சிக்னேச்சர் ஸ்டைல் - கவுனில் பளிச்சென்று மின்னிய பேரழகி ஐஸ்வர்யா ராய்!

By: Srinivasan P M
Subscribe to Boldsky

ஐஸ்வர்யா ராய் பச்சன் உலகறிந்த சூப்பர் மாடல், முன்னாள் உலக அழகி, இந்திய சினிமாவின் கவர்ச்சிக் கன்னி என பல பரிமாணங்களைக் கொண்டவர். அவருடைய சுண்டி இழுக்கும் கண்கள், அழகு ததும்பும் முகம் மற்றும் மிடுக்கான மேனி என பல விஷயங்களுக்காக மக்களால் விரும்பப்படுபவர். பாலிவுட்டில் பல வெற்றிகரமான படங்களில் நடித்தவர். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ஹம் தில் தே சுகே சனம், தேவ்தாஸ் ஆகிவற்றைச் சொல்லலாம்.

பாலிவுட்டில் மட்டுமல்ல ஹாலிவுட்டிலும் தி மிஸ்டரஸ் ஆப் ஸ்பைசஸ் மற்றும் பிங்க் பாந்தர் ஆகிய படங்களில் கூட கலக்கியுள்ளார். நம்முடைய ஸ்டார் சிக்னேச்சர் ஸ்டைல் பகுதி மூலம் நாம் பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் மற்றும் அவர்களுடைய மனதிற்குகந்த பொது இடங்களில் தோன்றும் போது அல்லது ஓய்வின் போது அணியும் அணிகலன்கள் மற்றும் உடைகள் ஆகியவற்றினைப் பற்றி விவாதிப்போம்.

இன்றைய ஸ்டார் சிக்னேச்சர் ஸ்டைல் பகுதியில் பேரழகி ஐஸ்வர்யா ராயின் உடைகள் குறித்து விவாதிக்க உள்ளோம். அவர் குடும்பத்துடன் வெளியில் செல்லும் போது எதை அணிந்து கொள்ள விரும்புவார் என்று தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வமாக உள்ளதா? விளம்பரப் படப்பிடிப்பின் போது அல்லது கல்லூரிகளில் மாணவர் மத்தியில் பேசும் போது என்ன அணிவார்? கரெக்ட். அவர் அந்த ரம்மியமான கவுனைத் தான் அணிவார். பொது இடங்களுக்குச் செல்லும் போது அவர் வித்தியாசமான பல்வேறு ரகமான கவுன்களை அணிய விரும்புவார். சரி, அவர் கவுன் தரித்துக்கொண்டு அசத்திய தருணங்களைப் பார்க்கலாம் வாங்க.

Star Signature Style: Aishwarya Rai's Scintillating Affair With Gowns

ஐஸ்வர்யா ராய் ஒரு முறை நுபுர் கனாய் கவுனை அணிந்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அவர் சாம்பல் நிற தரை நீள கவுனில் மிக மிக அருமையாகவும், அழகாகவும் காட்சி அளித்தார். இந்த பேக்லெஸ் கவுன் அவரை மேலும் கவர்ச்சியாகக் காட்டியது

Star Signature Style: Aishwarya Rai's Scintillating Affair With Gowns

அண்மையில் தன்னுடைய படமான ஜஸ்பா - அறிமுக விழாவின் போது அவரைப் பிடிக்க நேர்ந்தது. பக்கப் பிரிவுகள் கூடிய கப்தான் கவுனில் தோற்றமளித்தார்.

Star Signature Style: Aishwarya Rai's Scintillating Affair With Gowns

மோனிஷா ஜெய்சிங்கின் கலெக்ஷன்களில் ஒன்றான இந்த கவுன் அவருக்கு மிகவும் அழகாக இருந்தது. மொத்தத்தில் அவர் மிகவும் ரம்மியமாக இருந்தார். கடைசியாக ஐஸ்வர்யா ஒரு மஞ்சள் நிற சன்ஷைன் கவுனில் மனதை கொள்ளை கொள்ளும் அழகில் காட்சியளித்தார். அடேங்கப்பா சூப்பர்.. இந்த சன்ஷைன் சேட் அவர் மேனியின் அழகை மேலும் அதிகரித்துக் காட்டியது. இது ஏஸ் டிசைனர் கௌரி மற்றும் நைனிகா அவர்களால் வடிவமைக்கப்பட்டது. தற்போதெல்லாம் ஐஸ்வர்யா கருப்பு நிறங்களை அதிகம் உடுத்துவதைப் பார்க்க முடிகிறது. ஆனாலும் இந்த மாற்றம் பார்ப்பதற்கு மிகவும் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது.

சரிங்க.. இப்போதைக்கு ஐஸ்வர்யா ராயின் சிக்னேச்சர் ஸ்டைல் பற்றிய செய்திகள் இவ்வளவு தான். பாலிவுட் பிரபலங்கள் பற்றிய மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள். உங்கள் கருத்துக்களைச் சொல்ல மறந்துடாதீங்க!

English summary

Star Signature Style: Aishwarya Rai's Scintillating Affair With Gowns

Aishwarya Rai Bachchan looks really hot and sexy in sunshine Gowns. She loves to wear gowns most of the time. is it her signature style? check it out now.
Subscribe Newsletter