Latest Updates
-
இராவணனை கடவுளாக வழிபடும் வித்தியாசமான 5 இந்தியக் கோவில்கள் - எங்க இருக்கு தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள்! -
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
அக்டோபர் 18, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கனும் - இல்லனா அவ்வளவுதான் -
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம்
மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்ற காஜல் அகர்வால் வெளியிட்ட புதிய ரொமான்டிக் போட்டோக்கள்!
ஹனிமூனுக்காக காஜல் தனது கணவருடன் மாலத்தீவில் எடுத்த போட்டோக்களை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடிகை காஜல் அகர்வாலின் திருமணம் மிகவும் சிம்பிளாக நடைபெற்றது. இதையடுத்து காஜல் தனது முதல் கர்வா சவுத் பண்டிகையை கொண்டாடினார். அதன் பின் இந்த புதுமண தம்பதிகள் ஹனிமூனுக்காக மாலத்தீவு சென்றனர். திருமணம் முடிந்த பின் காஜல் அகர்வால் தனது திருமண போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்தார்.

இந்நிலையில் ஹனிமூனுக்காக காஜல் தனது கணவருடன் மாலத்தீவில் எடுத்த போட்டோக்களையும் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். புது தம்பதிகள் இருவரும் மாலத்தீவில் மிகவும் சந்தோஷமாக தங்களின் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். மேலும் அங்கு பல ரொமான்டிக்கான போட்டோக்களையும் எடுத்துள்ளனர். இதை காஜல் தனது சமூக வலைத்தள பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
கீழே மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்ற காஜல் அகர்வால் பகிர்ந்த சமீபத்திய போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

நீல-வெள்ளை நிற கட்டம் போட்ட உடை
சமீபத்தில் இன்ஸ்டாவில் வெளியிட்ட ஹனிமூன் போட்டோவில், காஜல் வெள்ளை மற்றும் நீல நிற கட்டம் போட்ட செக்கர்டு உடையை அணிந்திருந்தார். காஜல் அணிந்த இந்த உடையானது ஒரு ஸ்ட்ராப்லெஸ் ப்ரில் டாப்ஸ் மற்றும் ப்ரில் ஸ்கர்ட் கொண்டது. இந்த உடையில் இவர் மிகவும் அழகிய தேவதைப் போன்று காட்சியளித்தார். இது அந்த உடையில் கடலை ரசித்துக் கொண்டே டீ குடித்தவாறு காஜல் கொடுத்த போஸ்.

மேக்கப்
காஜல் இந்த நீல நிற உடைக்கு மேக்கப் அதிகம் போடவில்லை. லேசாக டச் அப் செய்து, உதட்டிற்கு லிப் கிளாஸ் போட்டு மிகவும் சிம்பிளாகவே இருந்தார்.

ஆபரணங்கள்
காஜல் அகர்வால் இந்த நீல நிற செக்கர்டு உடைக்கு கழுத்தில் எல்லாம் ஆபரணங்கள் எதுவும் அணியவில்லை. காதுகளில் மட்டும் ஒரு பெரிய கோல்டன் நிற வளையத்தை அணிந்திருந்தார். இது அவர் அணிந்திருந்த உடைக்கு பொருத்தமாகவே இருந்தது.

ஹேட் பேண்ட்
முக்கியமாக காஜல் இந்த உடைக்கு தலையில் பலவண்ணங்கள் பிரிண்ட் செய்யப்பட்ட ஹெட் பேண்ட் அணிந்திருந்தது அவரை இன்னும் க்யூட்டாக வெளிக்காட்டியது என்றே கூறலாம்.

காலணி
காஜல் இந்த உடைக்கு ஏற்றவாறு காலில் நியூட் நிற ஹை ஹீல் காலணியை அணிந்திருந்தார். திருமணத்தின் போது கால்களுக்கு போடப்பட்ட மெஹந்தி இன்னும் போகாமல் இருப்பது, அவருக்கு புதுப்பெண் தோற்றத்தை இன்னும் அளிக்கிறது.

ஆசனம்
இது காஜல் அகர்வால் அதே நீல நிற உடையில் சக்கராசனம் செய்தவாறு எடுத்த போட்டோ. இந்த போட்டோவையும் காஜல் தவறாமல் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முரகாவில் கணவருடன் காஜல்
இது காஜல் தனது கணவருடன் முரகா (Muraka) என்னும் உலகின் முதல் கடலுக்கடியில் தங்கும் இடத்திற்கு வந்த போது எடுத்த போட்டோ. தற்போது காஜல் அகர்வாலின் இந்த ஹனிமூன் போட்டோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications
