Latest Updates
-
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறைவதை பாப்பீங்க.. -
அக்டோபர் 09 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 16-ல் நவபஞ்சம ராஜயோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது! -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் கஷ்டங்களையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரட் சாதமும், கோவக்காய் வறுவலும் - மதியம் ஸ்கூலுக்கு இந்த காம்போ செய்யுங்க.. பாக்ஸ் காலியா தான் வரும்.. -
1/4 கிலோ வெண்டைக்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா செஞ்சு பாருங்க - இதுவரை நீங்க சாப்பிடாத சுவையில் இருக்கும் -
வாஸ்துப்படி துளசி செடிகிட்ட இந்த செடிகளை வளர்க்காதீங்க.. இல்ல பண இழப்பு தான் அதிகரிக்கும்.. -
இறந்தவர்களின் மூக்கு மற்றும் காதில் ஏன் பஞ்சு வைக்கப்படுகிறது? கருட புராணம் சொல்லும் ரகசியம் என்ன தெரியுமா? -
இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
மகாளய அமாவாசைக்கு கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவலை எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பாருங்க..
முகத்தில் உள்ள கருமையை போக்கணுமா? அப்ப ஓட்ஸை இப்படி யூஸ் பண்ணுங்க..
Oats For Skin Care In Tamil: உடல் எடையைக் குறைக்க பெரும்பாலானோரால் உட்கொள்ளப்படும் ஒரு உணவுப் பொருள் தான் ஓட்ஸ். இந்த ஓட்ஸ் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை அதிகம் உள்ளன. எனவே இந்த ஓட்ஸைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்கும் போது, சருமத்தில் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள் நீங்கும்.

மேலும் சருமத்தை ஈரப்பதத்துடனும், மென்மையாகவும், வைத்துக் கொள்ள உதவும். அதுமட்டுமின்றி ஓட்ஸில் சப்போனின்கள் என்னும் பொருள் உள்ளது. இது ஒரு நேச்சுரல் கிளென்சர் போன்று செயல்பட்டு, சருமத்துளைகளில் ஏற்படும் அடைப்புக்களை நீக்கவும், எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே இப்படிப்பட்ட ஓட்ஸை சருமத்தில் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. ஓட்ஸ் ஃபேஸ் க்ளென்சர்
* இந்த க்ளென்சருக்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பவுடரை எடுத்து, அத்துடன் ரோஸ் வாட்டர் அல்லது நீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 1-2 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இதன் மூலம் சருமத்தில் உள்ள அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய், தூசிகள் போன்றவை நீங்கி, முகம் பொலிவோடு இருக்கும்.
2. ஓட்ஸ் மாய்ஸ்சுரைசிங் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சில துளிகள் பால் அல்லது தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இந்த மாஸ்க் வறண்ட சருமத்தினருக்கு ஏற்றது.
3. ஓட்ஸ் ஸ்க்ரப்
* இந்த ஸ்க்ரப்பிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* பிறகு 5 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இதன் மூலம் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
4. ஓட்ஸ் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பவுடர், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை கருமையாக இருக்கும் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள கருமையை போக்கி, சீரான சரும நிறத்தைப் பெற உதவும்.
5. ஓட்ஸ் எலுமிச்சை பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பவுடரை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10-12 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் டல்லாக இருக்கும் சருமத்தை பிரகாசமாக்கும் மற்றும் சருமத்தில் எண்ணெய் வழிவதைக் குறைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

