Latest Updates
-
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
இந்தியாவிலுள்ள இந்த கிராமத்திற்குள் இந்தியர்களே நுழையக்கூடாதாம் - இது எந்த நாட்டுக்கு சொந்தம் தெரியுமா? -
ஜூன் 22-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும்.. -
பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க - பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
World Sickle Cell Day 2026: அரிவாள் செல் நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
செவ்வாய் ரிஷப ராசி செல்வதால் ஆகஸ்ட் மாதம் வரை இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க..
இந்த உணவுகளை காலையில் சாப்பிட்டால் நீங்கள் எப்போதும் இளமையாக இருப்பீர்கள்..!
நாம் உண்ணும் உணவு மிக அவசியமான ஒன்றாகும். மற்ற நேரத்தில் நாம் சாப்பிடும் உணவை விட காலை வேளையில் சாப்பிட கூடிய உணவு பல மாற்றங்களை உடலில் ஏற்படுத்த கூடும். நாம் எடுத்து கொள்ளும் உணவின் தரம் நன்றாக இருந்தால், எண்ணற்ற நன்மைகள் நமக்கு கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

காலை நேரத்தில் இந்த உணவுகளை எடுத்து கொண்டால், நீங்கள் நீண்ட நாட்களாக இளமையுடன் இருக்கலாம். அவை என்னென்ன உணவுகள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

உணவே முக்கியம்..!
நாம் இந்த வாழ்வை வாழ்வதற்கு மிக முக்கிய காரணம் உணவு தான். உணவு இல்லையென்றால் நமது உடலுக்கு ஆற்றல் கிடைக்காது. அதுவும் சாப்பிட கூடிய உணவு மிக ஆரோக்கியம் கொண்டதாக இருக்க வேண்டும். காலை நேரத்தில் ஆரோக்கியமான சில முக்கிய உணவுகளை சாப்பிட்டாலே சத்துக்கள் உடலில் அதிகம் சேருமாம்.

பப்பாளி
காலை நேரத்தில் நீங்கள் பப்பாளியை உங்கள் உணவில் சேர்த்து கொண்டால் ஏராளமான நன்மைகள் நடக்குமாம். குறிப்பாக முக அழகு கூடுதல், செரிமான பிரச்சினை, அழுக்குகள் வெளியேற்றம் ஆகிய நன்மைகள் உடலுக்கு நடக்கும். அதுவும் இதன் மீது எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிட்டால் அதிக பயன்கள் கிடைக்கும்.

சிறந்த உணவு
உங்களின் நாளை மிக அற்புதமாக மாற்ற இந்த உணவே போதும். இதனை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நீண்ட நாட்கள் இளமையாக இருக்கலாம்.
தேவையானவை :-
ஓட்ஸ் 1 கப்
பாதாம் பால் அல்லது தேங்காய் பால்
இலவங்க பொடி 1/4 ஸ்பூன்

செய்முறை :-
ஓட்ஸை தேங்காய் பால் அல்லது பாதாம் பாலில் வேக வைத்து கொண்டு எடுத்து கொள்ளவும். பிறகு இதன்மீது சிறிது இலவங்க பொடியை தூவி காலை நேரத்தில் சாப்பிட்டு வரலாம். இவ்வாறு தினமும் சாப்பிட்டு வந்தால், இளமையாகவும், பொலிவாகவும் இருக்கலாம். பசும்பாலை இதில் பயன்படுத்த கூடாது.

சியா விதைகள்
பார்ப்பதற்கு மிக சிறியதாக உள்ள இந்த விதைகள் தான், உங்களின் முக அழகிற்கு பெரிதும் உதவுகின்றன. இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதால் முகத்தை மிக மென்மையாகவும், பொலிவாகவும், எந்த வித பிரச்சினைகளும் முகத்தில் ஏற்படாதவாறு பார்த்து கொள்ளும். அத்துடன் நகங்களையும் உடையாமல் பார்த்து கொள்ளும்.

முட்டை
சிறந்த மற்றும் மிக எளிமையான உணவு இந்த முட்டை தான். உங்களின் காலை உணவில் முட்டையை சேர்த்து கொண்டால் பல்வேறு நலன்கள் கிடைக்கும். முட்டை நமது ஆரோக்கியத்தை சீராக வைப்பதோடு, உடல் பருமன், முக அழகு போன்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வு தரும்.

அகாய் பெரி
கால்சியம், வைட்டமின் எ, இரும்பு சத்து, பாஸ்பரஸ் போன்ற பலவித ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள இந்த அகாய் பெரி எண்ணற்ற பலன்களை தரவல்லது. நீங்கள் தினமும் காலை உணவில் இந்த பெரிய சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாட்கள் இளமையாக இருக்கலாம். ஏனெனில், இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் செல்கள் சிதைவடையாமல் தடுத்து நற்பயன்களை தரும்.

கிரீன் டீ
நீங்கள் அதிக இளமையுடன் இருக்க இந்த எளிய டீ உங்களுக்கு உதவும். தினமும் காலையில் எழுந்ததும் காபி, அல்லது வெறும் டீ குடிப்பதை தவிர்த்து கிரீன் டீ குடித்து வந்தாலே உடல் ஆரோக்கியம் மற்றும் முக ஆரோக்கியம் இரு மடங்காக அதிகரிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேற்சொன்ன உணவுகளை காலை வேளையில் சாப்பிட்டு வந்தாலே முக அழகு இரட்டிப்பாக கூடும். இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் பிறருடனும் பகிருங்கள்.



Click it and Unblock the Notifications