14 வருட கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு ஐஸ்வர்யா ராய் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள்!

Posted By:
Subscribe to Boldsky

இந்தியாவிலேயே ஒவ்வொரு வருடமும் தவறாமல் மிகவும் பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு வரும் ஒருவர் என்றால் அது ஐஸ்வர்யா ராய் பச்சன் தான். ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவில் 2002 ஆம் ஆண்டு முதல் கலந்து கொண்டு வருகிறார். இந்த வருடம் ஐஸ்வர்யா ராய்க்கு இது 15 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவாகும்.

ஒவ்வொரு வருடமும் ஐஸ்வர்யா ராய் பல அற்புதமான மற்றும் சில அபத்தமான உடைகளை அணிந்து வந்துள்ளார். தற்போது ஆரம்பமாகியிருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு ஐஸ்வர்யா ராய் 13 மற்றும் 14 ஆம் தேதி கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

இங்கு தன் 14 வருட கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு ஐஸ்வர்யா ராய் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
2002

2002

இது 2002 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதன் முதலாக கலந்து கொள்ளும் போது, மஞ்சள் நிற நீத்தா லுல்லா புடவை அணிந்து, தங்க ஆபரணங்கள் அணிந்து பாரம்பரிய தோற்றத்தில் வந்த போது எடுத்தது.

2003

2003

2003 ஆம் ஆண்டு நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த மூன்று வகையான தோற்றத்தில் தான் ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார்.

2004

2004

2004 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு ஐஸ்வர்யா ராய் செக்ஸியான சில்வர் நிற நீத்தா லுல்லா கவுன் அணிந்து வந்திருந்தார்.

2005

2005

2005 ஆம் ஆண்டு செக்ஸியான கருப்பு நிற கவுனிலும், பூப்பிரிண்ட் போடப்பட்ட வெள்ளை நிற கவுனிலும் ஐஸ்வர்யா ராய் வந்திருந்தார்.

2006

2006

இது 2006 ஆம் ஆண்டு நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அடர் நீல நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து, கழுத்தில் பாம்பு வடிவ வைர ஆபரணத்தை அணிந்து வந்திருந்தார்.

2007

2007

2007 ஆம் ஆண்டு தான் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து, ஜோடியாக கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு ஐஸ்வர்யா ராய் பச்சன் வெள்ளை நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து மணப்பெண் தோற்றத்தில் வந்திருந்தார்.

2008

2008

2008 ஆம் ஆண்டு நடந்த கேன்ஸ் திரைப்பட திரைப்பட விழாவில் இந்த 4 வகையான தோற்றத்தில் தன் கணவருடன் ஐஸ்வர்யா ராய் பச்சன் கலந்து கொண்டார்.

2009

2009

2009 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் பச்சன் வெள்ளை நிற கவுன் மற்றும் கிரே நிற ஒற்றைத் தோற்பட்டை கொண்ட கவுனில் என இரு வேறு தோற்றங்களில் கலந்து கொண்டார்.

2010

2010

ஐஸ்வர்யா ராய் பச்சன் 2010 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த மூன்று வகையான உடையில் தான் கலந்து கொண்டார்.

2011

2011

2011 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் பச்சனின் அழகு சற்று அதிகரித்திருந்தது. மேலும் இந்த வருடம் மூன்று வேறு தோற்றத்தில் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டார்.

2012

2012

2012 ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவில் கலந்து கொள்ளும் போது ஐஸ் சற்று குண்டாக இருந்தார். இவை தான் 2012 ஆம் ஆண்டு ஐஸ் அணிந்து வந்த உடைகள்.

2013

2013

ஐஸ்வர்யா ராய் 2013 ஆம் ஆண்டு தன் உடல் எடையைக் குறைத்து, அற்புதமாக மூன்று வேறு தோற்றங்களில் கலந்து கொண்டார்.

2014

2014

2014 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் பச்சன் மீண்டும் தன் பழைய உடலமைப்பைப் பெற்று, இருவேறு அற்புதமான கவுன்களில் காட்சியளித்தார்.

2015

2015

2015 ஆம் ஆண்டு நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு, அழகான நிறங்களைக் கொண்ட 4 விதமான கவுன்களை அணிந்து அசத்தினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A Fashion Flashback Of Aishwarya Rai Bachchan's Outfits At Cannes Film Festival

Aishwarya Rai Bachchan: Cannes Film Festival, every good and bad outfit worn by the beauty queen over the last 14 years. Take a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter