For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜப்பானியர்கள் இவ்வளவு மொழு மொழுனு இருக்க என்ன காரணம்னு தெரியுமா...?

|

பூமியில் உள்ள ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான குணாதிசயங்களையும் முக அமைப்பையும் பெற்றிருப்போம். இங்குள்ள எல்லோரும் எல்லா விதத்திலும் வேறுபட்டுதான் உள்ளோம். இந்தியாவில் மக்களின் அறிவு திறன், முக அமைப்பு ஒரு விதமாக இருந்தால் மற்ற நாட்டில் உள்ள மக்களின் அறிவு திறனும், முக அமைப்பும் மாறுபட்டு இருக்கும். அந்த வகையில் பல நாட்டு அறிஞர்களும் ஜப்பானியர்களின் மொழு மொழுவான முக அழகிற்கு என்ன காரணம் என்று ஆய்ந்தனர்.

Japanese Beauty Secrets and Skin Care Tips

இதற்கு ஒரு சில முக்கிய காரணம் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த பதிவில் ஜப்பானியர்களின் அழகிற்கான முக்கிய காரணங்களையும் அவர்கள் பயன்படுத்தும் அழகு இரகசியங்களையும் தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண்டங்களின் அமைப்பு..!

கண்டங்களின் அமைப்பு..!

முக அமைப்பானது நாடுகளின் அமைப்பை பொறுத்தே வேறுபடுகிறது. அதாவது, கண்டங்கள் இருக்கும் திசையை வைத்தே இவை நிர்ணயிக்க படுகிறது. இதற்கு காரணம் சூரியன் தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சூரியனின் ஒளி அதிகமாக படும் நாடுகளின் முக அமைப்பு அதிக கருமை நிறமுடன் இருக்கும். மிதமான ஒளி பட்டால் மென்மையான நிறத்தில் மக்கள் இருப்பார்கள்.

ஜப்பானியர்கள் எப்படி..?

ஜப்பானியர்கள் எப்படி..?

ஜப்பானியர்கள் முகம் இயற்கையாகவே பொம்மையை போன்று அழகாக இருக்கும். அத்துடன் அவர்கள் ஒரு சில முக்கிய குறிப்புகளை பயன்படுத்துகின்றனர். இதுவே அவர்களின் மொழு மொழு சருமத்தை தருகிறது. குறிப்பாக அவர்கள் இயற்கை பொருட்களே அதிகம் பயன்படுத்துவார்களாம்.

அரிசியில் முக பூச்சா..?

அரிசியில் முக பூச்சா..?

முகத்தை மென்மையாக வைத்து கொள்ள ஜப்பானியர்கள் ஒரு சில அழகியல் முறையை பின்பற்றுகின்றனர். அதில் முக்கியமானதாக கருதப்படுவது இந்த அரிசி முக பூச்சுதான். இதனை எவ்வாறு செய்யலாம் என்பதை பார்ப்போம்.

தேவையானவை :-

அரிசி 1 கப்

குளிர்ந்த நீர் 2 கப்

செய்முறை :-

செய்முறை :-

இந்த அழகியல் குறிப்பை செய்ய முதலில் குளிர்ந்த நீரில் அரிசியை 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அடுத்து அரிசியை தனியாக வைத்து கொள்ள வேண்டும். வடிக்கட்டிய நீரை மட்டும் சருமத்தில் பஞ்சை கொண்டு பூசி மசாஜ் செய்யவும். அடுத்து அந்த அரிசியை அரைத்து கொண்டு முகத்தில் தடவவும். இவ்வாறு செய்து வந்தால், பிறந்த குழந்தையை போல சருமம் மாறுமாம்.

MOST READ: உங்கள் முடி உங்களை பற்றி சொல்கின்ற சுவாரசிய தகவல்களை பற்றி பார்ப்போமா..?

இளமையான ஜப்பானிய முகம்..!

இளமையான ஜப்பானிய முகம்..!

ஜப்பானியர்கள் நீண்ட காலம் முகத்தை இளமையாக வைத்து கொள்ள இந்த அழகியல் குறிப்பை தான் பயன்படுத்துவதாக கூறுகின்றனர். இது முகத்தின் செல்களை புத்துணர்வூட்டி பொலிவு பெற செய்யுமாம்.

தேவையானவை :-

ஆர்கானிக் அரிசி 3 டீஸ்பூன்

அவகடோ பழ சாறு 2 ஸ்பூன்

தேன் 1 ஸ்பூன்

செய்முறை :-

செய்முறை :-

முதலில் அரிசியை வேக வைத்து கொள்ள வேண்டும். அடுத்து இந்த அரிசியை மசித்து கொள்ளவும். பிறகு இவற்றுடன் அவகடோ பழ சாறு, தேன் சேர்த்து நன்கு கலந்து கொண்டு முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடம் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், முகம் நீண்ட காலம் இளமையாக இருக்குமாம்.

வெண்மையான முகத்திற்கு...

வெண்மையான முகத்திற்கு...

முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி விட்டாலே முகம் வெண்மையாக மாறும். ஜப்பானியர்களின் முகம் மிகவும் வெண்மையாக இருக்க இந்த முக பூச்சு தான் காரணம். இந்த எளிய முறையை செய்ய...

தேவையானவை :-

கிரீன் டீ 1 கப்

தேன் 1 டீஸ்பூன்

அரிசி மாவு 1 ஸ்பூன்

செய்முறை :-

செய்முறை :-

முதலில் கிரீன் டீயில் தேனை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அடுத்து இவற்றுடன் அரிசி மாவை சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொண்டு முகத்தில் பூசி கொள்ளவும். 15 நிமிடம் கழித்து மிதமான நீரில் முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, வெண்மை பெறும்.

MOST READ: ஆண்கள் தாம்பத்தியத்தில் நீண்ட நேரம் நீடித்து இருக்க இவற்றை சாப்பிட்டாலே போதும்..!

முகப்பருக்கள் அற்ற ஜப்பானியர்கள்..!

முகப்பருக்கள் அற்ற ஜப்பானியர்கள்..!

முகத்தின் முழு அழகையும் கெடுப்பது இந்த பருக்கள் தான். இதற்காக நாம் பல வித கிரீம்களை பயன்படுத்தி நம் நேரத்தை வீணாக்கி இருப்போம். இனி இந்த ஜப்பானிய முறையை பயன்படுத்தி பாருங்கள் நண்பர்களே.

தேவையானவை :-

ஆர்கானிக் அரிசி 3 ஸ்பூன்

பால் 1 ஸ்பூன்

தேன் 1 ஸ்பூன்

செய்முறை :-

செய்முறை :-

முகப்பருக்களை முற்றிலுமாக நீங்க முதலில் அரிசியை வேக வைத்து கொள்ள வேண்டும். பிறகு நீரை மட்டும் தனியாக வடித்து கொள்ள வேண்டும். அடுத்து, வேக வைத்த அரிசியை மசித்து கொண்டு, அவற்றுடன் பால் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து நீரில் அலசினால் முகபருக்கள் காணாமல் போய்விடும்.

இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முக ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Japanese Beauty Secrets and Skin Care Tips

This article is about the beauty of Japanese and the tips, they use to get pretty face.
Desktop Bottom Promotion