Latest Updates
-
கோதுமை முட்டை தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 10 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..
1 வருடம் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
Budhaditya Rajyog In Leo On 22 August 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் அரசனாக கருதப்படும் சூரியனும், கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதனும் ஒன்றிணையும் நிகழ்வு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவ்விரு கிரகங்களும் ஒன்றிணையும் போது உருவாகும் யோகம் தான் புதாதித்ய ராஜயோகம். இந்த யோகமானது தகவல் தொடர்பு திறன், தன்னம்பிக்கை, தலைமைப்பண்புகள், முடிவெடுக்கும் திறன் போன்றவற்றை மேம்படுத்துவதாக கருதப்படுகிறது.

தற்போது சூரியன் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த சூரியன் ஆகஸ்ட் 17 ஆம் தேதி தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் நுழைந்து பயணிக்கவுள்ளார். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 22 ஆம் தேதி புதன் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் சிம்ம ராசியில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும்.
அதுவும் சில ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகமானது நற்பலன்களை அள்ளித் தரப்போகிறது. குறிப்பாக தொழிலில் முன்னேற்றம், வியாபாரத்தில் நல்ல லாபம், நிதி ஆதாயங்கள், மதிப்பு மரியாதை போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இப்போது ஆகஸ்ட் 22-ல் சூரியன் புதன் சேர்க்கையால் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் பணியிடத்தில் இந்த ராசிக்காரர்களின் செயல்திறனை உயர் அதிகாரிகள் கவனித்து பாராட்டுவார்கள். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். உறவுகளில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இருப்பினும், எந்த ஒரு பெரிய முடிவை எடுக்கும் போது, அவசரப்படாமல் நன்கு யோசித்து எடுக்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் பேச்சு மற்றும் தகவல் தொடர்பு திறன் வலுவடையும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். இது தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
மார்கெட்டிங், டிஜிட்டல் மீடியாவில் இருப்பவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். கூடுதல் வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வெளிநாட்டுடன் தொடர்புடைய தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும், இந்த காலத்தில் யாருக்கும் தேவையில்லாமல் வாக்குறுதிகளை அளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். உயர் அதிகாரிகள் உங்கள் கருத்துகளுக்கும், முடிவுகளுக்கும் மதிப்பளிப்பார்கள். சிலருக்கு பதவி உயர்வோ, புதிய பொறுப்புகளோ வழங்கப்படலாம். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக இக்காலத்தில் சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்களின் தொடர்பு கிடைக்கும்.
நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். வரவு செலவுகளுக்கு இடையே ஒரு சமநிலையை பேண வேண்டும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் எதிர்காலம் குறித்து முக்கியமான ஒரு முடிவை எடுப்பீர்கள். இருப்பினும் தன்னம்பிக்கை ஆணவமாக மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் நல்லுறவால் நேர்மறையான பலன்களைப் பெறுவார்கள். தொழிலதிபர்களுக்கு செல்வாக்குமிக்கவர்களின் தொடர்பு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வெளிநாட்டு வேலைகள் மூலம் நல்ல பலன்களைப் பெறலாம்.
நீண்ட காலமாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். படைப்பாற்றல், ஆராய்ச்சி துறையில் இருக்கும் மாணவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிப்பீர்கள். இருப்பினும், உங்களின் தனிப்பட்ட விஷயங்களை அனைவரிடமும் வெளிப்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிகள் கிடைக்கும். இருப்பினும் முதலீடுகளில் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டில் வேலை அல்லது படிக்க நினைப்பவர்களுக்கு சாதகமான செய்திகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஆன்மீக பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


