பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிகழ்ச்சியில் டையர் செபரேட்ஸ் உடையில் திணறடித்த ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்!

By: Srinivasan P M
 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க
    ஷேர் செய்ய    ட்வீட் செய்ய    ஷேர் செய்ய கருத்துக்கள்   மெயில்

இலங்கை அழகி ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் பிரமிக்க வைக்கும் அழகின் உச்சம். ரசிகர்கள் பார்வையில் படும்போது அது திரையிலோ அல்லது வெளியிலோ தன்னுடைய ரசிகர்களுக்கு ஒருபோதும் ஏமாற்றத்தைத் தந்ததில்லை. அவரிடம் அவருக்கே உரிய கவர்ச்சி, தைரியம் மற்றும் கனிவு ஆகியவற்றை எப்போதும் காணமுடியும்.

Jacqueline Fernandez Dazzles In Dior Separates At The British Airways Event

அண்மையில் டெல்லியில் நடந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ்-ன் புதிய வழித்தடமான இங்கிலாந்து நியு டெல்லி 789-9 இன் முதல் விமானத்தின் அறிமுக விழாவின் போது டையர் செபரெட்ஸ் உடையில் போஸ் கொடுத்தார். ஒரு Satin நீல நிற சட்டையையும் முட்டி வரையிலான மேக்சி ஸ்கர்ட்டையும் அணிந்திருந்தார். இந்த ஸ்கர்ட் பல மடிப்புகளைக் கொண்டதாக இருந்தது. அவர் அணிகலன்களிலேயே சிறப்பானதாக அவர் அணிந்திருந்த ஷூக்கள் இருந்தன. உபெர்-சிக் என வர்ணிக்கக்கூடிய வகையில் நவீனத்தையும் பாரம்பரியத்தையும் இணைந்து பிரதிபலிக்கும் வகையில் கருப்புநிற உயரமான ஹீல்கள் கொண்ட பூட்ஸ் அவை. அவர் அணிந்திருந்த பைலட் தொப்பி அவருக்கு வித்தியாசமான தோற்றத்தை தந்தது.

அப்பப்பா.. அந்த கவர்ச்சியான பைலட் தோற்றம் எங்களை அடியோடு மயக்கியது என்று தான் கூற வேண்டும். உங்களுக்கு எப்படி இருந்தது ? எங்களோடு பகிர்ந்து கொள்ளலாமே?

Please Wait while comments are loading...
Subscribe Newsletter