For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களின் அழகை மேம்படுத்த உதவும் சில கற்றாழை ஃபேஸ் பேக்குகள்!

பெண்களை விட ஆண்களின் சருமம் சற்று தடிமனானது. எனவே ஆண்களுக்கு ஃபேஸ் பேக் நல்ல பலனைத் தரும். அதுவும் மருத்துவ குணம் வாய்ந்த கற்றாழையைக் கொண்டு ஃபேஸ் பேக் போடுவது மிகவும் நல்லது.

|

கோடைக்காலத்தில் வெயிலால் சருமம் கடுமையாக பாதிக்கப்படும். குறிப்பாக தினந்தோறும் வெயிலில் வெளியே செல்வோருக்கு சருமம் இன்னும் மோசமாக பாதிக்கப்பட்டு, பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். எனவே மற்ற காலங்களில் சருமத்திற்கு சரியான பராமரிப்புக்களை கொடுக்கிறோமோ இல்லையோ, கோடையில் தவறாமல் சருமத்திற்கு பராமரிப்புக்களை கொடுக்க வேண்டும். சரும பராமரிப்பு என்று வரும் போது, அது பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் பொருந்தும்.

Aloe Vera Face Packs For Men In Tamil

பெண்களைப் போலவே ஆண்களும் எந்நேரமும் சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்க வேண்டும் என்பதில்லை. முகத்திற்கு வெறும் ஃபேஸ் பேக் போட்டு வந்தால் போதுமானது. பெண்களை விட ஆண்களின் சருமம் சற்று தடிமனானது. எனவே ஆண்களுக்கு ஃபேஸ் பேக் நல்ல பலனைத் தரும். அதுவும் மருத்துவ குணம் வாய்ந்த கற்றாழையைக் கொண்டு ஃபேஸ் பேக் போடுவது மிகவும் நல்லது. இப்போது ஆண்களின் அழகை மேம்படுத்த உதவும் சில கற்றாழை ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கற்றாழை மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்

கற்றாழை மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்

பெண்களைப் போலவே ஆண்களின் சரும நிறமும் வெயிலால் கருமையடையும். இப்படி வெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்க கற்றாழை ஜெல்லுடன், சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, கழுத்து மற்றும் முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும்.

கற்றாழை மற்றும் மாம்பழ ஃபேஸ் பேக்

கற்றாழை மற்றும் மாம்பழ ஃபேஸ் பேக்

சருமத்தில் இறந்த செல்கள் அதிகம் இருந்தால் தான் முகம் பொலிவிழந்து இருக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க கற்றாழை ஜெல்லுடன், சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு, பொலிவையும் கொடுக்கும்.

கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்

கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்

கற்றாழை ஜெல்லுடன், சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவினால், சருமத்தின் நிறம் மேம்படுவதோடு, சருமமும் இறுக்கமடையும்.

கற்றாழை மற்றும் தேன் ஃபேஸ் பேக்

கற்றாழை மற்றும் தேன் ஃபேஸ் பேக்

கற்றாழை சரும செல்களைப் புதுப்பிக்க உதவுகிறது மற்றும் இதில் உள்ள பண்புகள் சருமத்தை சுத்தம் செய்து பொலிவாக்குகிறது. இந்த ஃபேஸ் பேக் தயாரிப்பதற்கு, கற்றாழை ஜெல்லுடன், சிறிது தேன் சேர்த்து கலந்து, அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கும்.

கற்றாழை மற்றும் வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்

கற்றாழை மற்றும் வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்

இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை நீக்குவதில் சிறந்தது. இந்த ஃபேஸ் பேக் தயாரிப்பதற்கு வெள்ளரிக்காய் சாற்றுடன் தயிர் மற்றும் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் பேக்குகள் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் பயன்படுத்தலாம். இந்த ஃபேஸ் பேக்குகளை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால், சருமம் நன்கு ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Aloe Vera Face Packs For Men In Tamil

Here are some aloe vera face packs for men. Read on to know more...
Story first published: Thursday, June 23, 2022, 18:40 [IST]
Desktop Bottom Promotion