For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் பயன்படுத்தும் லிப்-பாமினை எச்சில் மூலம் தெரியாமல் உட்கொள்ளுவதால் என்ன ஆகும்

லிப் பாம் என்பது எல்லா பெண்களும் தங்களின் வாழ்க்கையில் ஒரு முறையாவது பயன்படுத்தி இருக்கும் ஒரு மேக்கப் சாதனமாகும். ஏயெனில் எல்லா நேரங்களிலும் உங்கள் உதடுகள் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு கால நிலையை

|

Recommended Video

How to choose perfect dark lipsticks| Best lipsticks for skin| In Tamil

லிப்-பாம் என்பது எல்லா பெண்களும் தங்களின் வாழ்க்கையில் ஒரு முறையாவது பயன்படுத்தி இருக்கும் ஒரு மேக்கப் சாதனமாகும். ஏயெனில் எல்லா நேரங்களிலும் உங்கள் உதடுகள் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு கால நிலையை பொருத்தும் உதடுகள் வறண்டு மற்றும் வெடித்துக் காணப்படும்.

Things You Didn’t Know About Lip Balms

இவற்றைச் சரி செய்ய லிப்-பாம் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஆனால் லிப்-பாம் பற்றி உங்களுக்குத் தெரியாத சில விஷயங்களும் உள்ளன. அவை என்ன என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளுவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஈரப்பதம்

ஈரப்பதம்

லிப்-பாம் உங்கள் சருமத்தினை ஈரப்பதமாக வைக்கும் என்று நினைத்தால் அது தவறு. உண்மையில் லிப்-பாம் உங்களின் சருமத்தினை ஈரப்பதமாக மாற்றாது அது உங்கள் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தினை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. அதாவது லிப்-பாம் உங்கள் உதடுகளின் மீது ஒரு அடுக்கினை உருவாக்கி உதட்டில் இருக்கும் ஈரப்பதத்தினை தக்க வைத்து உதடுகளை வறண்டு விடாமல் மென்மையாக வைக்கிறது. எனவே இதனை காலநிலையை பொறுத்து தினமும் பயன்படுத்துவது நல்லது.

உட்கொள்ளுதல்

உட்கொள்ளுதல்

நம்மில் பெரும்பாலோர் அடிக்கடி உதடுகளில் எச்சில் வைத்தல் மற்றும் சப்புதல் போன்றவற்றை செய்யும் பழக்கம் உள்ளது. நாம் லிப்-பாம் அல்லது லிப்ஸ்டிக் எது பயன்படுத்தினாலும் உதடுகளை எச்சில் செய்யும் போது லிப்-பாம் மற்றும் லிப்ஸ்டிக் உள்ளே சென்றாலும் வயிற்றில் எந்த விதமான தீங்கினையும் ஏற்படுத்தாது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் அதற்காக இது சாப்பிடும் பொருள் என்று அர்த்தம் இல்லை. எப்போதாவது தெரியாமல் எச்சில் மூலம் உட்செல்லுவது தவறில்லை.

அதிகளவு பயன்படுத்துதல்

அதிகளவு பயன்படுத்துதல்

நீங்கள் லிப்-பாமிற்கு அதிக அளவில் அடிமையாகி விடீர்களானால் அல்லது உங்களால் லிப் பாம் உபயோகிக்காமல் இருக்க முடியாத நிலைமையிலிருந்தால் உண்மையில் அதற்கு அடிமையாகும் அளவிற்கு எந்த விதமான மூலப்பொருட்களும் அதில்இல்லை. லிப்-பாம் அதிகப்படியாக உபயோகிக்கும் போது உதடுகளில் தீங்கு விளைவித்து எரிச்சலை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. எனவே உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்களாகிய நெய் மற்றும் வெண்ணெய் கொண்டே உங்களின் உதடுகளை மென்மையானதாக மாற்றலாம். எனவே எந்த ஒரு மேக்கப் சாதன பொருட்களையும் அதிகப்படியாக உபயோகிப்பது நல்லது இல்லை. தேவைக்கு ஏற்ப உபயோகிங்கள். அதற்கு எப்போதும் அடிமையாக வேண்டாம்.

உதடுகள்

உதடுகள்

லிப்-பாம் உதடுகளில் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் சருமத்தில் உதடுகள் மட்டும் தான் ஈரப்பதமாக வைக்க வேண்டிய இடம் என்று நினைக்க வேண்டாம். லிப்-பாமினை உங்களின் மூக்கினை சுற்றி உள்ள இடங்களிலும் தடவி ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளலாம். மேலும் இதனை உங்களின் புருவங்களிலும் பயன்படுத்தலாம்.

காலாவதி

காலாவதி

எல்லா அழகு சாதனப் பொருட்களிலும் காலாவதி தேதி கொடுக்கப்பட்டு இருக்கும். அதே போல லிப்-பாமிற்கும் காலாவதி தேதி கொடுக்கப்பட்டு இருக்கும் அந்த நாட்கள் முடியும் வரை மட்டும் தான் அதனை உபயோகிக்க வேண்டும். எனவே எப்போது லிப்-பாம் உபயோகித்தாலும் அதில் குறிப்பிடப்பட்ட தேதி வரை உபயோகிப்பது நல்லது இல்லையெனில் அவை உங்கள் சருமத்தில் தீங்கு விளைவித்து விடும். இப்போதே உங்களிடம் இருக்கும் லிப்-பாம்களில் தேதியினை பார்த்து மாற்றி விட்டு புதிய ஒன்றை வாங்கி பயன்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things You Didn’t Know About Lip Balms

If there is one product every girl uses at least once in her life, it is definitely lip balms. We all are so much used to using this product that we sometimes feel like it is an inseparable part of our beauty routine. Be it chapped lips or excessive dryness, we often resort to using lip balms and look up to them for help. But, there are certain things about lip balms that you probably might not be aware of.
Story first published: Saturday, September 28, 2019, 18:05 [IST]
Desktop Bottom Promotion