கடலை மாவை இப்படி யூஸ் பண்ணுனா சீக்கிரம் வெள்ளையாகலாம்?

Posted By:
Subscribe to Boldsky

காலங்காலமாக சரும அழகை மெருகேற்றப் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு அழகுப் பொருள் தான் கடலை மாவு. இது அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்ற ஒரு அற்புதமான பொருள். இதில் சருமத்திற்கு ஊட்டம் அளிக்கும் பண்புகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.

Incredible Besan Face Masks For Different Skin Types

அதனால் தான் அக்காலத்தில் பெண்கள் கடலை மாவைப் பயன்படுத்தி குளித்து வந்தார்கள். கடலை மாவு அனைத்து வகையான சரும பிரச்சனைகளையும் போக்கும். அதில் வெயிலால் கருமையான சருமம், முகப்பரு அல்லது பொலிவற்ற முகம் போன்ற எந்த பிரச்சனையானாலும் கடலை மாவைப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.

உங்களுக்கு இயற்கை வழியில் சரும அழகை அதிகரிக்க வேண்டுமானால், கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு கடலை மாவைப் பயன்படுத்துங்கள். அதிலும் கீழே எந்த வகையான சருமத்தினர் எப்படி கடலை மாவைப் பயன்படுத்துவது நல்லது எனவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்துப் பின்பற்றி அழகை மெருகேற்றிக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காம்பினேஷன் சருமம்

காம்பினேஷன் சருமம்

தேவையான பொருட்கள்:

* கடலை மாவு - 1/2 டீஸ்பூன்

* ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன்

* எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* ஒரு பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து பின் நீரில் கழுவுங்கள்.

* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால், சருமம் ஆரோக்கியமாகவும் பிரச்சனைகளின்றியும் இருக்கும்.

முகப்பரு சருமம்

முகப்பரு சருமம்

தேவையான பொருட்கள்:

* கடலை மாவு - 1 டீஸ்பூன்

* க்ரீன் டீ - 2 டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* ஒரு பௌலில் கடலை மாவு மற்றும் க்ரீன் டீ சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

* இப்படி வாரந்தோறும் செய்து வந்தால், முகப்பருக்கள் வருவது தடுக்கப்பட்டு, சருமம் பிரகாசமாகவும் காட்சியளிக்கும்.

வறட்சியான சருமம்

வறட்சியான சருமம்

தேவையான பொருட்கள்:

* கடலை மாவு - 1/2 டீஸ்பூன்

* கற்றாழை ஜெல் - 1 டேபிள் ஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* கடலை மாவை கற்றாழை ஜெல் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் நன்கு காய வைத்து, நீரில் கழுவுங்கள்.

* இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், சருமம் வறட்சியடையாமல் ஈரப்பசையுடன் இருக்கும்.

சென்சிடிவ் சருமம்

சென்சிடிவ் சருமம்

தேவையான பொருட்கள்:

* கடலை மாவு - 1 டீஸ்பூன்

* ரோஸ் வாட்டர் - 1 டேபிள் ஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* ஒரு பௌலில் கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எண்ணெய் பசை சருமம்

எண்ணெய் பசை சருமம்

தேவையான பொருட்கள்:

* கடலை மாவு - 1 டீஸ்பூன்

* சீமைச்சாமந்தி டீ - 2-3 டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* கடலை மாவை சீமைச்சாமந்தி டீ சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

* இந்த மாஸ்க்கை வாரம் ஒருமுறை பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.

சாதாரண சருமம்

சாதாரண சருமம்

தேவையான பொருட்கள்:

* கடலை மாவு - 1/2 டீஸ்பூன்

* முல்தானி மெட்டி - 1 டீஸ்பூன்

* பாதாம் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* ஒரு பௌலில் அனைத்து பொருட்களையும் போட்டு பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

* இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்தால், சருமம் அழகாகவும் கருமை நீங்கியும் காணப்படும்.

கருமையான சருமம்

கருமையான சருமம்

தேவையான பொருட்கள்:

* கடலை மாவு - 1 டீஸ்பூன்

* பப்பாளி கூழ் - 1 டேபிள் ஸ்பூன்

* எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* ஒரு சிறிய கிண்ணத்தில் அனைத்து பொருட்களையும் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.

* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், சரும கருமை நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.

பொலிவிழந்த சருமம்

பொலிவிழந்த சருமம்

தேவையான பொருட்கள்:

* கடலை மாவு - 1 டீஸ்பூன்

* தேன் - 1 டேபிள் ஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* ஒரு பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், சரும பொலிவு மேம்பட்டு, சருமம் புத்துணர்ச்சியுடனும், பிரகாசமாகவும் காணப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Incredible Besan Face Masks For Different Skin Types

Besan is that type of natural ingredient which can do wonders on your skin. The best result of besan is obtained when it is mixed with other ingredients such as olive oil, lemon oil, etc. Start using these face packs and look gorgeous forever.
Story first published: Saturday, January 6, 2018, 14:30 [IST]