For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வறட்சியால் கைகளில் அடிக்கடி தோல் உரிகிறதா? அதைத் தடுக்க இதோ சில டிப்ஸ்...

இங்கு கைகளில் தோல் உரியும் பிரச்சனையை சரிசெய்ய உதவும் சில நேச்சுரல் ஸ்கரப்களை எப்படி தயாரித்துப் பயன்படுத்துவது என கொடுக்கப்பட்டுள்ளது.

|

அதிகமாக வெயிலில் சுற்றும் போதும், சருமத்தில் இறந்த செல்கள் தேங்கும் போதும், சருமத்தில் அழுக்குகள், நச்சுக்கள் சேரும் போதும், வறட்சி அதிகமாக இருக்கும் போதும், அளவுக்கு அதிகமாக சோப்பால் சருமத்தைக் கழுவும் போது, சருமத்தின் மேல் அடுக்கு கடுமையாக பாதிக்கப்படும். இதன் விளைவாக தோல் உரிந்து அசிங்கமாக காட்சியளிக்கும்.

Homemade Scrubs To Get Rid Of Peeling Skin

பெரும்பாலும் சருமத் தோல் கோடை மற்றும் குளிர் காலங்களில் தான் அதிகம் இப்பிரச்சனையை சந்திக்க நேரிடும். அதிலும் கைகளில் தான் அதிகமாக தோல் உரியும். சிலருக்கு கன்னங்களில் உரியும். இந்த பிரச்சனைக்கு இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சில ஸ்கரப்களைக் கொண்டு தீர்வு காணலாம்.

அதிலும் நம் வீட்டுச் சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டே கைகளுக்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், தோல் உரித்து முதுமைத் தோற்றத்தைத் தரும் கைகளை அழகாகவும், பட்டுப் போன்றும் மாற்றலாம். சரி, இப்போது கைகளில் தோல் உரியும் பிரச்சனையை சரிசெய்ய உதவும் சில நேச்சுரல் ஸ்கரப்களை எப்படி தயாரித்துப் பயன்படுத்துவது என்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல் உப்பு + பாதாம் பவுடர் + கற்றாழை ஜெல்

கல் உப்பு + பாதாம் பவுடர் + கற்றாழை ஜெல்

* ஒரு பௌலில் 2 டீஸ்பூன் கல் உப்பு, 1 டீஸ்பூன் பாதாம் பவுடர் மற்றும் 2-3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை கைகளில் தடவி, 5-10 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும்.

* பின்பு வெதுவெதுப்பான நீரால் கைகளைக் கழுவியதைத் தொடர்ந்து, தவறாமல் மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.

சர்க்கரை + தேங்காய் எண்ணெய் + ஜொஜோபா ஆயில்

சர்க்கரை + தேங்காய் எண்ணெய் + ஜொஜோபா ஆயில்

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை, 4-5 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1/2 டீஸ்பூன் ஜொஜோபா ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு இந்த கலவையை கைகளில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

* பின் கைகள் வறட்சியடையாமல் இருக்க மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும்.

ஓட்ஸ் + சீமைச்சாமந்தி டீ

ஓட்ஸ் + சீமைச்சாமந்தி டீ

* ஒரு பௌலில் 2 டீஸ்பூன் வேக வைத்த ஓட்ஸ் பவுடர் மற்றும் 4 டீஸ்பூன் சீமைச்சாமந்தி டீ சேர்த்து கலந்து, கைகளில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்ய வேண்டும்.

* பின்பு வெதுவெதுப்பான நீரால் கைகளைக் கழுவி, துணியால் கைகளைத் துடைத்து, மாய்ஸ்சுரைசர் அல்லது க்

கொக்கோ வெண்ணெய்

கொக்கோ வெண்ணெய்

* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கொக்கோ வெண்ணெய், 2 டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் 3-4 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதை நன்கு கலந்து, கைகளில் தடவி மென்மையாக சிறிது நேரம் தேய்க்க வேண்டும்.

* அடுத்து வெதுவெதுப்பான நீரால் கைகளைக் கழுவ வேண்டும்.

நாட்டுச் சர்க்கரை

நாட்டுச் சர்க்கரை

* 2 டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரை மற்றும் 4 டீஸ்பூன் க்ரீன் டீயை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

* பின் இந்த கலவையை இரண்டு கைகளிலும் தடவி, சிறிது நேரம் ஸ்கரப் செய்ய வேண்டும்.

* பின்பு சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கைகளைக் கழுவுங்கள்.

* இந்த செயலை செய்த பின், மாய்ஸ்சுரைசரைத் தடவுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

ஷியா வெண்ணெய், ஆலிவ் ஆயில், கடலை மாவு

ஷியா வெண்ணெய், ஆலிவ் ஆயில், கடலை மாவு

* ஒரு பௌலில் ஷியா வெண்ணெய், 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1/2 டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை கைகளில் தடவி, சிறிது நேரம் ஸ்கரப் செய்ய வேண்டும்.

* பின்பு வெதுவெதுப்பான நீரால் கைகளைக் கழுவி, க்ளின்சர் பயன்படுத்துங்

கடலை மாவு , பாதாம் எண்ணெய் , ரோஸ்மேரி ஆயில்

கடலை மாவு , பாதாம் எண்ணெய் , ரோஸ்மேரி ஆயில்

* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் கடலை மாவு, 2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 4- துளிகள் ரோஸ்மேரி ஆயில் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* பின் தோல் உரிந்து அசிங்கமாக காணப்படும் கைகளில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் நீரில் கழுவுங்கள்.

* இச்செயலால் கைகளில் உள்ள வறட்சி நீங்கி, கைகள் பட்டுப் போன்று இருக்கும்.

காபி தூள் , தேன்

காபி தூள் , தேன்

* ஒரு பௌலில் 2 டீஸ்பூன் காபி தூள் மற்றும் 2-3 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை கைகளில் தடவி, 5-10 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும்.

* பின்பு வெதுவெதுப்பான நீரால் கைகளைக் கழுவ வேண்டும்.

* அதன் பின் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தி, கைகளை லேசாக மசாஜ் செய்யுங்கள். இதனால் கைகள் மென்மையாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Homemade Scrubs To Get Rid Of Peeling Skin

Due to excessive washing of hands or exposure to harmful UV radiations, the upper layer of the skin tends to become rough and, at times, the skin tends to peel off. Home remedies such as sea salt, coconut oil, jojobo oil, etc., help to reduce the roughness of the skin and keeps it soft and supple.
Desktop Bottom Promotion