பீட்ரூட் சாறு, துவரம் பருப்பு மற்றும் கோதுமை மாவை பயன்படுத்தி பேசியல் செய்வது எப்படி?

Written By:
Subscribe to Boldsky

முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு தான் இருக்காது. உங்களது முகத்திற்கு தகுந்த பராமரிப்புகளை கொடுத்து வர வேண்டியது மிக மிக அவசியமான ஒன்றாகும். முகத்தில் உள்ள பல பிரச்சனைகளை போக்க இந்த பேஸ் பேக்குகள் பயன்படுகின்றன.

நாம் இன்றைக்கு இருக்கும் மாசடைந்த சூழ்நிலையில், முகம் சீக்கிரமாக கருமையடைய ஆரம்பித்துவிடுகிறது. முகத்தில் இறந்த செல்கள் எளிதாக உருவாகிவிடுகின்றது. இதனால் முகம் அதன் இயற்கை அழகினை இழந்து கருமையாக தோற்றமளிக்கிறது.

எனவே மாதம் ஒருமுறை கண்டிப்பாக பேசியல் செய்ய வேண்டியது அவசியமாகும். ஆனால் பார்லருக்கு சென்றால் நிச்சயமாக 1000 முதல் 2000 வரை செலவு செய்யாமல் வெளியே வர முடியாது. மேலும் பார்லரில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்கள் உங்களது முகத்தில் சில பிரச்சனைகளை உருவாக்கலாம். இதற்கு என்ன தீர்வு என்று பார்த்தால் வீட்டிலேயே பேஸியல் செய்து கொள்வது தான் இந்த பகுதியில் உங்களுக்கான சில பேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி உங்களை அழகுப்படுத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
துவரம் பருப்பு

துவரம் பருப்பு

துவரம் பருப்பு சிறிதளவு, ரோஸ் வாட்டர், மஞ்சள், பால் போன்றவற்றை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த துவரம் பருப்பை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து, அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த விழுதுடன் மஞ்சள், ரோஸ்வாட்டர், பால் ஆகிய மூன்றையும் கலந்து முகத்திற்கு அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

முல்தானிமெட்டி

முல்தானிமெட்டி

முல்தானி மெட்டி, ரோஸ் வாட்டர், மஞ்சள் மற்றும் பால் ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த முல்தானி மெட்டி உடன் ரோஸ் வாட்டர், பால் மற்றும் மஞ்சள் கலந்து முகத்திற்கு பேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

கடலைமாவு பேஸ் பேக்

கடலைமாவு பேஸ் பேக்

கடலை மாவு, மைதா, அரிசி மாவு போன்றவற்றை சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் எலுமிச்சை சாறையுடன் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கடலை மாவு, மைதா, அரிசி மாவு மூன்றையும் ஒன்றாக கலந்து அதனுடன் எலுமிச்சை சாறையும் கலந்து முகத்திற்கு மாஸ்க் ஆக பயன்படுத்த வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து மிதமாக மசாஜ் செய்து கழுவ வேண்டும்.

அதிமதுரம்

அதிமதுரம்

அதிமதுரம் உங்களது சருமத்திற்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது. சூரியனால் உண்டான கதிரால் உண்டான கருமையை போக்க உதவுகிறது. அதிமதுரம், முல்தானிமெட்டி மற்றும் ரோஸ் வாட்டரை ஒன்றாக கலந்து முகத்திற்கு பேஸ் பேக் போட்டால் முகம் பளிச்சென்று இருக்கும்.

உருளைக்கிழங்கு பேஸ் பேக்

உருளைக்கிழங்கு பேஸ் பேக்

உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து, அதனை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள் இதனுடன் சிறிதளவு கடலைமாவு மற்றும் தேன் கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டு பாருங்கள். முகம் பேசியல் செய்தது போன்ற ஒரு அழகை பெறும்.

பாலுடன்..!

பாலுடன்..!

உருளைக்கிழங்கை நன்றாக துருவிக் கொள்ளுங்கள். பின் இந்த துறுவலை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் பால் கலந்து முகத்திற்கு பேக் போடுங்கள். இதனால் முகம் பளிச்சிடும் வெண்மை பெறுவது உறுதி.

பால்

பால்

ஒரு பவுளில் சிறிதளவு பாலை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பாலை ஒரு பஞ்சில் தொட்டு முகத்திற்கு மசாஜ் செய்யுங்கள். இதனால் முகம் சிறந்த பொலிவுடன் இருக்கும்.

கோதுமை மாவு

கோதுமை மாவு

பாலில் சிறிதளவு கோதுமை மாவை கலந்து முகத்திற்கு நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த மசாஜ்ஜை 10 நிமிடங்கள் வரை செய்ய வேண்டியது அவசியம். அழுத்தமாக மசாஜ் செய்ய கூடாது. இதனால் உங்களது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கும்.

தயிர்

தயிர்

சிறிதளவு தயிரை எடுத்துக் கொள்ளுங்கள், அதனுடன் ஒரு ஸ்பூன் அளவுக்கு பீட்ரூட் ஜூஸை கலக்க வேண்டும். இந்த க்ரீமை நன்றாக முகத்திற்கு 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். இதனால் உங்களது முகம் மிருதுவாகி நல்ல நிறத்தை பெறும்.

பேஸ் பேக்

பேஸ் பேக்

கடலை மாவு, கோதுமை மாவு, பீட்ரூட் ஜூஸ், சிறிதளவு மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்திற்கு பேஸ் பேக் போட வேண்டும். பின்னர் இதனை 20 நிமிடங்கள் உலர வைத்து கழுவி விட வேண்டும். இதனால் உங்களுக்கு பேஸியல் செய்தது போன்ற தோன்றம் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Beetroot And Milk Easy Home Facial

Beetroot And Milk Easy Home Facial
Story first published: Wednesday, January 10, 2018, 13:44 [IST]