For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எண்ணெய் சருமத்தினால் சோர்வடைந்து விடீர்களா உங்களுக்கானத் தீர்வு.

சரும பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. உங்கள் சருமத்தினை நீங்கள் சரியாகப் பராமரிக்காமல் விட்டால் சருமம் விரைவிலேயே வயதான தோற்றத்தினை அடைந்து விடும். கடைகளில் விற்கும் பொருட்களை விட வீட்டில்

|

சரும பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. உங்கள் சருமத்தினை நீங்கள் சரியாகப் பராமரிக்காமல் விட்டால் சருமம் விரைவிலேயே வயதான தோற்றத்தினை அடைந்து விடும். கடைகளில் விற்கும் பொருட்களை விட வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு உங்கள் சருமத்தினை பராமரிக்கும் போது சருமம் இன்னும் பாதுகாப்பாக உணரும். எனவே இதற்கு உங்களின் நேரத்தைச் சற்று செலவழித்து சருமத்தைப் பாதுகாக்க வேண்டும்.

DIY Rice Flour And Green Tea Face Pack For Oily Skin

உங்கள் சருமம் விரைவில் வயதாவதைக் குறைக்கவும் மற்றும் சருமத்தினை ஆரோக்கியமாக வைக்கவும் நீங்கள் சில அழகுக் குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும். இவை கடைகளில் எளிமையாகக் கிடைக்கும் பொருட்களாகும். எண்ணெய் சருமத்தைச் சரி செய்வதில் கிரீன் டீ மிகவும் சிறந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இத்துடன் அரிசிமாவு சேர்த்து எவ்வாறு பேஷ் மாஸ்க் போடலாம் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

இரண்டு தேக்கரண்டியளவு அரிசி மாவு, ஒரு தேக்கரண்டியளவு கிரீன் டீ தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு எடுத்து ஒன்றாகக் கலந்து கலவையாக்கிக் கொள்ளுங்கள். அதனை உங்கள் முகத்தில் அப்ளை செய்யுங்கள். ஆனால் கலவையைக் கண்கள் மற்றும் வாய் பகுதியைச் சுற்றி அப்ளை செய்யாதீர்கள். இந்த கலவையை முகத்தில் 15 நிமிடங்கள் அல்லது கலவை காயும் வரை வைத்து பின்னர் குளிர்ந்த நீரில் அலசுங்கள். இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்யலாம்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு சருமத்தில் எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவும். எலுமிச்சை சாறு முகப்பருவுக்குத் தீர்வளித்து முகத்தில் இருக்கும் வடுக்களைச் சரி செய்யவும் உதவுகிறது. உங்களுக்கு எலுமிச்சை சாறு கிடைக்க விட்டால் தேன் பயன்படுத்தலாம்.

அரிசி மாவு

அரிசி மாவு

அரிசி மாவு சருமத்தில் இருக்கும் எண்ணெய் உறிஞ்சும் பண்புகளைக் கொண்டுள்ளது. எண்ணெய் சருமத்திற்கு ஒரு அற்புதமான எக்ஸ்போலியேட்டராக அரிசி மாவு உதவும். மேலும் முகத்தில் இருக்கும் டனை அகற்றுவதற்கு அரிசி மாவு சிறந்த தீர்வாகும். அரிசி மாவு வைட்டமின் பி இன் மூலமாக இருப்பதால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை ஊக்குவிக்கிறது.

கிரீன் டீ

கிரீன் டீ

கிரீன் டீ ஏராளமான ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சருமம் மற்றும் உடலில் சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

கிரீன் டீயைப் பயன்படுத்துவதன் மூலம் சரும ஆரோக்கியம் மற்றும் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும். ஏனெனில் இது உடலில் உள்ள நச்சுகளை அகற்றுகிறது. ஃபேஸ் பேக்குகளில் கிரீன் டீயை பயன்படுத்தும் போது உங்கள் சருமத்தை ஒளிரச் செய்து பளபளக்கச் செய்கிறது.

கிரீன் டீ சருமத்தில் ஆரோக்கியமான செல்களை உருவாக்குகிறது. இதனால் எளிதில் அல்லது இளம் வயதில் ஏற்படும் வயதான தோற்றத்தினை தடுக்கிறது. கிரீன் டீயில் டானின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளதால் கண்களுக்குக் கீழ் ஏற்படும் கரு வளையங்கள் மற்றும் கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.

கிரீன் டீயில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருவைக் குறைத்து வடுக்களைத் தடுக்கின்றன. கிரீன் டீ பயன்படுத்தி ஃபேஸ் பேக் போடும் போது சருமத்தில் இருக்கும் சிறு சிறு துளைகளைச் சரி செய்கிறது.

ஃபேஸ் பேக்

ஃபேஸ் பேக்

அரிசி மாவு மற்றும் கிரீன் டீ கொண்ட ஃபேஸ்பேக் தயார் செய்யும் போது புதிய அல்லது பயன்படுத்தப்பட்ட கிரீன் டீ பைகள் அல்லது கிரீன் டீ தூள்களைப் பயன்படுத்தலாம்.

நீங்கள் ஃபேஸ் பேக் போடுவதற்கு முன்பு உங்கள் முகங்களை முதலில் நன்றாகக் கழுவிச் சுத்தப்படுத்துங்கள். இது உங்கள் முகத்தில் இருக்கும் துளைகளில் கலவை சேர்வதற்கு உதவும்.

இப்போது கலவையை முகத்தில் அப்ளை செய்து காய்ந்த பிறகு குளிர்ந்த நீரைப் பயன்படுத்திக் கழுவுங்கள்.

க்ரீன் டீ ஃபேஸ் பேக்குகளைப் நீங்கள் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் சருமம் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாகவும், இளமையாகவும், பிரச்சினையில்லாமல் பளபளப்பான சருமமாகவும் இருப்பதற்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

DIY Rice Flour And Green Tea Face Pack For Oily Skin

Skin damage is something that cannot be avoided. If you do not do anything about maintaining your skin's health, then you are just making your skin age quicker than usual. To prevent premature ageing and to ensure healthy skin throughout, you can create face packs with the use of ingredients that are easily available in every household. Talking about ingredients rich in antioxidants, who can forget about the top qualities that green tea possesses.
Story first published: Thursday, October 3, 2019, 18:16 [IST]
Desktop Bottom Promotion