Latest Updates
-
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
சம்மரில் உங்க சருமத்தை ஜொலிக்க வைக்க... திராட்சையை எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?
கோடை வெப்பம் தொடங்கியது முதல் மக்கள் சரும ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். மேலும், பழங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கோடை காலத்தில் குளிர்ச்சியான பழங்களைதான் நாம் அனைவரும் விரும்புவோம். அந்த வகையில், திராட்சை உங்கள் சருமத்திற்கு பல அதிசயங்களை செய்கிறது.
பச்சை, சிகப்பு, ஊதா, கருப்பு போன்ற நிறங்களில் கிடைக்கும் திராட்சையில், அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரதங்கள் நிரைந்துள்ளன. திராட்சையை உட்கொள்வதன் மூலம், உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தலாம். பொலிவான சருமத்தையும் ஆரோக்கியமான உடலையும் நீங்கள் பெறலாம்.

எளிதில் கிடைக்கக்கூடிய திராட்சைப்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருப்பதைத் தவிர, பொட்டாசியத்தின் வளமான மூலமாகவும் இருக்கிறது. சருமத்தில் பயன்படுத்தும்போதும் உட்கொள்ளும் போதும், திராட்சை கூழ் உள்ளிருந்து தோலை பளபளக்க வைக்கிறது. திராட்சையில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, அவை சருமத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது.
திராட்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை பளபளக்க வைக்கிறது. மேலும், சருமத்திற்கு ஆரோக்கியமான, இளமை தோற்றத்தை அளிக்கவும் உதவுகிறது. திராட்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
இந்த கோடைகாலத்தில், திராட்சை கூழ்களை ஃபேஸ் பேக் அல்லது ஸ்கின் மாஸ்க்காக பயன்படுத்த அழகு நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். வறண்ட சருமத்திற்கு சிகிச்சையளிப்பதோடு, கோடை மாதங்களில் உங்கள் சருமத்தை குளிர்ச்சியாக உணர வைக்கும். திராட்சை உங்கள் சருமத்திற்கு என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் சருமத்தை குணப்படுத்தலாம்
எரிச்சல் மற்றும் சரும வெடிப்புகளுக்கு கூடிய விரைவில் சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையெனில், அவை உங்கள் முக அழகை முற்றிலும் பாதிக்கும். இந்த பிரச்சனையை தீர்க்க திராட்சை கூழை தொடர்ந்து நான்கு நாட்கள் முகத்தில் பயன்படுத்தி வரவேண்டும்.
திராட்சை கூழை முகத்தில் தடவி காய்ந்ததும், வெதுவெதுப்பான நீரில் நனைத்த பருத்தி உருண்டையால் முகத்தை துடைக்கவும். அரிப்பு தொடர்ந்தால், இதை மீண்டும் செய்யவும். சிறிய அரிப்புக்கு மட்டுமே இதை செய்ய வேண்டும். நாள்பட்ட அரிப்பு ஏற்பட்டால், மருத்துவரை சந்திக்க வேண்டும்.
சரும கறைகளை நீக்கவும்
வைட்டமின் சி சத்து நிறைந்த பொருட்கள் உங்கள் சரும தழும்புகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. குளிர்ந்த திராட்சை கூழை உங்கள் முகத்தில் தடவி வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். அவை உலர்ந்ததும், முகத்தை தண்ணீரில் கழுவுங்கள்.
பரு மற்றும் வடுக்களை போக்க உதவும்
உங்கள் முகத்தில் இருக்கும் பரு மற்றும் வடுக்களைப் போக்க ஒரு இயற்கை வழியைத் தேடுகிறீர்களா? ஆம், எனில், திராட்சை கூழை உங்கள் சருமத்தில் பயன்படுத்துங்கள். இந்த கூழை உங்கள் முகத்தில் நன்றாக தடவி உலர வைக்க வேண்டும். அது காய்ந்ததும், குளிர்ந்த பாலில் உங்கள் முகத்தை கழுவ வேண்டும்.
உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்குங்கள்
உங்கள் சருமத்தை ஹைட்ரேட் செய்ய வைட்டமின்களை உட்கொள்வது அவசியம். திராட்சையின் கூழில் அதிக அளவு நீர் மற்றும் கணிசமான அளவு வைட்டமின் சி இருப்பதால், வாரத்திற்கு ஒரு முறை உங்கள் முகத்தை திராட்சை சாற்றினால் கழுவுங்கள். இது கோடையில் உங்கள் சருமத்தை பாதுகாக்கவும், பளபளப்பாக ஜொலிக்க வைக்கவும் உதவும்.



Click it and Unblock the Notifications


