Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
பருக்களை சரி செய்ய, கிவி பழத்தை இந்த பழத்தோடு சேர்த்து இப்படி தேய்ச்சாலே போதும்ங்க..!
முகத்தின் அழகை பராமரிப்பது மிக எளிமையான ஒன்றாகும். பலர் இதனை மலையை தூக்குவது போல நினைக்கின்றனர். முக அழகை இயற்கை பொருட்களை கொண்டு அழகு செய்தால், கிடைப்பது நன்மை மட்டுமே.

நிச்சயம் உங்களின் முக பிரச்சினைகள் அனைத்தையும் இது சரி செய்யா கூடிய ஆற்றல் பெற்றது. முகத்தின் அழகை பராமரிப்பதில் பல வழிகள் இருந்தாலும், இந்த கிவி பழம் புதுவித முறையில் உங்களுக்கு உதவுகிறது. எப்படி என்பதை இனி அறிந்து கொள்வோம்.

மகிமை மிக்க கிவி..!
மற்ற பழத்தை காட்டிலும் இந்த கிவி பழத்தில் பல வித நன்மைகள் உள்ளன. இது தனித்துவமான பழமாகவே பார்க்கப்படுகிறது. பல்வேறு மருத்துவ குறிப்புகளையும், அழகியல் ரகசியங்களையும் இந்த கிவி தனக்குள்ளே ஒளித்து வைத்துள்ளது. இவை முக பருக்கள் முதல் முக கருமை வரை அனைத்திற்கும் தீர்வை தருகிறது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கிவி..!
கிவி பழத்தில் ஏராளமான ஊட்டசத்துக்கள் உள்ளன. இவற்றை சாப்பிடுவதால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறதாம். இதில் உள்ள சத்துக்கள் இதோ...
வைட்டமின் சி
வைட்டமின் எ
கால்சியம்
மெக்னீசியம்
பாஸ்பரஸ்
பொட்டாசியம்
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்
வைட்டமின் கே
நீர்சத்து

இளமையான முகத்திற்கு
முகம் பார்ப்பதற்கு மிக இளமையாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு கிவி பழம் உதவும். வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள இந்த கிவி பழம் முகத்தில் தேய்த்தாலோ, சாப்பிட்டாலோ அதிக நலன்கள் கிடைக்கும். மேலும், சருமத்தின் பொலிவையும் பாதுகாத்து முக தோலை இளமையாக வைத்து கொள்ளும்.

பருக்களை ஒழிக்க
முகத்தின் அழகை பராமரிக்க இந்த குறிப்பு நன்கு உதவும். குறிப்பாக பருக்களை அழிக்கவும், இவை வராமல் தடுக்கவும் இந்த முகப்பூச்சு உதவும்.
தேவையானவை :-
கிவி பழம் 1
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

செய்முறை :-
முகத்தின் பருக்களை ஒழிக்க, முதலில் கிவி பழத்தை நன்கு மசித்து கொள்ளவும். பிறகு இவற்றுடன் எலுமிச்சை சாற்றை கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவலாம். இந்த குறிப்பு பருக்களை சரி செய்யவும், இனி பருக்கள் வராமல் தடுக்கவும் உதவும்.

கருவளையங்களை போக்க
உங்களின் கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்களை போக்குவதற்கு இந்த குறிப்பு நன்கு உதவும். மிக சிறந்த குறிப்பாக இது வேலை செய்யும். அதற்கு கிவி பழத்தை ஒரு துண்டு அரிந்து கண்களின் மேல் 15 நிமிடம் வைத்து கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் கருவளையங்களை எளிதில் போக்கி விடலாம்.

சுருக்கங்களை குறைக்க
முகத்தின் சுருக்கங்களை குறைக்க இந்த குறிப்பு நன்கு உதவும். சுருக்கங்கள் நமது முகத்தின் இளமையை முழுமையாக மாறுதல் செய்து விடும். இதனை தடுக்க இவ்வாறு செய்யுங்கள்.
தேவையானவை :-
பாதாம் 8
கடலை மாவு 1 ஸ்பூன்
கிவி பழம் 1

செய்முறை :-
இரவு முழுவதும் ஊற வாய்த்த பாதாமை, கிவி பழத்தோடு நன்கு அரைத்து கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் கடலை மாவை சேர்த்து கொண்டு முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் எளிதில் போய் விடும்.



Click it and Unblock the Notifications
