For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க கிச்சனில் உள்ள 'இந்த காய்கறிகள் உங்க சருமத்தை பொலிவாக மாற்றி ஒளிரச் செய்யுமாம்...!

|

அழகாக இருப்பதை யார்தான் விரும்ப மாட்டார்கள். பொலிவாகவும் உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும் இருக்க நீங்கள் உங்கள் சருமத்தை இயற்கை வழியில் பாதுகாப்பது நல்லது. உங்கள் சருமம் பொலிவிழந்துவிட்டதா? அதன் மீது அதிக செயற்கை கிரீம் தடவுவதற்கு பதிலாக, அதை ஏன் இயற்கையான தீர்வுகளை நோக்கி நீங்கள் செல்லக்கூடாது? சில நேரங்களில் நீங்கள் வீட்டில் தயாரிக்கும் ஃபேஸ் மாஸ்க்குகளை பயன்படுத்தும்போது விஷயங்களை மிகவும் சிக்கலாக்க வேண்டும். உங்கள் சருமத்திற்கு ஏற்ற இயற்கை வழிகளை நீங்கள் ஃபாலோ செய்வது மிகவும் முக்கியம். எனவே உங்கள் முகத்தில் பயன்படுத்தக் கூடிய சில காய்கறிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய காய்கறிகள் பல உள்ளன. இந்த வீட்டு வைத்தியம் மெதுவாக இருந்தாலும், அவை நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும். இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளை உங்கள் சருமத்திற்கு பயன்படுத்தி பொலிவாக்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தக்காளி

தக்காளி

தக்காளியில் அதிகளவு வைட்டமின் சி உள்ளது மற்றும் சிறிது அமிலத்தன்மை கொண்டது. இது சருமத்தின் நிறத்தை ஒளிரச் செய்ய உதவுகிறது. மேலும், காலப்போக்கில் கரும்புள்ளிகளை மறைய வைக்க உதவுகிறது. தக்காளி ஃபேஸ் பேக் உங்கள் சருமத்தை பொலிவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சை சாறு வலிமையான இயற்கையான ப்ளீச்சிங் முகவர்களில் ஒன்றாகும். எலுமிச்சம் பழச்சாற்றை நேரடியாக உங்கள் முகத்தில் தடவவும் அல்லது தேனுடன் கலந்து தடவலாம். பாதியாக வெட்டப்பட்ட எலுமிச்சையில் சில துளிகள் தேனை ஊற்றி, அதை உங்கள் முகத்தில் தேய்ப்பது இதை அடைய மிகவும் பயனுள்ள வழியாகும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

முகத்தில் வடியும் எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கி, உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள வெள்ளரிக்காய் உதவுகிறது. சருமத் துளைகள் சுவாசம் பெற்று புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது. உண்மையில் உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு வெள்ளரிக்காய் மிகவும் பயனுள்ள குளிர்விக்கும் முகவர். கூடுதலாக, வெள்ளரிகள் இயற்கையான டோனர்கள் மற்றும் துளைகளின் அளவைக் குறைக்கின்றன. உங்களுக்கு கண் இமைகள் வீங்கியிருந்தால், கண்களின் மேல் வைக்கப்படும் சில வெள்ளரித் துண்டுகள் மந்திரம் போல் வேலை செய்யும். சூரிய ஒளியால் ஏற்படும் கருமையை நீக்கி முகத்தின் நிறத்தை சீராக்குகிறது. சருமத்தில் ஏற்படும் தோல் அலர்ஜி போன்றவற்றை போக்கி தெளிவாக்குகிறது.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு வீட்டில் இருக்கும் போது அழகு பராமரிப்பு பொருட்களுக்காக நீங்கள் வெளியில் செல்ல தேவையில்லை. இதை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம். உருளைக்கிழங்கில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இதை முகத்தில் தடவினால், அனைத்து கரும்புள்ளிகளையும் அகற்ற உதவும். கதிரியக்க தோலைப் பெறுவதற்கு உருளைக்கிழங்கு ஒரு சிறந்த காய்கறியாகும்.

பீட்ரூட்

பீட்ரூட்

உடலின் ஆரோக்கியத்துக்கு எவ்வாறு பருவகால உணவுகள் முக்கியமானதாக இருக்கிறதோ, அதேபோல் சரும பளபளப்பிற்கும் காரணமாக அமைகிறது. எடுத்துக்காட்டாக குளிர்காலத்தில் பீட்ரூட் மற்றும் கேரட் சாறு போன்ற உணவுகளை நெல்லிக்காய் மற்றும் இஞ்சியுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். மேலும் வேர்க்கடலை மற்றும் குளிர்காலத்திற்கேற்ற கீரைகளை உட்கொள்வதும் பொலிவான சருமத்தைப் பெற உதவும். பீட்ரூட்டை முகத்தில் தொடர்ந்து தடவி வந்தால், சருமத்தில் மிகவும் இயற்கையான இளஞ்சிவப்பு ஃப்ளஷ் ஏற்படும். தெளிவான சருமத்திற்கான இந்த காய்கறியை நீங்கள் முயற்சித்தவுடன் உங்கள் சருமத்திற்கு செய்யும் அதிசயங்களை நீங்களே காணலாம்.

கேரட்

கேரட்

கேரட்டில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், அவை முகப்பருவிற்க்கு மருந்தாகப் பயன்படும். பளபளப்பான சருமத்திற்கு இந்த ஆரோக்கியமான காய்கறியை சாப்பிட வேண்டும். தேவையான கேரட்டை எடுத்து அதனை வேகவைத்து பின்னர் மசித்து முகத்திற்கு தடவ வேண்டும். காய்ந்த பிறகு முகத்தில் இருந்து உரித்து எடுத்த பிறகு வெதுவெதுப்பான நீரில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஒரு காட்டன் துணியில் நீரை தொட்டு சிறிது நேரம் ஒத்தடம் கொடுத்தால் முகத்தில் உள்ள தூசு மட்டும் இறந்த செல்கள் போய்விடும். வாரம் இரண்டு நாட்களுக்கு இப்படி செய்து வந்தால் முகம் பொலிவு பெறுவதை நீங்களே காணலாம்.

பூண்டு

பூண்டு

பூண்டு மிகவும் கடுமையானதாக இருக்கலாம். ஆனால் கரும்புள்ளிகளை மறைக்கும் அதன் திறன் கிட்டத்தட்ட அதிசயமானது. மேலும், பூண்டு ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. தெளிவான சருமத்தை உங்களுக்கு வழங்குவதற்கு பூண்டு சிறந்த வீட்டு வைத்தியம். இந்த காய்கறிகள் உங்கள் சரும பராமரிப்பிற்கு ஏற்றதா என்பதை உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Kitchen To Your Face: Vegetables You Can Use On Your Skin in tamil

Here we are talking about the Kitchen To Your Face: Vegetables You Can Use On Your Skin in tamil
Story first published: Saturday, January 15, 2022, 16:52 [IST]