For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடை நழுவுவது கூட தெரியாமல் கண்டபடி போஸ் கொடுத்து பதற வைத்த மலாய்கா அரோரா!

|

பாலிவுட் நடிகை, சூப்பர் மாடல் மற்றும் நடின கலைஞரான மலாய்கா அரோரா கடந்த மூன்று சீசன்களில் இருந்து இந்தியாவின் அடுத்த டாப் மாடலின் தலைமை நீதிபதியாக இருந்து வருகிறார். ஏனெனில், இவர் நாட்டின் மிக முக்கியமான மாடல்களில் ஒருவர். இவருக்கு எந்த உடையை எப்படி சிரமமின்றி கையாள்வது என்பது நிச்சயம் நன்கு தெரியும். மேலும் அதை அவர் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி நிரூபித்துள்ளார்.

இந்த வருடம் கூட மலாய்கா அரோரா லிவா மிஸ் திவா 2020-இன் கிராண்ட் ஃபினாலேயில் கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது ஒரு அற்புதமான ஸ்லிட் கவுனில் வந்து சிவப்பு கம்பளத்தில் ஜொலித்தார். அவரது அதிர்ச்சியூட்டும் தோற்றம், அந்நிகழ்ச்சிக்கு வந்தோரை ஈர்க்கும் வகையில் இருந்தது.

MOST READ: விருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை!

அதே சமயம் மலாய்கா அணிந்து வந்த கவுன், எந்நேரத்திலும் நழுவும் படியாகவும் இருந்தது பலருக்கும் பதற்றத்தை அளித்தது. இப்போது லிவா மிஸ் திவா 2020-க்கு மலாய்கா அரோரா அணிந்து வந்த உடை மற்றும் மேற்கொண்டு வந்த ஸ்டைல்களைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மஞ்சள் நிற ஸ்லிட் கவுன்

மஞ்சள் நிற ஸ்லிட் கவுன்

இது தான் லிவா மிஸ் திவா 2020-க்கு மலாய்கா அரோரா அணிந்து வந்த மஞ்சள் நிற ஸ்லிட் சாட்டின் கவுன். இந்த உடையானது டிசைனர் ஜார்ஜஸ் சக்ரா வடிவமைத்தது. இந்த கவுன் ஒற்றைத் தோள்பட்டையில் பூப் போன்ற சுருக்கங்களைக் கொண்டதுடன், தை-ஹை ஸ்லிட் கொண்ட ஃப்ளோர் ஸ்வீப்பிங் கவுன். இந்த கவுன் மலாய்காவிற்கு அட்டகாசமான தோற்றத்தைக் கொடுத்தது.

மேக்கப்

மேக்கப்

மலாய்காவின் மேக்கப் பற்றி கூற வேண்டுமானால், சருமத்திற்கு பொருத்தமான ஃபௌண்டேஷன் மற்றும் கன்சீலர் போட்டு, கண்களுக்கு மின்னும் படியான ஐ-ஷேடோ போட்டு, நியூட் நிற லிப்ஸ் டிக் போட்டு வந்திருந்தார். மலாய்காவிற்கு இந்த மேக்கப்பை போட்டு விட்டவர் திவ்யா சப்லானி.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

மஞ்சள் நிற தை-ஹை ஸ்லிட் கவுனுக்கு மலாய்கா நேர் உச்சி எடுத்து, ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார். அதுவும் முடியின் முனைகளில் லேசாக கர்ல்ஸ் செய்து வந்திருந்தார். மலாய்காவிற்கு இந்த மாதிரியான ஹேர் ஸ்டைலை செய்து விட்டவர் சிகையலங்கார நிபுணர் ஃபிளேவியன் ஹெல்ட் என்பவர் ஆவார்.

மலாய்காவின் ஆபரணங்கள்

மலாய்காவின் ஆபரணங்கள்

மலாய்கா அரோரா இந்த மஞ்சள் நிற செக்ஸியான கவுனிற்கு கழுத்தில் ஆபரணங்கள் எதுவும் அணியாமல், காதுகளில் டிசைனர் சுனில் தத்வானி வடிவமைத்த கெஹ்னா காதணியை அணிந்து, கை விரலில் மோதிரத்தையும் அணிந்திருந்தார்.

ஹை ஹீல்ஸ்

ஹை ஹீல்ஸ்

மலாய்கா அரோரா தை-ஹை ஸ்லிட் கவுன் அணிந்திருந்ததால், கால்களில் கோல்டன் ஸ்ட்ராப் கொண்ட ஹை ஹீல்ஸ் அணிந்திருந்தார்.

தர்ம சங்கடத்தை சந்திக்கவிருந்த தருணம்

தர்ம சங்கடத்தை சந்திக்கவிருந்த தருணம்

இது மலாய்கா அரோரா பத்திரிக்கையாளர்களுக்கு தான் அணிந்து வந்த உடையில் பலவாறு போஸ் கொடுக்கும் போது எடுத்த போட்டோக்கள். நல்ல வேளை எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. இல்லாவிட்டால் மிகப்பெரிய சங்கடத்திற்கு உள்ளாகியிருப்பார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Malaika Arora Looked Gorgeous In A Yellow One-Shoulder Thigh High-Slit Gown

Malaika Arora attended LIVA Miss Diva 2020’s Grand Finale where she owned the red carpet in her gorgeous dual-toned slit gown. Check it out here.