Latest Updates
-
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா?
லேக்மீ ஃபேஷன் வீக் 2023: புதுப்புது டிசைன்களில் கவர்ச்சியான அழகான ஆடையில் தோற்றமளிக்கும் பாலிவுட் பிரபலங்கள்!
மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் மஞ்சள் நிற லெஹங்காவில் மிக அழகாக தோற்றமளித்தார். கையில் பூச்செண்டுடன் மிக நம்பிக்கையாக ராம்ப் வாக் செய்தார்
ஃபேஷன் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த லேக்மீ ஃபேஷன் வீக் கடந்த மார்ச் 9இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மிகவும் பிரபலமான ஃபேஷன் நிகழ்வுகளில் ஒன்றான லேக்மீ ஃபேஷன் வீக்கின் மூன்றாவது நாளான இன்று பல்வேறு பாலிவுட் திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர். பல்வேறு ஆடை வடிவமைப்பாளர்களின் ஆடைகளை திரை பிரபலங்கள் மற்றும் மாடல்கள் அணிந்து ராம்ப் வாக் செய்து வருகிறார்கள். எல்லா ஆடைகளும் கவர்ச்சியாகவும் அழகாகவும் அட்டகாசமாகவும் பார்வையாளர்களை கவர்ந்துவருகிறது.

இன்று நடந்து கொண்டிருக்கும் ஃபேஷன் ஷோவில், பிரபல பாலிவுட் திவாஸ்களான மூத்த நடிகை ஜீனத் அமன், சுஷ்மிதா சென், தாரா சுதாரியா, சயானி குப்தா மற்றும் சாரா அலி கான் ஆகியோர் மிக அழகான உடையில் வலம் வந்தனர்.
டிசைனர் ஷானின் வடிவமைக்கப்பட்ட ஆடையை பாலிவுட்டின் மூத்த நடிகை ஸ்டைல் திவா திருமதி ஜீனத் அமன் அணிந்து வந்திருந்தார். சிவப்பு மற்றும் கருப்பு நிற பேண்ட், சட்டை ஆடையில் அழகாக தோற்றமளித்தார். சிகப்பு மற்றும் கருப்பு கலந்த ஜாக்கெட் அணிந்திருந்தார். அதில் அனைவரின் கண்ணைக் கவரும் சிவப்பு வண்ண அச்சு இருந்தது.
திறமையான திரைப்பட நட்சத்திரம் சயானி குப்தா. வடிவமைப்பாளர்கள் கனிகா & நீலஞ்சனால் வடிவமைக்கப்பட்ட ஜஜாபோர் பிராண்ட் ஆடையை அணிந்து ராம்ப் வாக் செய்தார். திவா பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் சமச்சீரற்ற உடையில் ஒரு கவர்ச்சி பொம்மை போல் தோற்றமளித்தார். சயானியின் பிரத்யேக ஆடை வடிவமைப்புடன் கடல் தேவதைபோல தோற்றமளித்தார்.
நடிகை தாரா சுதாரியா, அன்னூஸ் கிரியேஷன் என்ற பிராண்டின் ஷோஸ்டாப்பராக இன்று வலம் வந்தார், அழகான இளஞ்சிவப்பு நிற லெஹெங்காவை அணிந்திருந்தார். அதில் தங்க நிற நூல் வேலைப்பாடு மற்றும் கண்ணாடி வடிவமைப்புடன் நுட்பமாக வடிவமைக்கப்பட்டிருந்து.
மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் மஞ்சள் நிற லெஹங்காவில் மிக அழகாக தோற்றமளித்தார். கையில் பூச்செண்டுடன் மிக நம்பிக்கையாக ராம்ப் வாக் செய்தார்.
நேர்த்தியான எம்பிராய்டரிகளுடன் அழகாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து பல மாடல்கள் வளம் வந்தனர்.
கவர்ச்சியாகவும் தனித்துவமாகவும் பல டிசைன்களில் வடிவமைக்கப்பட்ட ஆடைகள் இந்த லேக்மீ ஃபேஷன் வீக் ஷோவில் இன்று இடம் பெற்றிருந்தன.



Click it and Unblock the Notifications






