாமல் வந்தது அனைவருக்கும் மேடையில் உள்ள கண்ணாடியில் நன்கு தெரிந்திருக்கும்.

ஸ்கர்ட் நழுவல்

ஸ்கர்ட் நழுவல்

2016 ஆம் ஆண்டு நடந்த லேக்மீ ஃபேஷன் வீக்கில் வெளிவந்த டிசைனர் அணுஸ்ரீ ரெட்டியின் கலெக்ஷன்களுக்கு நடிகை ஷில்பா ஷெட்டி ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். அப்போது அவர் அழகிய மின்னும் லெஹெங்காவில் வந்திருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக ஷில்பா ஷெட்டி அணிந்து வந்த ஸ்கர்ட் கீழே இறங்க ஆரம்பிக்க, மேடையிலேயே அவர் அதை சரிசெய்தவாறு ராம்ப் வாக் நடந்து வந்து சங்கடத்திற்கு உள்ளாகினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: lfw fashion ஃபேஷன்
English summary

Top Worst Wardrobe Moments At The Lakme Fashion Week

Not just once, but more than five times we have witnessed major wardrobe malfunctions at the Lakme Fashion Week. Have a look.
Story first published: Saturday, February 3, 2018, 11:23 [IST]
Desktop Bottom Promotion