Latest Updates
-
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சியில் செக்ஸியான உடையில் வந்த நடிகைகள்!
77ஆவது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெவர்லி ஹில்டன் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் கோல்டன் குளோப் விருதுகள் திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் மற்றும் நடிகை என்று தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு கோல்டன் குளோப் விருதுகளை வழங்கி வருகின்றன வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்கள். அந்த வகையில், நடப்பாண்டுக்கான இம்மிகப் பெரிய விருது வழங்கும் நிகழ்ச்சிக்காக அனைத்து சினிமா ரசிகர்களும் மற்றும் திரைத்துறையினரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.

77ஆவது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெவர்லி ஹில்டன் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. ஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுகள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டின் சிறந்த திரைப்படத்தையும் அமெரிக்க தொலைக்காட்சி தொடரையும் தேர்ந்தெடுத்து நேற்று கவுரவித்தன. 2020 கோல்டன் குளோப்பில் சிறந்த அழகான தோற்றங்களோடு வந்த நடிகைகளை பற்றி இங்கு காணலாம்.

ஜெனிபர் லோபஸ்
அமெரிக்க பாடகி, நடிகை, இசைப்பதிவு தயாரிப்பாளர், நடனக்கலைஞர் மற்றும் ஆடை அலங்கார வடிவமைப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் ஜெனிபர் லோபஸ். தன் அழகாலும், பாடலாலும், நடிப்பாலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த ஜெனிபர் லோபஸுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஜெனிபர் லோபஸ் தனது மூன்று அடுக்கு ஹேர் ஸ்டைல், செக்ஸியான உடை மற்றும் அனைவரையும் கவரும் கண் அலங்கார தோற்றத்துடன் இந்நிகழ்ச்சிக்கு வருகைதந்திருந்தார்.

மார்கோட் ராபி
ஆஸ்திரேலியா நாட்டு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை மார்கோட் ராபி. உலக அழகி பட்டியலில் இடம் பிடித்தவரான மார்கோட் ராபிக்கு சிறந்த நடிகைக்கான பல விருதுகள் கிடைத்துள்ளன. இந்நிகழ்ச்சியில், கவர்ச்சியான மற்றும் தளர்வான ஆடைகளில் மிக அழகாகத் தோற்றமளித்தார். அவருடைய பொன்னிற கூந்தலும், கருமேக கண்களும் அனைவரின் கவனத்தையும் அவர் மீது இழுத்தது.

ரேச்சல் ப்ரோஸ்னஹான்
புகழ்பெற்ற பிரைம் வீடியோவின் தொடரின் அழகிய மற்றும் திறமையான அமெரிக்க நடிகை ரேச்சல் ப்ரோஸ்னஹான். இவர் நகைச்சுவை நடிகை. பால் வண்ண உடலுக்குக் கத்திரி பூ ஊதா நிறத்தில் கவர்ச்சியான ஆடையை உடுத்தியிருந்தார். அவரின் நிறத்திற்கு அந்த உடை மிக நேர்த்தியாக அமைந்திருந்தது. ரேச்சலின் பொன்னிற கூந்தல் மற்றும் சிவப்ப லிஸ்டிக் ஆகியவை அவரது அழகை மேலும் மெருகேற்றியது.

டெய்லர் ஸ்விஃப்ட்
அமெரிக்காவின் மிகப்பேரிய பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட். இவர் உலகின் முன்னணி பாடகர்களில் ஒருவர் ஆவார். எப்போதுமே இயற்கையாகவே ஒளிரும் தோற்றத்துடன் கூடிய நுட்பமான அழகு கொண்டவர் டெய்லர் ஸ்விஃப்ட். அழகிற்கு அழகு சேர்க்கும் விதமாக அழகான மஞ்சள் நிற பூக்கள் போடப்பட்ட உடையை அணிந்துகொண்டு வந்திருந்தார். டெய்லரின் இசைக்கு மயங்கியவர்கள், இந்நிகழ்ச்சியில் அவரின் அழகுக்கும் சேர்த்து மயங்கினார்கள்.

ஜோய் கிங்
அமெரிக்க நடிகை ஜோய் கிங் தன்னுடைய அழகாலும், நடிப்பாலும் ஏராளமான ரசிகர் பட்டாளங்களை கொண்டுள்ளார். கடந்த ஆண்டு இவரது நடிப்பை பாராட்டி பிரைம்டைம் எம்மி விருது வழங்கப்பட்டது. கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் அதிர்ச்சியூட்டும் வகையில் அழகான ஒரு ஆடையை அணிந்து வந்திருந்தார். ஆடைக்கு ஏற்ப மேக்-அப் அளவாகப் பொருந்தியிருந்ததால் அனைவரையும் வெகுவாக கவர்ந்தார்.



Click it and Unblock the Notifications