Latest Updates
-
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் மிகவும் கஞ்சர்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
1 கப் அரிசி மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்து கோவில்கள் அனைத்தும் ஏன் எப்போதும் 12 மணிக்கு மேல் மூடப்படுகிறது தெரியுமா? -
வாஸ்துப்படி இந்த 3 செடிகளை வீட்டில் தவறான இடத்துல வெக்காதீங்க.. இல்ல பணம் தண்ணியா செலவாகும்.. -
பன்னீர் வாங்குனா இந்த மாதிரி தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி ஆம்லெட் செய்யாம, ஒருவாட்டி இந்த துவையல் ஆம்லெட் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்! -
Breast Cancer Awareness Month: இளம் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் அதிகரிப்பது ஏன்? - விளக்கும் டாக்டர்! -
இந்தியாவில் 'தங்கத்தின் தலைநகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது தெரியுமா? நமக்கு பக்கத்துலதான் இருக்காம் -
குரு அதிசார பெயர்ச்சி 2026: குரு பார்வையால் கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிக்காரர்கள் இவங்கதான்! ஜோதிடர் கணிப்பு! -
பச்சை பயறு வேர்க்கடலை தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
முகம் கருப்பா இருக்கா? பலாப்பழம் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. வெள்ளையாவீங்க..
Jackfruit Face Packs In Tamil: நீங்கள் பொலிவான மற்றும் அழகான சருமத்தைப் பெற விரும்புகிறீர்களா? அதற்காக சரும பராமரிப்பிற்கு நிறைய செலவுகளையும் செய்து வருகிறீர்களா? ஆனால் அதிகம் செலவு செய்யாமல் சரும அழகை மேம்படுத்த நினைக்கிறீர்களா? அப்படியானால் அதற்கு பழங்கள் பெரிதும் உதவி புரியும்.

அதுவும் தற்போது பலாப்பழம் மார்கெட்டுகளில் அதிகம் விற்கப்படுகிறது. இந்த சுவையான பலாப்பழம் உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் பல நன்மைகளை வழங்குகிறது. அதுவும் பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஏ மற்றும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை கொலாஜனை மேம்படுத்தவும், முதுமையை எதிர்த்துப் போராடவும், சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும் உதவுகிறது.
முக்கியமாக இந்த பழத்தில் உள்ள நீர்ச்சத்தும், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இவை சருமத்தை ஆழமாக ஈரப்பதமூட்டுவதோடு, சருமத்தின் பொலிவையும் மேம்படுத்த உதவுகிறது. இப்படிப்பட்ட பலாப்பழத்தைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்பது குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. பலாப்பழம் மற்றும் ஆலிவ் ஆயில் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1/2 டேபிள் ஸ்பூன் பலாப்பழ விழுதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1/2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
2. பலாப்பழம் மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் பலாப்பழ விழுதை எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் ஓட்ஸ் பவுடர் மற்றும் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
3. பலாப்பழம் மற்றும் ஆப்பிள் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் பலாப்பழ விழுதை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் ஆப்பிள் விழுதை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
4. பலாப்பழம் மற்றும் முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் பலாப்பழ விழுதை எடுத்து, அத்துடன் சிறிது முல்தானி மெட்டி பொடி மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை மென்மையாக ஸ்க்ரப் செய்து கழுவ வேண்டும்.
5. பலாப்பழம் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் பலாப்பழ விழுதை எடுத்து, அதோடு 1 டீஸ்பூன் தயிரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
6. பலாப்பழம் மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் பலாப்பழ விழுதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* இறுதியாக குளிர்ந்த நீரால் முகத்தை தேய்த்து கழுவ வேண்டும்.
7. பலாப்பழம், மாதுளை, புதினா ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு பலாப்பழம், மாதுளை மற்றும் புதினா இலைகளை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


