2017 கேன்ஸ் விழாவிற்கு அப்பட்டமாக தெரியும் ஷீர் உடையில் ஒய்யார நடைப் போட்ட தீபிகா!

Posted By:
Subscribe to Boldsky

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2017 ஆம் ஆண்டின் கேன்ஸ் திரைப்பட விழா ஆரம்பமாகிவிட்டது. கேன்ஸ் விழாவின் முதல் நாளில் நடிகை தீபிகா படுகோனே கலந்து கொண்டார். அதுவும் லோரியல் பிராண்ட் அம்பாஸிடராக கேன்ஸ் சிவப்பு கம்பளத்தில் ஒய்யார நடைப் போட்டார்.

Deepika Padukone Looks Exquisite In Wine Sheer Gown At The Red Carpet Of Cannes 2017

தீபிகா படுகோனே அணிந்து வந்த உடை அவருக்கு சிறப்பான தோற்றத்தைக் கொடுத்தது எனலாம். அதே சமயம் அவர் அணிந்து வந்த உடை உடலை அப்பட்டமாக வெளிக்காட்டும் படி ஷீர் டைப் என்பதால், சற்று ஹாட்டாகவும் இருந்தது. இப்போது 2017 ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவிற்கு தீபிகா படுகோனே அணிந்து வந்த உடை மற்றும் மேற்கொண்டு வந்த ஸ்டைல்களைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மார்க்சா கவுன்

மார்க்சா கவுன்

நடிகை தீபிகா படுகோனே டிசைனர் மார்க்சா வடிவமைத்த ஷீர் கவுனை அணிந்து வந்திருந்தார்.

பேக் போஸ்

பேக் போஸ்

தீபிகா படுகோனே அணிந்து வந்த ஷீர் கவுனானது, இடுப்புக்கு கீழே அப்பட்டமாக வெளிக்காட்டுவதோடு, தீபிகா அதற்கேற்ப பல பேக் போஸ்களைக் கொடுத்தார். அதில் சில தான் இது.

மேக்கப்

மேக்கப்

தீபிகா கண்களுக்கு நீல நிற ஐ-ஷேடோ மற்றும் கண் மை போட்டு, உதட்டிற்கு பெர்ரி நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல் என்று பார்த்தால், நேர் உச்சி எடுத்து, கூந்தலின் முனைகளில் கர்ல்ஸ் செய்து, ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

தீபிகா இந்த உடைக்கு பொருத்தமாக, காதுகளுக்கும், கை விரலுக்கும் வைர ஆபரணங்களை அணிந்து வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Deepika Padukone Looks Exquisite In Wine Sheer Gown At The Red Carpet Of Cannes 2017

Actress Deepika Padukone looks exquisite in wine sheer gown at the red carpet of Cannes 2017. Take a look...
Story first published: Thursday, May 18, 2017, 18:00 [IST]