Latest Updates
-
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்..
சொரியாசிஸ் பற்றி ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட டாக்டர்!
Psoriasis Awareness Month 2026: சொரியாசிஸ் (Psoriasis) என்பது வெறும் தோல் பிரச்சனை மட்டுமல்ல. இது நீண்ட காலம் நீடிக்கும் ஆட்டோ இம்யூன் நோய் (Autoimmune Disease). அதாவது, உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு (Immune System) தவறுதலாக தோல் செல்கள் (Skin Cells) இயல்பை விட மிக வேகமாக உருவாகச் செய்கிறது. இதனால் தோலில் சிவப்பு நிறத்தில் தடிமனான தழும்புகள் உருவாகி, அதன் மேல் வெள்ளை அல்லது வெள்ளி நிற செதில்கள் (Scales) படியும். இந்த நோயை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், சரியான சிகிச்சை மற்றும் மருத்துவரின் தொடர்ச்சியான கண்காணிப்பின் மூலம் இதை நன்றாகக் கட்டுப்படுத்த முடியும்.

இந்த சொரியாசிஸ் பிரச்சனையால் உலகம் முழுவதும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சொரியாசிஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் சொரியாசிஸ் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த சொரியாசிஸ் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு சொரியாசிஸ் குறித்தும், அதன் அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை முறைகள் குறித்தும் சென்னை கிளீனீகிள்ஸ் மருத்துவமனையின் தோல் மருத்துவ நிபுணரான டாக்டர். நிதி சிங் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.
சொரியாசிஸ் அறிகுறிகள்
சொரியாசிஸ் பாதிப்பு பொதுவாக முழங்கை, முழங்கால், தலையின் தோல் (Scalp) மற்றும் முதுகின் கீழ்பகுதியில் காணப்படும். இருப்பினும், உடலின் எந்தப் பகுதியிலும் இது தோன்றலாம். சிலருக்கு கடுமையான அரிப்பு, எரிச்சல், வறண்ட அல்லது வெடிப்பு ஏற்பட்ட தோல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மேலும் சிலருக்கு நகங்கள் தடிமனாகுதல் அல்லது நகங்களில் சிறிய குழிகள் (Pits) தோன்றுதல் போன்ற மாற்றங்களும் காணப்படலாம்.
காரணங்கள்
சொரியாசிஸிற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால், பரம்பரை (Genetics) மற்றும் அதிகமாக செயல்படும் நோய் எதிர்ப்பு அமைப்பு (Overactive Immune System) முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. மனஅழுத்தம் (Stress), தொற்றுநோய்கள் (Infections), போதிய தூக்கமின்மை, புகைப்பிடித்தல், மது அருந்துதல், உடல் பருமன் (Obesity) மற்றும் சில மருந்துகள் ஆகியவை இந்த நோய் மீண்டும் தீவிரமடைய (Flare-up) காரணமாக இருக்கலாம்.
சிகிச்சைகள்
சொரியாசிஸ் நோயின் தீவிரத்தைப் பொறுத்தே சிகிச்சை அளிக்கப்படுகிறது. லேசான பாதிப்புகளுக்கு மருந்து கலந்த களிம்புகள் (Medicated Creams) மற்றும் மாய்ஸ்சரைசர்கள் (Moisturisers) போதுமானதாக இருக்கலாம். மிதமான அல்லது கடுமையான பாதிப்புகளுக்கு ஒளிச்சிகிச்சை (Phototherapy), வாய்வழி மருந்துகள் (Oral Medicines) அல்லது பயாலஜிக் சிகிச்சைகள் (Biologic Treatments) தேவைப்படலாம். ஒவ்வொருவரின் உடல்நிலையும் வேறுபடும் என்பதால், தோல் நோய் நிபுணரின் (Dermatologist) ஆலோசனையின் பேரில் தனிப்பட்ட முறையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
சொரியாசிஸை கட்டுப்படுத்துவது எப்படி?
சில எளிய வாழ்க்கைமுறை மாற்றங்களும் சொரியாசிஸைக் கட்டுப்படுத்த உதவும்.
* தோலை எப்போதும் ஈரப்பதத்துடன் (Moisturised) வைத்திருப்பது,
* ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது,
* மன அழுத்தத்தைக் குறைப்பது,
* சத்தான உணவுகளை சாப்பிடுவது,
* போதுமான தூக்கம் பெறுவது மற்றும் புகைப்பிடித்தல்,
* அதிகப்படியான மது அருந்துதல் ஆகியவற்றைத் தவிர்ப்பது போன்றவை நோய் மீண்டும் தீவிரமடைவதை குறைக்க உதவும்.
பலருக்குத் தெரியாத ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், சொரியாசிஸ் தோலை மட்டும் பாதிப்பதில்லை. சொரியாசிஸ் உள்ளவர்களில் மூன்றில் ஒருவருக்கு சொரியாடிக் ஆர்த்ரைட்டிஸ் (Psoriatic Arthritis) எனப்படும் மூட்டு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தொடர்ந்து மூட்டு வலி அல்லது காலை நேரங்களில் மூட்டுகள் இறுக்கமாக (Morning Stiffness) இருப்பது போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது. சிகிச்சை பெறாமல் விட்டால், இது நிரந்தர மூட்டு சேதத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தோல் நோய் நிபுணர் (Dermatologist) அல்லது மூட்டு நோய் நிபுணர் (Rheumatologist) ஆகியோரை அணுக வேண்டும்.
சொரியாசிஸ் குறித்த மூடநம்பிக்கையும், உண்மையும்
சொரியாசிஸ் குறித்து பரவி வரும் மற்றொரு தவறான நம்பிக்கை என்னவென்றால், இது தொற்றுநோய் (Contagious Disease) என்பதாகும். உண்மையில், இந்த நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொடுவதால், உடைகளைப் பகிர்ந்து கொள்வதால் அல்லது அருகில் இருப்பதால் பரவாது. ஆனால், இந்த தவறான நம்பிக்கைகளால் பல நோயாளிகள் தேவையற்ற சமூக பாகுபாடு (Social Stigma) மற்றும் மனஉளைச்சலை சந்தித்து வருகின்றனர்.
தோலை சரியாக பராமரிப்பதும் மிகவும் முக்கியம். கடுமையான சோப்புகள் (Harsh Soaps), மிகவும் சூடான நீரில் குளிப்பது மற்றும் அடிக்கடி சொறிவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். தோலை தொடர்ந்து ஈரப்பதத்துடன் வைத்திருப்பது, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மற்றும் தோலில் வெட்டு அல்லது காயங்கள் ஏற்படாமல் பாதுகாப்பது ஆகியவை நோய் மீண்டும் தீவிரமடைவதை குறைக்க உதவும்.
சொரியாசிஸ் என்பது தோலில் தோன்றும் அறிகுறிகளை மட்டும் கட்டுப்படுத்துவது பற்றியது அல்ல; ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் முக்கியமானது. ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்து, சரியான நேரத்தில் சிகிச்சை பெற்று, மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர்ந்து கண்காணித்தால், இந்த நோயை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன், சிக்கல்கள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.
வீட்டு வைத்தியம் அல்லது சுயமாக மருந்து எடுத்துக் கொள்வதை (Self-medication) நம்பாமல், தொடர்ந்து தோலில் தடிப்புகள், செதில்கள் (Scaling) அல்லது மூட்டு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தோல் நோய் நிபுணரை அணுக வேண்டும். சரியான சிகிச்சை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவதன் மூலம், சொரியாசிஸ் உள்ளவர்களும் ஆரோக்கியமான, சுறுசுறுப்பான மற்றும் தரமான வாழ்க்கையைத் தொடர முடியும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

