For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

‘சோப்பு வைக்கும் ஆப்பு’ இன்னதென்றே தெரியாமல் பயன்படுத்திவரும் நாம்! எப்பொழுது விழிப்படைவோம்?!

நம் முன்னோர்கள் இந்த சோப்பு, ஷாம்பு, மாஸ்டரைசர், அது இதுனு எந்த விஷயத்தையும் பயன்படுத்தாமல், வாழ்வின் அடிப்படை தத்துவத்தை புரிந்து, ஆடம்பரம் மற்றும் அவசியமற்றதை அறிந்து வாழ்ந்தார்கள்! இந்த பதிப்பில் ந

|

குளிப்பதை பற்றி யோசித்தாலே நம் நினைவிற்கு வருவது, நுரை ததும்பும் சோப்பும் அதன் வாசமுமே. முந்தைய காலத்தில், நமக்கு மூத்தவர்களான முன்னோர்கள், அறியாத, உபயோகிக்காத விஷயங்கள் இந்த சோப்பு மற்றும் ஷாம்பூ போன்றவை. இந்த வரியை படிக்கும் போது, 'அப்போ முன்னாடி காலத்துல என்ன யூஸ் பண்ணி குளிச்சாங்க?' என்ற சந்தேகம் உங்கள் மனதில் எழுகிறதா?

Is it necessary to use shampoo and soap in the bath in tamil

ஆமாங்க! நம் முன்னோர்கள் இந்த சோப்பு, ஷாம்பு, மாஸ்டரைசர், அது இதுனு எந்த விஷயத்தையும் பயன்படுத்தாமல், வாழ்வின் அடிப்படை தத்துவத்தை புரிந்து, ஆடம்பரம் மற்றும் அவசியமற்றதை அறிந்து வாழ்ந்தார்கள்! இந்த பதிப்பில் நாம் தினந்தோறும், உடலை சுத்தப்படுத்த பயன்படுத்தும் சோப்பு குறித்து விரிவாக படித்தறிந்து, உண்மை நிலையை அறிய முயல்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குளிப்பது எதற்காக?

குளிப்பது எதற்காக?

முதலில் எதற்கு தினந்தோறும் குளிக்கிறோம் என்று யோசித்து பாருங்கள். இதற்கு உடலின் அழுக்குகளை போக்க என்று பதிலளித்தால், உங்கள் உடலின் உண்மையான நிலையை கூட அறியாத நபர் என்றே பொருள். இந்த பதிப்பின் மூலமாக குளிப்பதன் சரியான அர்த்தத்தை அறிவோம் வாருங்கள்!

குளிப்பது என்பது உடலின் அழுக்குகளை வெளியேற்ற என்பதை விட, உடலில் உருவாகி இருக்கும் சூட்டை வெளியேற்றி உடலை சமநிலையில் வைக்கவே தினமும் குளிக்கிறோம். குளிப்பதால், உடல் புத்துணர்வு அடைகிறது; உடலிலுள்ள சூடு குறைந்து குளிர்ச்சியான அலைகள் உடலில் பரவி உடலின் சரியான வெப்பநிலை நிலைநிறுத்தப்படுகிறது.

சோப்பு அவசியமா?

சோப்பு அவசியமா?

வெப்பத்தை வெளியேற்ற தான் குளிக்கிறோம் என்றால், அதற்கு சோப்பு அவசியமா? என்று வினவினால், சோப்பு என்ற ஒன்றே தேவையில்லை என்று தான் பதில் கூற வேண்டும். நமது முன்னோர்கள் குளிக்கும் போது, வெறும் நீரை மட்டுமே பயன்படுத்தி குளித்தனர்; உடலில் அதிக அழுக்குகள் இருப்பதாய் தோன்றினால், மண், தேங்காய் நார் போன்றவற்றை பயன்படுத்தி தேய்த்துக் குளித்து ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர்.

அந்தக்காலத்து பெண்களோ உடலை குளிர்ச்சியாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள கடலை மாவு, மஞ்சள், அரிசி மாவு போன்றவற்றை உடலுக்கு தேய்த்துக் குளித்தனர். மேலும் தலைக்கு செம்பருத்தி பூ, வெந்தயம், சிகைக்காய் போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி, சோப்பு மற்றும் ஷாம்பூ என்றால் என்ன என்று தெரியாமலே ஆரோக்கியமாக மற்றும் அழகாக இளமையுடன் நீடுழி வாழ்ந்து வந்தனர்.

தடம் புரண்டது எங்கே?

தடம் புரண்டது எங்கே?

அந்நியர் ஆட்சி செய்த காலத்தில், இந்த அந்நிய பொருட்கள் நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டன; இப்படி ஆரோக்கிய வாழ்வு மேற்கொண்டு வாழ்ந்து வளர்ந்த நாம், இந்த பொருட்களின் அறிமுகத்தால் கொஞ்சம் கொஞ்சமாக மாறத்தொடங்கி, தற்காலத்தில் நவநாகரிக மனிதர்களாய் அனைத்து விதமான வேதிப்பொருட்களை பயன்படுத்தும் கார்ப்பரேட் பயனாளியாய் மாறியுள்ளோம். இது மிகவும் பெருமைப்பட வேண்டிய விஷயம் அல்லவா நண்பர்களே?

இவ்வாறு தடம் புரண்டு நமது வாழ்க்கை ஓடத் தொடங்கி விட்டது; முன்னோர்களின் வாழ்க்கை முறை மற்றும் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் என அனைத்தையும் மறந்து, இந்த நவீன சாதனங்களை, நவீன முறைகளை பயன்படுத்த தொடங்கி விட்டோம்.

எப்படி குளிக்க வேண்டும்?

எப்படி குளிக்க வேண்டும்?

குளிப்பது என்பது உடல் முழுதும் தண்ணீரை ஊற்றி, நுரைக்க சோப்பு தேய்த்து, மீண்டும் அந்த சோப்பை நீக்க உடலில் மேலும் தண்ணீரை ஊற்றி துடைத்துவிட்டு வருவதல்ல. குளிப்பது என்பது உடல் சூட்டை வெளியேற்ற என்று படித்தறிந்தோம். உடலின் சூடு திறந்த பக்கங்கள் வழியாக தான் வெளியேற இயலும்; உடலில் திறந்த பாகங்கள் என்பது கண், காது, மூக்கு, வாய் போன்றவையே ஆகும்.

எனவே, உச்சி முதல் பாதம் வரையிலான சூட்டை வெளியேற்ற, முதலில் நீரை பாதங்களில் ஊற்றி, பின் முழங்கால், தொடைகள், வயிறு, மார்பு, முகம் என படிப்படியாக நீரை ஊற்றி உடலில் இருக்கும் ஒட்டுமொத்த சூடும் முழுவதுமாக வெளியேற வழிவகை செய்யுங்கள்.

ஆனால், எல்லாவற்றுக்கும் முன்னதாக சில துளி நீரை தலையில் தெளித்த பின் பாதத்தில் தண்ணீரை ஊற்ற வேண்டும்; ஏனெனில் பாதத்திலிருந்து வெளியேறும் சூடு தலையில் இருக்கும் மூளையை பாதித்து விடாமல் இருக்கவே, இவ்வாறு தண்ணீரை தலையில் தெளிப்பது. குளத்தில் குளிக்கும் போது அல்லது சுவிம்மிங் குளத்தில் குளிக்கும் போது தலையில் தண்ணீர் தெளித்த பின்னரே உள்ளிறங்க வேண்டும்.

சோப்பு வைக்கும் ஆப்பு!

சோப்பு வைக்கும் ஆப்பு!

சோப்பினை சருமத்திற்கு தேய்த்து குளிப்பது, உடல் அழுக்குகளை நீக்கும்; உடலுக்கு நல்ல நறுமணத்தை தரும் என்று நாம் ஆழமாக நம்ப வைக்கப்பட்டு உள்ளோம். ஆனால், உண்மையில் சோப்பினை பயன்படுத்துவதால், சருமம் அதிகம் வறண்டு போய் விடுகிறது; சருமத்தின் செல்கள் இறந்து அல்லது விரைவில் முதுமையை அடைவதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், முதுமையான தோற்றம் இளமையிலேயே ஏற்படுகிறது.

இதை மறைக்க பற்பல கிரீம்கள், ஷாம்பூ, லோஷன்கள் போன்றவற்றை நாம் பயன்படுத்தியாக வேண்டும். அந்தக் கட்டாயத்திற்கு நம்மை நம் உடலின் அழகு நிலை தள்ளி விடுகிறது; இதை படித்த பின் நம்மை சுற்றி என்ன நடக்கிறது; நாம் நமது பாரம்பரியத்தை விட்டு எப்படி பிரித்து செல்லப்படுகிறோம்; எப்படி அனைத்துவித சரும பராமரிப்பு பொருட்களையும் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம் போன்ற விஷயங்கள் உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

மாற்றுவழி தான் என்ன?

மாற்றுவழி தான் என்ன?

இப்படி ஏமாற்றப்பட்டு, ஆரோக்கிய நலம் இழந்து வரும் நம் அவல நிலைக்கு தீர்வு என்ன என்று யோசித்துப் பார்த்தால், நம் முன்னோரின் வழியை பின்பற்றுவதே சிறந்தது. அதாவது உடல் அழுக்கை மற்றும் சூட்டினை போக்க, கடலை மற்றும் மாவுகள், மஞ்சள், போன்றவற்றை உபயோகிக்கலாம். தலைக்கு சீகைக்காய், செம்பருத்தி இலைகள், வெந்தயம் போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் அழகை அதிகரிக்க பராமரிக்க, பாரம்பரிய அழகு குறிப்புகளை பின்பற்றலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is it necessary to use shampoo and soap in the bath in tamil

Is it necessary to use shampoo and soap in the bath in tamil
Story first published: Thursday, July 26, 2018, 16:07 [IST]
Desktop Bottom Promotion