For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எந்த குறையும் இல்லாத சருமம் வேண்டுமா? அப்ப இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க...

|

பெண்கள் என்றாலே அழகான சருமம் என்பது தான் நினைவில் வரும். ஆனால், அப்படி அழகான சருமத்தை சற்று உற்று நோக்கினால், அதில் ஏராளமான குறைபாடுகள், அதாவது முகப்பரு, கரும்புள்ளி போன்ற பிரச்னைகள் இருப்பது தெரியவரும். அவற்றை வெளியே தெரியாமல் மறைக்க அனைத்து விதமான அழகு சாதன பொருட்களையும் பயன்படுத்தி அதனால் ஏராளமான பிரச்னைகளையும் பெண்கள் சந்திக்கின்றனர்.

best home remedies for flawless skin

ஆனால், எவ்வித செலவும் இல்லாமல் அழகான, எவ்வித குறைபாடும் இல்லாத சீரான சருமத்தை பெற எளிய வழி முறைகள் உள்ளன. வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே உங்களுக்கு விருப்பமான அழகான சருமத்தை பெற முடியும். வாருங்கள் அந்த பொருட்கள் என்னவென்றும் எப்படி பயன்படுத்த வேண்டுமென்றும் பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கற்றாழை

கற்றாழை

கற்றாழை சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளையும், தழும்புகளையும் மறைத்து சீரான சருமத்தை தரும். ஒரு கற்றாழை இலையை எடுத்து நடுவில் வெட்டி, அதிலுள்ள ஜெல்லை எடுத்து முகத்தில் தேய்த்து கொள்ள வேண்டும். கற்றாழை செடியை வீட்டிலேயே வளர்க்கலாம்.

முட்டை வெள்ளைக்கரு

முட்டை வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கருவிற்கு முகத்தில் உள்ள திறந்த துளைகளை அடைத்து, சருமத்தை சற்று இறுக்கமாக வைக்கும் ஆற்றல் உள்ளது. ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் எடுத்து நுரை வரும் வரை அதை நன்கு கலக்க வேண்டும். பின்பு, அதனை முகத்தில் ஒரு சேர தேய்த்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை காய விட வேண்டும். நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீரால், அதனை கழுவி விட வேண்டும்.

தேன்

தேன்

முகப் பொலிவிற்கு தேன் நன்கு உதவக்கூடியது. தேனை தொடர்ந்து உபயோகிக்கும் பழக்கம் இருந்தால் உங்களுக்கு சீரான சருமம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், சிறிது தேனை எடுத்து, அத்துடன் இலவங்கப்பட்டை தூளை சேர்த்து கெட்டியான பேஸ்ட்டாக செய்து கொள்ள வேண்டும். பின்னர், அந்த பேஸ்டை முகத்தில் தடவி, 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறவிடவும். நன்கு காய்ந்த பின்னர், மிதமான சூடுள்ள தண்ணீரில் முகத்தை கழுவி விட வேண்டும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

சீரான, குறைபாடில்லா சருமத்திற்கு எலுமிச்சை சாறு உதவக்கூடியது. இதிலுள்ள அமிலத்தன்மை, முகத்திற்கு இயற்கை ப்ளீச் செய்த பலனை தரும். ஒரு எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு எடுத்து, அதனை உங்கள் சருமத்தில் தேய்த்து 5 முதல் 7 நிமிடங்கள் வரை அப்படியே விடவும். பின்னர், மிதமான சூடுள்ள நீரால் முகத்தை கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வர, முகம் மிருதுவாக, குறையில்லாத, பளிச்சென்ற நிறத்தை தரும்.

தக்காளி, தயிர் மற்றும் ஓட்ஸ் கலந்த பேஸ்ட்

தக்காளி, தயிர் மற்றும் ஓட்ஸ் கலந்த பேஸ்ட்

ஒரு சிறிய கிண்ணத்தில் தக்காளி சாறு, தயிர் மற்றும் ஓட்ஸ் எடுத்து கொண்டு நன்று பேஸ்ட் பதத்தில் கலந்து கொள்ள வேண்டும். தயார் செய்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 15 நிமிடம் காய வைக்கவும். பின்னர், குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடவேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தொடர்ந்து தடவி வந்தால் முகம் பொழிவாக இருக்கும். மேலும், இது சருமத்தில் உள்ள தழும்புகள், கரும்புள்ளிகள் ஆகியவற்றை நீக்கும். தொடர்ந்து இதனை பயன்படுத்தும் போது, சருமத்தில் ஏற்படும் வித்தியாசத்தை நீங்களே உணரலாம்.

பப்பாளி

பப்பாளி

சருமத்திற்கு பல மகத்தான பலன்களை தருவதில் பப்பாளி முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு கப் பப்பாளி பழக்கூழ் எடுத்து முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்து 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடவும். வாரம் ஒரு முறை இதனை நீங்கள் செய்யலாம். தொடர்ந்து இதனை செய்து வர முகப்பொலிவு, சீரான சருமம் கிடைக்கும்.

பால்

பால்

காய்ச்சாத பாலை முகத்தில் தடவி, முகத்தின் மேல்புறமாக தேய்த்து சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்து காய விடவும். நன்கு காய்ந்த பின்னர், குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடவும். வெறும் பாலிற்கு முகத்தின் கருப்பை நீக்கி, பளீச்சென்ற சருமத்தை தரும் தன்மை உண்டு.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

சரும பாதுகாப்பில் உருளைக்கிழங்கு உதவும் என்பது பலருக்கு தெரியதாக விஷயம். வேக வைக்காத பச்சை உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து, முகத்தில் தொடர்ந்து தேய்த்து வர வேண்டும். இது முக பொலிவை அதிகரித்து, முகத்தில் உள்ள தழும்புகளை அகற்றும். முகத்தில் உருளைக்கிழங்கு சாற்றை தேய்த்து சிறிது நேரம் காயவைத்த பின்பு, மிதமான சூடுள்ள நீரில் முகத்தை கழுவ வேண்டும். வெயிலால் ஏற்படும் சரும நிற மாற்றத்தை இது தடுக்கும். மேலும் சருமத்திற்கு இது இயற்கை ப்ளீச்சாகவும் செயல்படும்.

MOST READ : ஆண்குறியில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலில் இருந்து

விடுபடுவது எப்படி?

சந்தன பேஸ்ட்

சந்தன பேஸ்ட்

பொதுவாகவே சந்தனம் சருமத்திற்கு ஒரு இயற்கை மருந்தாக பயன்படக்கூடியது. சந்தன கட்டையை எடுத்து, ஒரு கல்லின் மீது ரோஸ் வாட்டர் ஊற்றி நன்கு தேய்க்கவும். அதில் கிடைக்கும் பேஸ்ட்டை முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடம் காய விடவும். பின்னர், குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவவும். இதனை செய்த உடனே உங்கள் முகத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். சந்தனத்தை கட்டை மூலம் உரசி கிடைக்கும் பேஸ்டை பயன்படுத்துவதே சிறந்தது. கடைகளில் கிடைக்கும் சந்தன பொடியை பயன்படுத்துவதை தவிர்க்கவும். இவ்வாறு செய்தால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். வெளியே வாங்கும் சந்தன பொடி சுத்தமானது என்று நீங்கள் 100 சதவிகிதம் அறிந்தால் மட்டும் பயன்படுத்தவும். இல்லையென்றால், அது வேறு சில சரும பிரச்னைகளை ஏற்படுத்தி விடலாம்.

சர்க்கரை

சர்க்கரை

வெள்ளை மற்றும் நாட்டு சர்க்கரையை சரிசம அளவில் எடுத்துக் கொண்டு, சிறிது தண்ணீருடன் அதனை கலந்து கொள்ளவும். இது சருமத்தின் உள்ளே படிந்திருக்கும் அழுக்குகளை நீக்க உதவும். சர்க்கரை பயன்படுத்தும் போது சருமம் சற்று தளர்ந்து உள்ளே இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த சரும செல்களை எளிதில் வெளியேற்றிவிடும். இதனை நீங்கள் தொடர்ந்து செய்து வரும் போது, இளமை தோற்றம் உங்களுக்கு கிடைப்பதை நீங்கள் உணரலாம்.

தக்காளி

தக்காளி

தக்காளியில் உள்ள ஆன்டி-ஏஜிங் பண்புகள் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல், வயதாவதற்கான தோற்றத்தை தடுத்து இளமைப் பொலிவை தரும். மேலும், சூரிய வெளிச்சத்தால் சருமம் பாதிக்காமல், கோடை காலத்தில் சருமத்திற்கு உதவும் ஒரு தோழனாக பயன்படும். லைகோபைன் எனும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், சீரான சருமத்தை தரும் சிறந்த பண்புகளை கொண்டது. எனவே, தக்காளியை அப்படியே சாப்பிடுவதோ அல்லது முகத்தில் பேஸ்டாக தேய்க்கவோ பயன்படுத்தும் போது முகப்பரு, தழும்புகள் இல்லாத சீரான சருமமாக, உங்கள் சருமம் மாறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Home Remedies for Flawless Skin

Here are some best home remedies for flawless skin. Read on to know more...
Story first published: Wednesday, September 26, 2018, 18:34 [IST]
Desktop Bottom Promotion