Just In
- 39 min ago
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 வரை இந்த 4 ராசிக்கு பிரச்சனை மேல பிரச்சனை வரும்... கவனமா இருங்க..
- 58 min ago
உங்க முதலாளியிடம் இந்த அறிகுறிகள் இருந்தா... நீங்க ரொம்ப பாக்கியசாலியாம்... ஏன் தெரியுமா?
- 1 hr ago
உங்களிடம் இந்த பழக்கங்கள் இருந்தால் உங்களால் எப்பவும் எடையை குறைக்க முடியாதாம்... உடனே மாத்திக்கோங்க!
- 2 hrs ago
குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய.. மொறுமொறுப்பான ஸ்டப்டு பனானா
Don't Miss
- News
அடிக்கடி குலுங்கும் டெல்லி! நிலநடுக்கம் திடீரென அதிகரிக்க என்ன காரணம்! தமிழ்நாட்டின் உண்மை நிலை என்ன
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. நியூசி,-ன் அதிவேக பவுலரை அசால்ட் செய்த சுப்மன் கில்.. வாயடைத்துப்போன ரோகித்
- Movies
ஆஸ்கர் 2023 பரிந்துரை பட்டியல் LIVE: லகானுக்கு பிறகு மீண்டும் ஆஸ்கர் நாமினேஷனில் இந்திய படம் வருமா?
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Finance
என் இதயமே கனத்து விட்டது.. 8 மாத கர்ப்பிணி பெண் கூகுள் பணி நீக்கம் குறித்து கலக்கம்.. !
- Automobiles
குறைவான விலையில் மைலேஜை வாரி வழங்கும் பைக்! பழைய நண்பன் ஹீரோவின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போட்ட ஹோண்டா!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
உங்க முகத்தை அழகாக காட்டும் புருவ முடியை தட்டையாக வளர வைக்க நீங்க என்ன செய்யணும் தெரியுமா?
உங்கள் புருவங்களில் உள்ள முடி உங்கள் தலையில் உள்ள முடியைப் போலவே செயல்படுகின்றன. ஆம், பொடுகு, தோல் அரிப்பு மற்றும் முடி உதிர்தல் ஆகியவை புருவங்களில் ஏற்படும் பொதுவான பிரச்சனை. உங்கள் புருவங்கள் உங்கள் முக அழகில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏனெனில் அவை நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆம், நீங்கள் எப்போதும் அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தி அவற்றின் தோற்றத்தை மேம்படுத்தலாம். ஆனால் அவற்றை தடிமனாகவும் முழுமையாகவும் காட்ட சில இயற்கை வழிகள் உள்ளன. உங்கள் புருவ முடி உதிர்ந்தாலும் அல்லது இயற்கையாகவே மெல்லிய புருவங்களை பெற்றிருந்தாலும் பரவாயில்லை, இந்த இயற்கை வைத்தியம் எந்த பிரச்சனையையும் குணப்படுத்தும்.
புருவ முடி உதிர்வைத் தடுக்கவும், இயற்கையாகவே அடர்த்தியான புருவங்களைப் பெறவும் உதவும் சில வீட்டு வைத்தியங்களை உங்கள் சமையலறையிலிருந்தே நீங்கள் பெறலாம். புருவ முடி உதிர்தலுக்கான காரணத்தை பற்றியும், அதைத் தடுக்க உதவும் இயற்கை வீட்டு வைத்தியங்கள் பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.

புருவ முடி உதிர்தலுக்கான காரணங்கள்
புருவத்தில் முடி உதிர்தல், மருத்துவ ரீதியாக ஐப்ரோ ஹைப்போட்ரிகோசிஸ் அல்லது புருவ மடாரோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது ஆண் மற்றும் பெண் இருவரையும் பாதிக்கும். இது ஒன்று அல்லது இருபுறமும் பாதிக்கலாம். மற்ற அறிகுறிகள் வறண்ட சருமம், அரிப்பு, முடி உதிர்தல் அல்லது உடலின் மற்ற பகுதிகளில் முடி உதிர்தல் போன்றவை ஏற்படலாம். புருவங்களை குணப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதற்கு முன், அதன் காரணங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். புருவங்களுக்கான மேக்கப் பொருட்களை தொடர்ந்து அதிகமாக பயன்படுத்துவதன் விளைவாக புருவ முடி உதிர்தல் ஏற்படலாம்.
மற்ற காரணங்கள்
முதுமை
அலோபீசியா
ஊட்டச்சத்து குறைபாடுகள்
மன அழுத்தம்
கர்ப்பம் மற்றும் பிரசவம்

கற்றாழை
புருவ முடி தட்டையாக வளருவதற்கு சிறந்த சிகிச்சைகளில் ஒன்று கற்றாழை. சில கற்றாழை இலைகளை நசுக்கி, சாற்றை உங்கள் புருவங்களின் மேல் மெதுவாக மசாஜ் செய்து, அதை ஊற விடவும். இது சருமத்தை குணப்படுத்தவும், புருவ முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது.

ஆமணக்கு எண்ணெய்
ஆமணக்கு எண்ணெயில் ஒரு தனித்துவமான இரசாயன கலவை உள்ளது, இது புருவ முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. சில துளிகள் ஆமணக்கு எண்ணெயைத் தடவி, ஒவ்வொரு புருவத்தையும் சில நிமிடங்கள் மசாஜ் செய்யவும். ஒரு சில நாட்களுக்கு, அவற்றை ஒரு நாளைக்கு ஒரு முறை கழுவி, மீண்டும் ஒரு முறை அவ்வாறு மசாஜ் செய்யவும். ஏதேனும் அரிப்பு அல்லது எரிச்சலை நீங்கள் கண்டால், உடனடியாக இந்த செயல்முறையை நிறுத்துங்கள்.

தேங்காய் மற்றும் எலுமிச்சை
தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை தோல் கலவை உங்கள் புருவங்களை மீண்டும் வளர உதவும் அற்புதங்களைச் செய்கிறது. சிறந்த முடிவுகளுக்கு படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் புருவங்களின் மேல் பருத்திப் பந்தைப் பயன்படுத்தி இந்த கலவையைத் தேய்க்கவும். விரைவில் நல்ல பலன் கொடுக்கும்.

வெங்காயம்
புருவ முடியை வேகமாகவும் அடர்த்தியாகவும் மீண்டும் வளர வெங்காயம் உதவுகிறது. ஒரு வெங்காயத்தை அரைத்து, சாறாக எடுத்துக்கொள்ளவும். பருத்தி உருண்டை உதவியுடன் அந்த சாற்றை தேய்த்து, அதன் அதிகபட்ச நன்மையைப் பெற உங்கள் புருவங்களில் தடவ வேண்டும்.

பால்
புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த பால் மற்றும் பால் பொருட்கள் உங்களுக்கு ஊட்டச்சத்தை வழங்குகின்றன மற்றும் முடி வேர்களை விரைவாக மீண்டும் வளர அனுமதிக்கின்றன. நீங்கள் பருத்தி உருண்டையை பாலில் நனைத்து இரவில் உங்கள் புருவத்தில் தேய்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.

புருவ முடி உதிர்வதைத் தடுக்க உதவும் குறிப்புகள்
புருவங்களில் தடிமனான கிரீம்கள் அல்லது மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அதற்கு பதிலாக புருவத்தின் கீழ் சருமத்தை ஈரப்பதமாக்க சீரம் பயன்படுத்தவும்.
மோசமான தரமான புருவம் மேக்கப் பொருட்களைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
புருவ ஜெல் பயன்படுத்தினால், அதைக் கட்டுப்படுத்தவும்.
அதிகமாக புருவ முடியை அகற்றக்கூடாது
ஆரோக்கியமான உணவை தவறாமல் சாப்பிட வேண்டும்.