பாலிவுட் ஸ்டைல் நோட்புக் - கரீனாவின் ஃபேஷன் டிப்ஸ்...

By: Ashok CR
Subscribe to Boldsky

2012 ஆம் ஆண்டு வெளியான தபாங் 2 திரைப்படம் நினைவில் உள்ளதா? கண்டிப்பாக யாரால் அதனை மறக்க முடியும்? சூப்பர் ஹிட் ப்ளாக்பஸ்டரான தபாங் திரைப்படத்தின் இரண்டாம் பாகமே அது. இரண்டு திரைப்படங்களுமே பாக்ஸ் ஆஃபிசில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, 100 கோடிகளை வசூல் செய்தது.

இப்படத்தில் கதாநாயகன் கதாநாயகியாக சல்மான் கானும், சோனாக்ஷி சின்ஹாவும் நடித்திருந்தனர். கரீனா கபூரும், மலைகா அரோராவும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். தபாங் 2 அதிகமான நாடகத்தனம் கொண்ட ஆக்ஷன் படமாகும். ஆக்ஷன் மற்றும் டிராமா போக, படத்தை தூக்கி பிடிக்க அளவுக்கு அதிகமான ஃபேஷனும் கவர்ச்சியும் கூட துணை நின்றன; குறிப்பாக ஃபெவிகால் சே பாடல்.

ஃபெவிகால் சே பாடலில் கரீனா கபூர் மாயங்களை செய்திருந்தார். அவரை தவிர வேறு யாராலும் இந்த பாடலை இவ்வளவு அழகாகவும், நேர்த்தியாகவும் செய்திருக்க முடியாது. மிகவும் புகழடைந்த இந்த பாடல் இளைஞர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டானது. பாடல் மட்டுமல்லாது கரீனாவின் ஸ்டைலும் கூட தான். கரீனாவின் ஆடைகள் இண்டோ-வெஸ்டர்ன் தோற்றத்தை கொண்டிருக்கும். அந்த மின்னும் வட்டுக்களைக் கொண்ட ப்ளவுஸ் மற்றும் மேக்ஸி பாவாடையும் யாரையாவது சாகடிக்காமல் விடுமா என்ன? சரி சற்று விரிவாக பார்க்கலாமா?

1. கருப்பு மற்றும் நீல நிற ஆடை தொகுப்பு

Bollywood Style Notebook- Fashion Tips From Kareena, Pasted With Fevicol Se

ஃபெவிகால் சே பாடலில் கரீனாவின் முதல் தோற்றம், அழகிய மற்றும் கவர்ச்சியான கருப்பு மற்றும் நீல நிற ஆடைகளுடன் தொடங்கும். மின்னும் வட்டுக்களை கொண்ட ஜாக்கெட் மற்றும் மேக்ஸி பாவாடையும் பீபோவிற்கு உச்சகட்ட அழகை கூட்டியது. இந்த பாடலில் ஒவ்வொரு ஆடையின் சிறப்பம்சமே, பாவாடைகள் அனைத்துமே இடுப்பில் முடியப்பட்டிருக்கும். பார்ப்பதற்கு கிட்டத்தட்ட லுங்கியை போலவே காட்சியளித்தது.

2. சிவப்பு நிற ஆடை தொகுப்பு

Bollywood Style Notebook- Fashion Tips From Kareena, Pasted With Fevicol Se

சிவப்பு என்பது ஆபாசம், கவர்ச்சி மற்றும் தைரியத்தை குறிக்கும் நிறமாகும். இந்த பாடலில் கரீனாவும் இவைகளை தான் சித்தரித்துள்ளார். அலங்கரிக்கப்பட்ட சிவப்பு நிற ஜாக்கெட்டுடன் மேக்ஸி பாவாடை (முதல் ஆடையை போலவே கட்டப்பட்டிருக்கும்), கவர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் தைரியத்தை பீபோவிற்கு அளித்தது.

3. செந்நீலம் மற்றும் பச்சை நிற ஆடை தொகுப்பு

Bollywood Style Notebook- Fashion Tips From Kareena, Pasted With Fevicol Se

செந்நீல நிற ஜாக்கெட் மற்றும் பச்சை நிற பாவாடையில் கரீனா கபூர் மிகவும் சூடாக காட்சியளித்தார். இந்த ஜாக்கெட் மின்னும் வட்டுக்களை கொண்டிருந்தது. அதேப் போல் அந்த பாவாடை லெஹங்கா போன்று அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த பாடல் முழுவதும், தன்னுடைய வளைவுகள், நெளிவுகள் மற்றும் பின்னழகை முழுமையான அளவில் வெளிக்காட்டியிருந்தார் கரீனா.

4. வெண்ணிற ஆடை தொகுப்பு

Bollywood Style Notebook- Fashion Tips From Kareena, Pasted With Fevicol Se

இந்த பாடலில் கடைசியாக கரீனா இந்த வெள்ளை நிற ஆடையில் தோன்றுவார். மேலாடை எம்ப்ராய்டரி செய்யப்பட்டு, ஒளி கசியும் வகையில் இருந்தது. மீண்டும் இந்த பாவாடை, லுங்கியை போல் முடியப்பட்டிருக்கும். இந்த பாவாடையும் எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருக்கும்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், கரீனா கபூரின் ஒட்டுமொத்த தோற்றமும் நம்மை மயக்கும். இந்த பாடலும், பாடலில் வரும் ஆடைகளின் தொகுப்பும் மிகவும் ஃபேஷனாகவும், கவர்ச்சியாகவும் அமைந்தது. உங்களது கருத்துக்களை கீழுள்ள கருத்து பெட்டியில் பதியவும்.

English summary

Bollywood Style Notebook- Fashion Tips From Kareena, Pasted With Fevicol Se

Kareena Kapoor looks extremely hot and sexy in the song fevicol se from Dabangg 2. Her dresses were ensemble and she looked fashionable and glamorous.
Subscribe Newsletter