For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க முகம் மேடு பள்ளமா அசிங்கமா இருக்குதா? இதோ அதை மறைக்க உதவும் ஃபேஸ் மாஸ்க்குகள்!

முகத்தில் உள்ள அசிங்கமான குழிகளை சமாளிப்பதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. குறிப்பாக சில ஃபேஸ் மாஸ்க்குகளைப் போடுவதன் மூலம், சருமத்தில் உள்ள அசிங்கமான குழிகளை மறையச் செய்யலாம்.

|

தற்போது ஏராளமானோர் பல்வேறு சரும பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். அதில் முகப்பரு, கரும்புள்ளி என்று பலர் சந்தித்தாலும், சிலர் திறந்த சருமத் துளைகளால் முகத்தில் அசிங்கமான குழிகளைக் கொண்டுள்ளனர். இம்மாதிரியான குழிகள் வயதான தோற்றத்தைத் தருவதோடு, முகத்தில் எந்நேரமும் எண்ணெய் வழிந்தவாறு இருக்கும். ஒருவரது முகத்தில் உள்ள சருமத் துளைகள் திறந்திருப்பதற்கு அதிகப்படியான சூரிய ஒளி, மாசுபாடு அல்லது முதுமை போன்றவை முக்கிய காரணங்களாகும்.

Homemade Face Masks For Pore Tightening In Tamil

முகத்தில் உள்ள அசிங்கமான குழிகளை சமாளிப்பதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. குறிப்பாக சில ஃபேஸ் மாஸ்க்குகளைப் போடுவதன் மூலம், சருமத்தில் உள்ள அசிங்கமான குழிகளை மறையச் செய்யலாம். மேலும் இந்த ஃபேஸ் மாஸ்க்குகள் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கும். இப்போது முகத்தில் அசிங்கமாக இருக்கும் குழிகளை மறைக்க உதவும் சில ஃபேஸ் மாஸ்க்குகள் குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. ஓட்ஸ், கடலை மாவு மற்றும் பால்

1. ஓட்ஸ், கடலை மாவு மற்றும் பால்

ஒரு பௌலில் ஓட்ஸ் பொடி மற்றும் கடலை மாவை சரிசம அளவில் எடுத்து, பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் முகத்தை நீரால் நன்கு கழுவி, உலர்த்திய பின், தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை போடுவதால், திறந்த நிலையில் இருக்கும் சருமத் துளைகள் இறுக்கமடைந்து, சருமம் இளமையாக காட்சியளிக்கும்.

2. முட்டை வெள்ளைக்கரு, தேன் மற்றும் எலுமிச்சை சாறு

2. முட்டை வெள்ளைக்கரு, தேன் மற்றும் எலுமிச்சை சாறு

ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவுடன், 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 25-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை அடிக்கடி போடுவதால், சருமத் துளைகள் சுத்தமாவதோடு, இறுக்கமடையும் மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசையின் உற்பத்தியும் குறையும்.

3. காபி தூள், கொக்கோ பவுடர் மற்றும் தயிர்

3. காபி தூள், கொக்கோ பவுடர் மற்றும் தயிர்

ஒரு பௌலில் காபித் தூள் மற்றும் கொக்கோ பவுடரை சரிசம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் தேவையான அளவு தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 25-30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை போட்டு வந்தால், சருமத்தின் நெகிழ்வுத்தன்மை மேம்படும், சருமத் துளைகள் இறுக்கமடையும் மற்றும் சருமம் பளிச்சென்று அழகாக ஜொலிக்கும்.

4. முல்தானி மெட்டி, க்ரீன் டீ மற்றும் எலுமிச்சை சாறு

4. முல்தானி மெட்டி, க்ரீன் டீ மற்றும் எலுமிச்சை சாறு

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் தேவையான அளவு க்ரீன் டீயை சேர்த்து, சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த மாஸ்க் சருமத்துளைகளை இறுக்கமடையச் செய்வதோடு, அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கி, முகத்தை பிரகாசமாக ஜொலிக்க வைக்கும்.

5. தக்காளி ஜூஸ் மற்றும் பேக்கிங் சோடா

5. தக்காளி ஜூஸ் மற்றும் பேக்கிங் சோடா

ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் தேவையான அளவு தக்காளி ஜூஸை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்க் முகத்தில் அசிங்கமாக இருக்கும் குழிகளை மறையச் செய்யும்.

6. அவகேடோ மற்றும் தேன்

6. அவகேடோ மற்றும் தேன்

நன்கு கனிந்த அவகேடோ பழத்தின் தசைப் பகுதியை 2 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு, அதில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்க் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து, சருமத்துளைகளை இறுக்கமடையச் செய்யும்.

7. பப்பாளி, அரிசி மாவு மற்றும் தேன்

7. பப்பாளி, அரிசி மாவு மற்றும் தேன்

நன்கு கனிந்த பப்பாளி பழத்தை மசித்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு மற்றும் தேவையான அளவு தேன் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்க் சருமத் துளைகளை சுருங்கச் செய்வதோடு, அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Homemade Face Masks For Pore Tightening In Tamil

Here are some homemade face masks for pore tightening. Read on to know more...
Story first published: Thursday, October 13, 2022, 19:28 [IST]
Desktop Bottom Promotion