For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர் காலத்தால் முகமும் தோலும் வறண்டு போகிறதா..? இந்த ஆயுர்வேத குறிப்பை பயன்படுத்தி சரி செய்யுங்க..

|

காலம் மாற்றம் என்பது மாறாத ஒன்று. எப்போது எந்த நிலையில் இருக்கும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. இயற்கையின் படைப்பு அப்படி இருக்க நம்மால் இதனை எதிர்த்து எதுவும் செய்ய இயலாது. வெயில் காலத்தில் பல சருமம் சார்ந்த பிரச்சினைகள் நமக்கு வர தொடங்கும்.

குளிர் காலத்தால் முகமும் தோலும் வறண்டு போகிறதா..? இந்த ஆயுர்வேத குறிப்பை பயன்படுத்தி சரி செய்யுங்க..

அதே போன்று இப்போ வருகின்ற குளிர் காலத்திலும் எண்ணற்ற பிரச்சினைகளை உங்கள் சருமம் சந்திக்க நேரிடும். இதில் முதல் இடத்தில் இருப்பது சரும வறட்சி பிரச்சினையே. உங்களின் முகம் வறண்டு இருந்தால் இந்த ஆயுர்வேத குறிப்புகளை பயன்படுத்தி அழகிய முகத்தை பெறுங்கள் நண்பர்களே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரும வறட்சியா..?

சரும வறட்சியா..?

சிலருக்கு கால நிலை மாற்றத்தால் முகமும், தோலும் அதிகம் பாதிக்கபடும். வெயில் காலம் வந்தால் கொப்புளங்கள் வருதலும், குளிர் காலம் வந்தால் முக வறட்சி ஏற்படுதலும் இவர்களுக்கு வர கூடிய பிரச்சினையாகும். இது போன்ற பிரச்சினை கொண்டோருக்கு பல வித ஆயுர்வேத வழிகள் உள்ளன.

பாதாம் போதுமே..!

பாதாம் போதுமே..!

உங்களின் முக வறட்சி மற்றும் தொழில் வறட்சியை சரி செய்ய இந்த அழகியல் குறிப்பு நன்கு வேலை செய்யும்.

தேவையானவை :-

பாதாம் 5

பால் 2 ஸ்பூன்

கடலை மாவு 1 ஸ்பூன்

எலுமிச்சை சிறு துளி

செய்முறை :-

செய்முறை :-

முகத்தின் வறட்சியை போக்குவதற்கு முதலில் பாதாமை 1 மணி நேரம் நீரில் ஊற வைத்து கொள்ளவும். பிறகு இதனை நன்கு அரைத்து கொண்டு, இதனுடன் பாலை கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக கடலை மாவு, எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் பூசவும். 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் சரும வறட்சி போய் விடும்.

முட்டை வைத்தியம்

முட்டை வைத்தியம்

தோலின் வறட்சியை போக்குவதற்கு இந்த அருமையான குறிப்பு உங்களுக்கு உதவும். இதற்கு தேவையான பொருட்கள்...

முட்டை வெள்ளை கரு 1

தேன் 1 ஸ்பூன்

பால் 1 ஸ்பூன்

MOST READ: தப்பி தவறி கூட இந்த செடிகளை தொட்டு விடாதீர்கள்..! மீறி தொட்டால் மரணம் கூட நேரலாம்...!

செய்முறை :-

செய்முறை :-

முட்டையின் வெள்ளை கருவை நன்றாக அடித்து கொள்ளவும். பிறகு இதனுடன் தேன் மற்றும் பால் சேர்த்து மீண்டும் நன்கு அடித்து கொள்ளவும். பிறகு இந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

தர்பூசணியும் தேனும்

தர்பூசணியும் தேனும்

சரும வறட்சி பிரச்சினைகளை விரட்டி அடிக்க ஒரு அற்புத குறிப்பு உள்ளது. இந்த குறிப்பை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தாலே சரும வறட்சி மற்றும் தோல் வறட்சி நீங்கி விடும். அதற்கு தேவையானவை..

தேன் 1 ஸ்பூன்

தர்பூசணி சாறு 2 ஸ்பூன்

செய்முறை :-

செய்முறை :-

முதலில் தர்பூசணியை எடுத்து அரைத்து கொள்ளவும். அடுத்து இதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொண்டு தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த் கலவையை முகத்திலும் கை கால்களிலும் தடவி மசாஜ் கொடுத்தால் சருமத்தின் வறட்சி நீங்கி, மென்மையாக மாறும்.

கற்றாழை

கற்றாழை

பல்வேறு மருத்துவ தன்மை கொண்ட இந்த கற்றாழை உங்களின் முக பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வை தருகிறது. கற்றாழை ஜெல்லை அரைத்தோ அல்லது அப்படியேவோ முகம், கை, கால்களில் தடவினால் வறட்சிகள் நீங்கி ஈரப்பதமான சருமம் கிடைக்கும்.

MOST READ: ஆண்களே..! நீங்கள் மலட்டு தன்மையாக உள்ளீர்கள் என்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள்..!

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தலை முடி பிரச்சினைக்கு மட்டும் தான் தேங்காய் எண்ணெய் உதவும் என எண்ணாதீர்கள். இவை முக பிரச்சினைக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் அதிக நலனை தர கூடியது. உங்களின் சரும வறட்சியை போக்குவதற்கு தேங்காய் எண்ணையை தடவி வந்தாலே முழுமையான தீர்வை பெற்று விடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayurvedic Remedies To Get Rid Of Dry Skin During Winter Season

Ayurvedic Remedies to get rid of dry skin during winter season.
Story first published: Friday, November 16, 2018, 17:58 [IST]
Desktop Bottom Promotion