Latest Updates
-
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
உங்க வாயைச் சுற்றி கருப்பா இருக்கா? அப்ப கருப்பு உளுந்து வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
Skin Care Tips In Tamil: வெயில் காலம் வந்துவிட்டாலே பலரது சரும நிறம் மாறி கருமையாகவும், பொலிவிழந்தும் இருக்கும். இப்படி கருப்பாக, சீரற்று இருக்கும் சரும நிறத்தை வெள்ளையாக்க ஃபேஸ் பேக்குகள் பெரிதும் உதவி புரியும். அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள பல பொருட்கள் சருமத்தில் மாயங்களைப் புரியக்கூடியவை. அதுவும் இட்லிக்கு பயன்படுத்தும் உளுத்தம் பருப்பு சருமத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது.

ஏனெனில் உளுத்தம் பருப்பு சருமத்தை ஆழமாக சுத்தம் செய்கிறது, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது மற்றும் சரும நிறத்தை அதிகரிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே இந்த உளுத்தம் பருப்பைக் கொண்டு முகத்திற்கு ஃபேஸ் பேக் போடும் போது, கருப்பாக இருக்கும் சரும நிறம் வெள்ளையாகும், சருமத் துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கும், கருமையான தழும்புகள் மறையும், சருமம் மென்மையாகி பொவோடு இருக்கும்.
அதுவும் கருப்பு உளுத்தம் பருப்பைக் கொண்டு ஃபேஸ் பேக் போடும் போது இரட்டிப்பு நன்மைகள் கிடைக்கும். கீழே சரும நிறத்தை அதிகரிக்க உதவும் சில கருப்பு உளுந்து ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஃபேஸ் பேக் #1
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கருப்பு உளுந்து பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியை சேர்த்து, பால் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
ஃபேஸ் பேக் #2
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கருப்பு உளுந்து பொடியை எடுத்து, அத்துடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து, பால் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
ஃபேஸ் பேக் #3
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் கருப்பு உளுந்து பொடியை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
ஃபேஸ் பேக் #4
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் ஊற வைத்து அரைத்த சிறிது கருப்பு உளுந்து மாவை எடுத்து, அத்துடன் வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெயை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி காய வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
ஃபேஸ் பேக் #5
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் சந்தன பொடியை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் கருப்பு உளுந்து பொடியை சேர்த்து, 2 வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் ஆயிலை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications