For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நைட் தூங்கும் முன் இப்படி செஞ்சா சீக்கிரம் வெள்ளையாவீங்க... மறக்காம ட்ரை பண்ணுங்க...

வெள்ளையாக வேண்டுமா? இதற்கு சிறந்த வழி என்றால் அது வீட்டிலேயே இயற்கைப் பொருட்களைக் கொண்டு சருமத்தை ப்ளீச் செய்வது தான்.

|

நமது சருமத்தின் நிறத்தை பல வெளிப்புற காரணிகள் பாதிக்கின்றன. அதில் மாசுபாடு, சூரிய கதிர்கள் மற்றும் கெமிக்கல் நிறைந்த பொருட்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. சருமத்தின் நிறத்தை அதிகரிப்பதற்கு ஒரு எளிமையான வழி என்றால் அது ப்ளீச்சிங் தான். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அழகு நிலையங்களுக்குச் செல்வது என்பது முடியாத ஒன்று மட்டுமின்றி ஆபத்தானதும் கூட. அதோடு கெமிக்கல் நிறைந்த பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரிக்கும் போது, அந்த கெமிக்கல்கள் சருமத்தில் உள்ள ஆரோக்கியமான செல்களை அழித்து, சரும அழகை மோசமாக வெளிக்காட்டும்.

Natural Homemade Bleach For Instant Glow And Skin Whitening

எனவே இதற்கு சிறந்த வழி என்றால் அது வீட்டிலேயே இயற்கைப் பொருட்களைக் கொண்டு சருமத்தை ப்ளீச் செய்வது தான். இயற்கை பொருட்களால் ப்ளீச்சிங் செய்யும் போது, எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் சரும நிறத்தை அதிகரிக்கலாம். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை இரவு தூங்கும் முன் செய்தால், சீக்கிரம் வெள்ளையாகலாம். சரி, இப்போது வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே ப்ளீச்சிங் செய்வது எப்படி என்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வழி #1

வழி #1

தேவையான பொருட்கள்:

* எலுமிச்சை

* தேன்

செய்முறை:

* ஒரு பௌலில் எலுமிச்சை சாறு மற்றும் தேனை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

* தயாரித்த கலவையை முகத்தில் தடவும் முன், முகத்தை நீரால் கழுவிக் கொள்ளவும்.

* அதன் பின் அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்கவும்.

* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்தால், சரும நிறத்தில் ஒரு நல்ல மாற்றத்தை நீங்கள் காணலாம்.

வழி #2

வழி #2

தேவையான பொருட்கள்:

* துவரம் பருப்பு

* பால்

செய்முறை:

* முதலில் துவரம் பருப்பை நீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதை நன்கு அரைத்து, அத்துடன் சிறிது காய்ச்சாத பாலை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அந்த கலவையை முகத்தில் தடவி நன்கு காய வைக்கவும்.

* இறுதியில் குளிர்ந்த நீரால் முகத்தை தேய்த்து கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி முகத்திற்கு செய்து வந்தால், சரும நிறத்தில் ஒரு நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.

வழி #3

வழி #3

தேவையான பொருட்கள்:

* கடலை மாவு

* தயிர்

செய்முறை:

* ஒரு பௌலில் ஒரு ஸ்பூன் கடலை மாவு மற்றும் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை முகத்தில் தடவ வேண்டும்.

* முகத்தில் தடவிய கலவையானது நன்கு காய்ந்த பின், வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

ப்ளீச்சிங் செய்த பின் மேற்கொள்ள வேண்டியவைகள்:

ப்ளீச்சிங் செய்த பின் மேற்கொள்ள வேண்டியவைகள்:

துளசி சாறு

சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட துளசி பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். எனவே பிரச்சனையில்லாத சருமத்தைப் பெற தினமும் துளசி சாற்றினை முகத்தில் தடவி வாருங்கள்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் குளிர்ச்சி பண்புகள் நிறைந்துள்ளதால், தினமம் சருமத்திற்கு பயன்படுத்துவது நல்லது. தேங்காய் எண்ணெயை விட நெய்யை கூட முகம் மற்றும் உடல் முழுவதும் தடவலாம்.

வேப்ப எண்ணெய்

வேப்ப எண்ணெய்

பிம்பிள் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், இரவில் படுக்கும் முன் முகத்தில் வேப்ப எண்ணெயை தடவி வந்தால், ஒரு பெரிய மாற்றத்தைக் காலையில் காணலாம்.

சிட்ரஸ் சாறு

சிட்ரஸ் சாறு

வைட்டமின் சி அதிகம் நிறைந்த எலுமிச்சை சாறு அல்லது ஆரஞ்சு சாற்றினை கூட முகத்தில் தடவலாம். ஆரோக்கியமான சருமத்திற்கு, 15 நாட்களுக்கு ஒருமுறை இவற்றை சருமத்தில் தடவுவது நல்லது.

பால்

பால்

தினமும் பாலில் நனைத்த பஞ்சுருண்டையால் முகத்தை துடைப்பது, சருமத்திற்கு மிகவும் நல்லது. இது நல்ல கிளின்சர் போன்று செயல்படும். மேலும் பாலில் கொழுப்புக்கள் மற்றும் லாக்டிக் அமிலம் உள்ளதால், சருமத்திற்கு புதிய பொலிவு கிடைக்கும்.

கற்றாழை

கற்றாழை

மென்மையான, பொலிவான மற்றும் இளமையான சருமம் வேண்டுமானால், கற்றாழையை அன்றாடம் பயன்படுத்துங்கள். கற்றாழை ஜெல்லை முகத்திற்கு தடவுவதோடு, அதை ஜூஸாக தயாரித்தும் குடிக்கலாம். வேண்டுமானால், டோனராக கூட இதைப் பயன்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Homemade Bleach For Instant Glow And Skin Whitening

Here are some natural homemade bleach for instant glow and skin whitening. Read on...
Desktop Bottom Promotion