Latest Updates
-
ஆகஸ்ட் 12-ல் நிகழும் சூரிய கிரகணத்திற்குப் பிறகு ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் தலவாழை படையல் மெனு - என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அரைச்சுவிட்ட பூசணிக்காய் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
சொரியாசிஸ் பற்றி ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட டாக்டர்! -
உலகம் முழுவதும் டாக்டர்கள் வெள்ளை நிற கோட் அணிவதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
கோதுமை முட்டை தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 10 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப மைசூர் பருப்பு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
Summer Skin Care Tips In Tamil: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான சருமம் இருக்கும். இதில் எண்ணெய் பசை சருமத்தைக் கொண்டவர்களை பார்த்தால், எந்நேரமும் முகத்தில் எண்ணெய் வழிந்தவாறு இருப்பார்கள். மேலும் இந்த வகை சருமத்தைக் கொண்டவர்களின் சருமத்தில் அழுக்குகளும், இறந்த செல்களும் அதிகம் தேங்கி, முகப்பரு பிரச்சனைகளை சந்திப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

ஆகவே இத்தகையவர்கள் தங்கள் சருமத்திற்கு சரியான அழகு பராமரிப்பு பொருட்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். அதோடு தினமும் சருமத்திற்கு ஸ்க்ரப், ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க் போன்ற பராமரிப்பை கொடுத்து வர வேண்டும்.
முக்கியமாக கோடைக்காலத்தில் இந்த வகை சருமத்தைக் கொண்டவர்களின் முகத்தில் கூடுதலாக எண்ணெய் வழிவதால், சருமத்தில் உள்ள அழுக்கையும், எண்ணெய் பசையையும் நீக்க சரியான ஃபேஸ் பேக்கை தேர்ந்தெடுத்து அடிக்கடி பயன்படுத்த வேண்டும்.
அதுவும் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த ஃபேஸ் பேக்குகளுக்கு பதிலாக, நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம். அப்படியான மிகச்சிறந்த ஒரு பொருள் தான் மைசூர் பருப்பு என்னும் மசூர் பருப்பு. இந்த பருப்பு கொண்டு ஃபேஸ் பேக் போடும் போது, சருமத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
1. மைசூர் பருப்பு மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு 2 டேபிள் ஸ்பூன் மைசூர் பருப்பை நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* பின் ஊற வைத்த மைசூர் பருப்பை நன்கு அரைத்து, 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.
2. மைசூர் பருப்பு மற்றும் கற்றாழை ஜெல் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு இரவு முழுவதும் ஊற வைத்து அரைத்த மைசூர் பருப்புடன், 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.
* சென்சிடிவ் சருமத்திற்கு இந்த ஃபேஸ் பேக் ஏற்றது.
3. மைசூர் பருப்பு, தேன் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு இரவு முழுவதும் ஊற வைத்த மைசூர் பருப்பை அரைத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்திய பின் தவறாமல் லைட் வெயிட் மாய்ஸ்சுரைசரை பயன்படுத்துங்கள்.
* சிறந்த பலனைப் பெற, வாரத்திற்கு 2 முறை இந்த ஃபேஸ் பேக்கை போடலாம்.
4. மைசூர் பருப்பு மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு இரவு முழுவதும் ஊற வைத்து அரைத்த மைசூர் பருப்புடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி, சிறிது நேரம் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* பின் 15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 1 முறை பயன்படுத்தலாம்.
5. மைசூர் பருப்பு மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு இரவு முழுவதும் ஊற வைத்து அரைத்த மைசூர் பருப்பு பேஸ்ட்டுடன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி வாரம் 2 முறை பயன்படுத்தி வந்தால், முகப்பரு தடுக்கப்படுவதோடு, சருமத்தின் நிறமும் மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
