For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருமையான முகத்தை வெண்மையாக்கும் கடலை..! செய்முறை உள்ளே...

|

கடலை போடுவது நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால், இந்த கடலையை வைத்து எளிதில் வெண்மையான, மென்மையான, அழகான முகத்தை பெற முடியும் என்ற அருமையான தகவல் உங்களுக்கு தெரியுமா..? உண்மைதாங்க, கடலையை வைத்தே நமது முகத்தை பொலிவு பெற செய்ய முடியும்.

கருமையான முகத்தை வெண்மையாக்கும் கடலை..! செய்முறை உள்ளே...

கடலையில் ஏராளமான மகத்துவங்கள் உள்ளன. உடலுக்கு கடலை எந்த அளவிற்கு நல்லதோ, அதே அளவிற்கு இது முகத்திற்கு அழகை வாரி வழங்குகிறது. கடலையை வைத்து முக அழகை பெறுவது எப்படி என்பதை இந்த பதிவில் அறிந்து பயன் பெறுவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அழகு குறைவது ஏன்..?

அழகு குறைவது ஏன்..?

பொதுவாக முக அழகு குறைவதற்கு சில முக்கிய காரணிகள் உள்ளன. சீரற்ற உணவு பழக்கம், வேதி பொருட்கள், பராமரிப்பு இன்மை, அதிக மாசு போன்றவை முகத்தை கெடுக்கின்றன. இது போன்ற நிலையிலும் உங்களின் முகம் அழகாக இருக்க சில இயற்கை ரீதியான குறிப்புகளே போதும்.

கடலையின் மகிமைகள்..!

கடலையின் மகிமைகள்..!

மற்ற உணவு பொருட்களை போன்றே, இந்த கடலைக்கும் பல தனி சிறப்புகள் உண்டு. முக அழகு முதல் இளமையான சருமம் வரை அனைத்தையும் இது தருகிறது. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் சி, ஏ முகத்தின் செல்களை புத்துணர்வூட்டி இளமையாகவும் பொலிவாகவும் வைக்கிறது. மேலும் முக சுருக்கங்கள், கருவளையங்கள், கரும்புள்ளிகள் போன்ற பிரச்சினைக்கும் இது தீர்வை தருகிறது.

வெண்மையான முகத்திற்கு

வெண்மையான முகத்திற்கு

முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, கருமையை போக்குவதற்கு ஒரு எளிய வழி உள்ளது. அதற்கு தேவையானவை...

பால் 2 ஸ்பூன்

கடலை 10

தேன் 1 ஸ்பூன்

செய்முறை :-

செய்முறை :-

கடலையை நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும். அடுத்து இதனுடன் பால் மற்றும் தேன் கலந்து பேஸ்ட் போன்று செய்து கொள்ளவும். இதனை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பான வெண்மையை பெறும்.

MOST READ: சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது நல்லதா..? மீறி குடித்தால் உடலில் என்ன நடக்கும்...?

பருக்கள் அற்ற சருமத்திற்கு

பருக்கள் அற்ற சருமத்திற்கு

முகத்தின் எண்ணெய் பசை தன்மையை குறைத்து விட்டாலே முகத்தில் பருக்கள் வராது. இதனை பெறுவதற்கு ஒரு எளிய வழி உள்ளது.

தேவையானவை :-

தயிர் 1 ஸ்பூன்

தேன் 1 ஸ்பூன்

கடலை 10

செய்முறை :-

செய்முறை :-

முதலில் கடலையை நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும். பிறகு தேன் மற்றும் தயிரை இதனுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்தால் ஈரப்பதமான சருமத்தை பெற்று விடலாம். மேலும், எண்ணெய் பசையும் போக்கி விடலாம்.

மென்மையான முகத்தை பெற

மென்மையான முகத்தை பெற

முகம் மிகவும் புசுபுசுவெனவும், மென்மையாகவும் இருக்க இந்த குறிப்பை பயன்படுத்தி பாருங்கள்.

தேவையானவை :-

கடலை வெண்ணெய்(peanut butter)

எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

பன்னீர் 1 ஸ்பூன்

மஞ்சள் 1/4 ஸ்பூன்

செய்முறை :-

செய்முறை :-

முதலில் கடலை வெண்ணெய்யுடன் மஞ்சள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அடுத்து எலுமிச்சை சாறு மற்றும் பன்னீர் கலந்து கொண்டு முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்து வந்தால் முகம் மிகவும் மென்மையாகவும், புசுபுசுவெனவும் மாறி விடும்.

இது போன்ற புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். இந்த பதிவு உங்களுங்கு பயனுள்ளதாக இருந்தால் பிறருடனும் பகிருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Surprising Beauty Tips Of Peanuts

Here are some beauty tips using peanuts
Story first published: Friday, November 9, 2018, 17:53 [IST]
Desktop Bottom Promotion