For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்லாத்தையும் தூக்கிப் போடுங்க... முகம் பளபளன்னு இருக்க இந்த ரெண்டு பொருள் போதும்...

|

உங்கள் முகம் இயற்கையாகவே ஜொலிக்கனும் என்று ஆசைப்படுகிறீர்களா? அப்போ இத ப்லோ பண்ணுங்க. இந்த இரண்டு பொருட்களைக் கொண்டே உங்கள் முகத்தை இயற்கையாக ஜொலிக்க வைக்க முடியும். அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.

Easy DIY 2 Ingredient Face Masks For Glowing Skin

இந்த அவசர உலகத்தில் நம்முடைய முகத்தை பராமரிக்க கூட நேரம் கிடைப்பதில்லை. பியூட்டி பார்லர் சென்று முகத்தை அழகு படுத்தினாலும் பணம் விரயமாவதுடன் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இயற்கை முறைகள் செலவு இல்லாது ஒன்று. இதில் எந்த கெமிக்கல்களும் இருப்பதில்லை. சரி வாங்க உங்களுக்கான இயற்கை முகப் பராமரிப்புகளை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பப்பாளி - லெமன் ஜூஸ்

பப்பாளி - லெமன் ஜூஸ்

பப்பாளி பழத்தில் உள்ள ஆன்டி ஹைட்ராக்ஸி அமிலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது. லெமன் சருமத்திற்கு நல்ல நிறத்தை கொடுத்து பருக்கள் போன்றவற்றை போக்குகிறது.

பயன்படுத்தும் முறை

அரை பப்பாளி பழத்தை எடுத்து அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இதை நன்றாக கெட்டியாக அரைக்கவும். இந்த பப்பாளி பேஸ்ட்டுடன் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த பேஸ்ட்டை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இதை ஒரு வாரத்திற்கு ஒரு முறை என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்

MOST READ: உங்கள் சருமத்தை முதல்முறையே கலராக்கும் அத்திப்பழம்... எதோடு கலந்து அப்ளை செய்யணும்?

க்ரீன் டீ - தேன்

க்ரீன் டீ - தேன்

க்ரீன் டீ பேக் நமது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது. தேன் சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தை கொடுக்கிறது.

பயன்படுத்தும் முறை

க்ரீன் டீ பேக்கை வெட்டி அதிலுள்ள பொடியை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். அதை ஒரு பெளலில் எடுத்து 1-2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். முகத்தை நன்றாகக் கழுவி விட்டு இந்த பேஸ்ட்டை அப்ளே செய்து 5-10 நிமிடங்கள் இருங்கள். பிறகு சாதாரண நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

MOST READ: திப்பிலி பற்றி தெரியுமா? எந்தெந்த நோய்க்கெல்லாம் தி்ப்பிலியை சாப்பிடலாம்?

பாதாம் - தேன்

பாதாம் - தேன்

பாதாம் பருப்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், விட்டமின் ஈ, கொழுப்பு அமிலங்கள் போன்றவை சரும ஜொலிப்பை தருகிறது. இந்த பேஸ் மாஸ்க் சருமத்தை சுத்தம் செய்து நல்ல பளபளப்பை கொடுக்கும்.

பயன்படுத்தும் முறை

10-15 பாதாம் பருப்பை எடுத்து சில மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊற வைத்த பாதாம் பருப்பை மிக்சியில் போட்டு அரைத்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்து 20 நிமிடங்கள் காய விடவும். பிறகு சாதாரண நீரில் கழுவவும். நல்ல முகம் பிரகாசமாக இருக்கும்.

MOST READ: தினமும் காலையில சீக்கிரமா எழுந்திருக்கணுமா? நீங்கள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள் இதுதான்...

கற்றாழை ஜெல் - க்ரீன் டீ

கற்றாழை ஜெல் - க்ரீன் டீ

சரும ஜொலிப்பை தரக் கூடிய அனைத்து விட்டமின்களும் மினிரல்கள் கற்றாழையில் அமைந்துள்ளது. கரும்புள்ளிகள் மற்றும் பருக்களை போக்குகிறது.

பயன்படுத்தும் முறை

2-4 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் க்ரீன் டீ பொடியை சேருங்கள். நன்றாக கலந்து பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் வரை வைக்கவும். இதை தினமும் பயன்படுத்தும் போது நல்ல தீர்வு கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Easy DIY 2 Ingredient Face Masks For Glowing Skin

our skin loses the glow when we fail to take care of it due to our busy schedules. But pampering your skin can be made easy and cost effective with the natural home remedies mentioned here.papaya, honey and aloe vera these face masks give natural glow to skin.
Story first published: Thursday, October 25, 2018, 15:40 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more