எவ்வளவு கருப்பா இருந்தாலும் இந்த காயை அரைத்து தேய்ச்சா ஒரே வாரத்துல கலராகிடலாம்...

Posted By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

உடல் நலத்திற்கு மட்டுமல்ல சரும அழகையையும் அள்ளிக் கொடுக்கும் ஒரு பொருள் தான் இந்த பீட்ரூட். எப்படிப்பட்ட சரும பிரச்சினைகளையும் ஒரு நொடிப் பொழுதில் நீக்கி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி விடும்.

beet root face packs for beautiful face

இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு தேவையான போதுமான ஈரப்பதத்தை கொடுத்து முகத்தை பட்டு போல் ஜொலிக்க வைத்திடும். இதற்கு பீட்ரூட் உடன் லெமன் ஜூஸ், தேன், கற்றாழை ஜெல், அரிசி மாவு சேர்த்து பேஸ் பேக் தயாரித்து வந்தால் நல்ல அழகான முகத்தை பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பீட்ரூட்

பீட்ரூட்

நமது உடலை பராமரிப்பது மட்டுமல்ல அழகையும் சேர்த்து பராமரிப்பது மிகவும் முக்கியம். அப்படி இருக்கையில் உடல் நலத்திற்கு மட்டுமல்ல சரும அழகையையும் அள்ளிக் கொடுக்கும் ஒரு பொருள் தான் இந்த பீட்ரூட். எப்படிப்பட்ட சரும பிரச்சினைகளையும் ஒரு நொடிப் பொழுதில் நீக்கி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி விடும். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு தேவையான போதுமான ஈரப்பதத்தை கொடுத்து முகத்தை பட்டு போல் ஜொலிக்க வைத்திடும். இதனுடன் சில பொருட்களை சேர்த்து பேஸ் பேக் போட்டு பாருங்கள் அப்புறம் என்ன ஒரு நொடிப் பொழுதில் உங்கள் அழகை கண்ணாடியில் காணலாம்.

பீட்ரூட் மற்றும் லெமன் பேஸ் பேக்

பீட்ரூட் மற்றும் லெமன் பேஸ் பேக்

செய்முறை

1 டீ ஸ்பூன் பீட்ரூட் ஜூஸ் மற்றும் 1/2 டீ ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து கொள்ளுங்கள். இதில் காட்டன் பஞ்சை நனைத்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்

பீட்ரூட் மற்றும் கற்றாழை ஜெல் பேஸ் பேக்

பீட்ரூட் மற்றும் கற்றாழை ஜெல் பேஸ் பேக்

செய்முறை

பீட்ரூட் துருவலுடன் 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேருங்கள். இதை முகத்தில் நன்றாக தடவிக் கொள்ளுங்கள். 10-15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த மற்றும் சூடான நீர் கலந்த கலவையில் கழுவுங்கள். ஒரு வாரத்திற்கு இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சருமம் ஈரப்பதத்துடன் முகம் நல்ல நிறத்தையும் பெறும்.

பீட்ரூட் மற்றும் அரிசி மாவு பேஸ் பேக்

பீட்ரூட் மற்றும் அரிசி மாவு பேஸ் பேக்

செய்முறை

2 டீ ஸ்பூன் அரைத்த பீட்ரூட் கலவை 1/2 டீ ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்

முகம் மற்றும் கழுத்தில் நன்றாக தடவிக் கொள்ளுங்கள். 15 நிமிடங்கள் காய விட்டு லேசான க்ளீன்சர் மற்றும் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவவும். ஒரு மாதத்திற்கு 3-4 தடவை இதை செய்து வந்தால் இளமையான தோற்றத்தை பெறலாம்.

பீட்ரூட் மற்றும் தேன் பேஸ் பேக்

பீட்ரூட் மற்றும் தேன் பேஸ் பேக்

செய்முறை

ஒரு பெளலில் 2 டீ ஸ்பூன் தேன் 1 டீஸ்பூன் பீட்ரூட் சேர்த்து கலந்து கொள்ளவும். நன்றாக கலந்து பேஸ்ட் மாதிரி ஆக்கி கொள்ளுங்கள். முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் முக சருமத்திற்கு போதுமான ஈரப்பதம் கிடைப்பதோடு மென்மையாக இருக்கும்.

பீட்ரூட் மற்றும் சந்தன பொடி

பீட்ரூட் மற்றும் சந்தன பொடி

செய்முறை

2 டீ ஸ்பூன் பீட்ரூட் ஜூஸூடன் 1/2 டீ ஸ்பூன் சந்தன பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்.

இதை முகத்தில் தடவிக் கொள்ளவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை என பயன்படுத்தி வந்தால் சரும பிரச்சினைகள் நீங்கி முகம் பொலிவு பெறும்.

பீட்ரூட் மற்றும் ரோஸ் வாட்டர் பேஸ் பேக்

பீட்ரூட் மற்றும் ரோஸ் வாட்டர் பேஸ் பேக்

செய்முறை

பீட்ரூட்டை துருவி அதை 1 டீ ஸ்பூன் ரோஸ் வாட்டரில் கலக்கவும். இதை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி கொள்ளவும். 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். வாரத்திற்கு என்ற முறையில் பயன்படுத்தி வந்தால் முகம் புத்துணர்வு பெறும்.

பீட்ரூட் மற்றும் ஆலிவ் ஆயில் பேஸ் பேக்

பீட்ரூட் மற்றும் ஆலிவ் ஆயில் பேஸ் பேக்

செய்முறை

1 டீ ஸ்பூன் துருவிய பீட்ரூட் 1/2 டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை முகத்தில் தடவி கொள்ளவும். 20 நிமிடங்கள் கழித்து லேசான க்ளீன்சர் மற்றும் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவவும். இதை வாரத்திற்கு என்ற முறையில் பயன்படுத்தி வந்தால் நல்ல ஈரப்பதமும் சரும அழகும் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Beetroot Face Packs That Can Nourish Your Skin In Minutes

Beetroot is a highly valued skin care ingredient that has been used for centuries for treating a plethora of troubling skin conditions. This vegetable is laden with powerful antioxidants that can benefit your skin in numerous ways. Beet root with honey, rice powder, lemon juice these are the face packs are used for beautiful face treatment
Story first published: Wednesday, April 11, 2018, 15:15 [IST]