For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகப்பரு மற்றும் கருமையைப் போக்க, தக்காளியை இப்படி யூஸ் பண்ணுங்க...

|

தினந்தோறும் நாம் குறிப்பிட்ட சில சரும பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். இந்த சரும பிரச்சனைகளுக்கு தீர்வு காண இயற்கை வழிகளைத் தேடுவோம். உங்களுக்கு அதிக செலவு இல்லாமல் வீட்டு சமையலறையில் உள்ள பொருளைக் கொண்டே சரும பிரச்சனைகளுக்குத் தீர்வு காண நினைத்தால், தற்போது விலைக் குறைவில் கிடைக்கும் தக்காளி கொண்டு ஃபேஸ் பேக் போடுங்கள்.

Get A Glowing Skin With These Tomato-based Face Packs

தக்காளியில் சரும செல்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் ஏராளமாக உள்ளது. மேலும் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், சருமத்தில் வரும் பருக்களைப் போக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதோடு தக்காளியில் உள்ள வைட்டமின் டி சருமத்தில் கொலாஜென் உற்பத்தியை அதிகரித்து, நெகிழ்வுத்தன்மையைத் தக்க வைக்க உதவும். வயதான தோற்றத்தைக் கொடுக்கும் முதுமைக் கோடுகள், சுருக்கங்கள் போன்றவற்றையும் தக்காளிப் போக்கும்.

இந்த கட்டுரையில் சரும பிரச்சனைகளைப் போக்க தக்காளியை எப்படி பயன்படுத்துவது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி சருமத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், நீங்கள் சந்திக்கும் சரும பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிம்பிளைப் போக்க...

பிம்பிளைப் போக்க...

பிம்பிள், பருக்கள் போன்றவற்றால் அதிகம் கஷ்டப்படுபவர்களுக்கு, இந்த தக்காளி ஃபேஸ் பேக் ஒரு நல்ல தீர்வை வழங்கும். அதாவது இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், இப்பிரச்சனையைக் குறைக்கலாம்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* தக்காளி - 1

* தேன் - 1 டீஸ்பூன்

* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது?

தக்காளியை துண்டுகளாக்கி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து, முகம் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

சரும பொலிவை அதிகரிக்க...

சரும பொலிவை அதிகரிக்க...

தக்காளியில் உள்ள வைட்டமின்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளித்து, சருமத்தைப் பொலிவாக வைத்துக் கொள்ள உதவும். மேலும் தக்காளி சருமத்திற்கு உடனடியாக புத்துயிர் அளித்து, ஒரே பயன்பாட்டில் ஒரு நல்ல மாற்றத்தைக் காட்டும்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* தக்காளி - 1

* தண்ணீர் - 1 கப்

எப்படி பயன்படுத்துவது?

தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டி, நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகம், கை, கால்களில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வையுங்கள். 15 நிமிடம் ஆனதும், நீரால் கழுவுங்கள். இப்படி ஒருமுறை செய்தாலே ஒரு நல்ல மாற்றத்தை உங்கள் சருமத்தில் காணலாம்.

சரும கருமையைப் போக்க...

சரும கருமையைப் போக்க...

வெயிலில் அதிகம் சுற்றி சருமத்தில் உண்டான கருமையைப் போக்க வேண்டுமா? அப்படியானால் இந்த ஃபேஸ் பேக் ஒரு நல்ல மாற்றத்தைத் தரும். அதுவும் இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தினால், சருமம் கருப்பாக காட்சியளிப்பதைத் தவிர்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* தக்காளி - 1

* தேன் - 1 டீஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது?

இந்த ஃபேஸ் பேக்கிற்கு நன்கு கனிந்த தக்காளியின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி மசித்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின் அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின்பு வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.

வறட்சியான சருமத்தைப் போக்க...

வறட்சியான சருமத்தைப் போக்க...

உங்களது சருமம் அதிகம் வறட்சியடைகிறதா? உங்கள் சரும வறட்சியை இயற்கை வழியில் தடுக்க வேண்டும்? அப்படியெனில், இந்த ஃபேஸ் பேக் உங்கள் சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து, சருமத்தை ஆரோக்கியமாக வெளிக்காட்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பின்பற்றி வர, சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* தக்காளி - 1/2

* ஓட்ஸ் - 1 ஸ்பூன்

* தேன் - 1 ஸ்பூன்

* முட்டை மஞ்சள் கரு - 1

எப்படி பயன்படுத்துவது?

தக்காளியை நன்கு அரைத்து, அத்துடன் ஓட்ஸ் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் 1 ஸ்பூன் தேன் மற்றும் 1 முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவி துணியால் உலர்த்த வேண்டும்.

கருவளையத்தைப் போக்க...

கருவளையத்தைப் போக்க...

இன்றைய தலைமுறையினர் அதிகம் சந்திக்கும் ஓர் பிரச்சனை கருவளையம். இந்த கருவளையத்தைப் போக்க தக்காளி, கற்றாழை கலவை பெரிதும் உதவியாக இருக்கும். இந்த இரண்டு பொருட்களிலும் உள்ள ப்ளீச்சிங் பொருட்கள், கண்களைச் சுற்றியுள்ள கருமையைப் போக்கும். மேலும் இந்த கலவையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* தக்காளி ஜூஸ் - 1 டீஸ்பூன்

* கற்றாழை ஜெல் - 1 டீஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது?

ஒரு பௌலில் தக்காளி ஜூஸ் மற்றும் கற்றாழை ஜெல்லை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை கண்களைச் சுற்றி தடவி 10 நிமிடம் உலர வைத்து, பின்பு நீரால் முகத்தைக் கழுவுங்கள். இப்படி தினமும் 1-2 முறை செய்து வந்தால், கருவளையங்கள் விரைவில் மறையும்.

கரும்புள்ளிகள் நீங்க...

கரும்புள்ளிகள் நீங்க...

நம் அனைவருக்குமே எலுமிச்சை மற்றும் தக்காளியில் ப்ளீச்சிங் பண்புகள் நிறைந்துள்ளது என்பது தெரியும். இத்தகைய பொருட்களைக் கொண்டு முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், சருமத்தில் அசிங்கமாக இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து, முகம் அழகாகவும், சுத்தமாகவும் காட்சியளிக்கும்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* தக்காளி சாறு - 1-2 டீஸ்பூன்

* எலுமிச்சை சாறு - சில துளிகள்

எப்படி பயன்படுத்துவது?

ஒரு பௌலில் தக்காளி சாறு மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-12 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். பின் துணியால் சருமத்தைத் துடைத்து, மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்துங்கள். இப்படி தினமும் 1 முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையான தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளை போய்விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Get A Glowing Skin With These Tomato-based Face Packs

All of us would love to consume tomato or add this in our day-to-day food we eat. But do you know how a tomato can help you in getting a beautiful skin if used externally? Vitamin C contained in tomato works best for the skin. Let’s know how to use a tomato for protecting our skin and getting a healthier skin.
Story first published: Wednesday, April 11, 2018, 18:05 [IST]
Desktop Bottom Promotion