For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகத்தில் கருமையாகவும் திட்டுதிட்டாகவும் இருக்கிறதா..? அப்போ இதை செய்து பாருங்க...

|

முகம் பார்ப்பதற்கு ஒரு சீராக இருந்தால் அழகாக இருக்கும். ஆனால் பருக்களும், கருப்பாக திட்டுத்திட்டாக இருத்தலும், கரும்புள்ளிகளும், முக அழகை முற்றிலுமாக கெடுத்து விடும். குறிப்பாக இந்த கருந்திட்டுகள் முக அழகை முழுமையாக கெடுக்கிறது.

முகத்தில் கருமையாகவும் திட்டுதிட்டாகவும் இருகிறதா..? அப்போ இதை செய்து பாருங்க...

இதனை சரி செய்ய கண்ட கிரீம்களை நாம் முகத்தில் தடவ வேண்டியதில்லை. மாறாக ஒரு சில இயற்கை முறைகளை கடைபிடித்தாலே போதும். அதுவும் வீட்டிலிருந்த பொருட்களை வைத்தே நாம் இந்த கருமையான திட்டுகளை சரி செய்து விடலாம். எப்படி என்பதை இனி அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருமையான திட்டுக்களா..?

கருமையான திட்டுக்களா..?

முகத்தின் அழகை இந்த கருந்திட்டுகள் கெடுகிறதா..? இது வருவதற்கு பல காரணிகள் உள்ளன. குறிப்பாக முகத்தில் கண்ட வேதி பொருட்களை தடவுதல், ஊட்டசத்து குறைபாடு, வெயிலில் அதிகமாக இருத்தல் போன்றவற்றால் ஏற்படுகிறது எனலாம். இதை சரி செய்ய வழிகள் இதோ...

உருளை கிழங்கு போதுமே..!

உருளை கிழங்கு போதுமே..!

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், கருமையான திட்டுகளை எளிதில் போக்குவதற்கு இந்த குறிப்பு உங்களுக்கு நன்கு உதவும். இதற்கு தேவையானவை...

தேன் 1 ஸ்பூன்

உருளைக்கிழங்கு சிறிது 1

எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

மஞ்சள் சிறிது

பன்னீர் சிறு துளி

செய்முறை :-

செய்முறை :-

முதலில் உருளைக்கிழங்கை தோல் உரித்து அரைத்து கொள்ளவும். அடுத்து இதன் சாற்றை மட்டும் எடுத்து கொண்டு, இதனுடன் எலுமிச்சை சாறு, பன்னீர், மஞ்சள் மற்றும் தேன் சேர்த்து கலக்கி கொள்ளவும். இதனை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் கருந்திட்டுகள் நீங்கி முகம் பொலிவாக மாறி விடும்.

உடனடி நிவாரணம்...

உடனடி நிவாரணம்...

இந்த முறையை பயன்படுத்தினால் உடனடியாக இந்த கருந்திட்டுக்களை போக்கி விடலாம். வாரத்திற்கு ஒரு முறை இந்த குறிப்பை செய்து வரலாம்.

தேவையானவை :-

பால் 1 ஸ்பூன்

தேன் 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

பாதாம் எண்ணெய் 1/2 ஸ்பூன்

MOST READ: தினமும் 10 கடலை சாப்பிட்டால், நீண்ட ஆயுளுடன் இருக்கலாமாம்..! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!

செய்முறை :-

செய்முறை :-

முதலில் பாலுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளவும். பிறகு பாதாம் எண்ணெய்யையும் கலந்து முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். பிறகு முகத்தை 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு செய்து வந்தாலே உங்களின் முகம் வெண்மை பெறும்.

பழவகை முறை

பழவகை முறை

முகத்தில் பழங்களை தடவினால் எல்லா வித பதிப்புகளில் இருந்தும் தப்பித்து கொள்ளலாம். குறிப்பாக இந்த கருந்திட்டுக்களை குணப்படுத்த இந்த குறிப்பு உங்களுக்கு உதவும்.

தேவையானவை :-

ஆரஞ்சு பழ சாறு 1 ஸ்பூன்

தக்காளி சாறு 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

யோகர்ட் 1 ஸ்பூன்

செய்முறை :-

செய்முறை :-

முதலில் தக்காளியை அரைத்து கொண்டு சாற்றை தனியாக எடுத்து கொள்ளவும். இந்த சாற்றுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து முகத்தில் தடவினால் கருமையான திட்டுகள் நீங்கி விடும். அல்லது யோகர்டுடன் ஆரஞ்சு சாற்றை சேர்த்து முகத்தில் தடவினாலும் இந்த திட்டுகள் குணமாகி விடும்.

சிவப்பு வெங்காயம்

சிவப்பு வெங்காயம்

கரும்புள்ளிகள் மற்றும் கருமையான திட்டுகளை எளிதில் போக்குவதற்கு ஒரு அருமையான வழி இந்த சிவப்பு வெங்காயம் தான். 1 சிவப்பு வெங்காயம் எடுத்து கொண்டு அதனை அரிந்து, அரைத்து கொள்ளவும். இதன் சாற்றை மட்டும் முகத்தில் தடவினால் விரைவிலே கருந்திட்டுகள் காணாமல் போய் விடும்.

MOST READ: எந்தெந்த நேரங்களில் நீங்கள் கட்டாயம் தண்ணீர் குடிக்க கூடாது..? மீறி குடித்தால் என்ன நடக்கும்..?

ஓட்ஸ் வைத்தியம்

ஓட்ஸ் வைத்தியம்

விரைவிலே உங்களின் முக அழகை திருப்பி தருவதில் இந்த குறிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு தேவையானவை...

ஓட்ஸ் 2 ஸ்பூன்

தேன் 1 ஸ்பூன்

பால் 1 ஸ்பூன்

செய்முறை :-

செய்முறை :-

முதலில் ஓட்ஸை நன்றாக அரைத்து கொள்ளவும். அடுத்து அதனுடன் பால் மற்றும் தேன் சேர்த்து கலந்து கொண்டு முகத்தில் தடவவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், கருந்திட்டுகள் மறைந்து விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to remove dark patches on the face naturally

Here are some natural tips to remove dark patches on face.
Desktop Bottom Promotion