For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களின் முகத்தை பட்டுபோல வைக்கும் பப்பாளி இலை..!

பொதுவாக பப்பாளியில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. பப்பாளி பழத்தை கொண்டு முகத்தை அழகு செய்தல், உடலின் ஆரோக்கியத்துக்கு பயன்படுத்துதல், மாதவிடாய் சார்ந்த பிரச்சினைகள் போன்ற பல வகையிலும் உபயோகித்து கொள்ளலாம்.

|

அகத்தின் அழகு எவ்வளவு முக்கியமோ அதே போன்றுதான் முகத்தின் அழகும். ஆனால் இன்று பலர் முக அழகை பற்றி கண்டு கொள்வதே இல்லை. அதிலும் குறிப்பாக ஆண்கள் தங்களது முகத்தின் ஆரோக்கியத்தை பெரிதாக எடுத்து கொள்ள மாட்டார்கள். இதனால் முகத்தில் கரும்புள்ளிகள், முக பருக்கள், தேம்பல், அலர்ஜி இப்படி பலவற்றிற்கும் ஆளாக நேரிடும். சிலர் இதற்கு பலவகையான கிரீம்களை பயன்படுத்தி இருப்பார்கள்.

how to make papaya leaf juice in tamil

இருப்பினும் அவையெல்லாம் சரியான தீர்வை தந்திருக்காது. இதற்கு சிறந்த தீர்வாக இருக்கிறது பப்பாளி இலைகள். பொதுவாக பப்பாளியில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. பப்பாளி பழத்தை கொண்டு முகத்தை அழகு செய்தல், உடலின் ஆரோக்கியத்துக்கு பயன்படுத்துதல், மாதவிடாய் சார்ந்த பிரச்சினைகள் போன்ற பல வகையிலும் உபயோகித்து கொள்ளலாம். ஆனால் பப்பாளி இலையிலும் எண்ணற்ற அழகு குறிப்புகள் மற்றும் மருத்துவ குறிப்புகள் உள்ளதென்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இதில் உள்ள ரகசியங்களை பற்றி இனி தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அழகு ரகசியங்கள் :-

அழகு ரகசியங்கள் :-

பப்பாளி இலையில் நிறைய அழகு குறிப்புகள் ஒளிந்து கொண்டுள்ளது. இதனை முக பூச்சாக நாம் பயன்படுத்தலாம். வைட்டமின் எ, பி, ஆகியவை பப்பாளி பழத்தை காட்டிலும் இலையில் அதிகம் உள்ளது. எனவே இது முகத்தின் பளபளப்பை அதிகரிக்கிறது. மேலும் முகத்தில் அழுக்கு சேர்ந்தால் அதனையும் இது சுத்தம் செய்கின்றது. கார்பைன் (karpain) மூல பொருட்கள் இதில் உள்ளதால் நுண்ணுயிரிகளை முகத்தில் வராமல் காக்கும். சிலர் தேவையற்ற கிரீம்களையெல்லாம் பயன்படுத்தியதால் முகத்தில் நச்சு தன்மை அதிகம் ஏற்பட்டிருக்கும். இவற்றையும் பப்பாளியின் இலைகள் குணப்படுத்தும்.

முகம் அழகாக :-

முகம் அழகாக :-

மிகவும் மென்மையான சருமம் வேண்டும் என்றால் அதற்கு ஒரு எளிமையான தீர்வு பப்பாளி இலையே. பப்பாளி இலையை நன்றாக அரைத்து அதனை குடித்து வந்தால், முகம் விரைவில் அழகாக மாறும். மேலும் கரும்புள்ளிகள் இருக்கும் ஆண்களின் முகத்தை குணப்படுத்தி அவற்றை நீக்கும். இதன் சாற்றை வெறுமையாக குடிக்க பிடிக்கவில்லையென்றால் ஆப்பிள், பப்பாளி, திராட்சை, மாம்பழம் இவற்றில் ஏதேனும் ஒன்றோடு சேர்த்து அரைத்து குடிக்கலாம். கூடிய சீக்கிரத்திலே இது நல்ல பலனை கொடுக்கும்.

முக பருக்களை நீக்க :-

முக பருக்களை நீக்க :-

பல ஆண்களின் முகத்தில் எண்ணற்ற பருக்கள் இருக்க கூடும். இது மிக சங்கடமான நிலையை தரும். இதனை சரி செய்ய முதலில் பப்பாளி இலையை நன்கு அரைத்து கொண்டு வடிகட்டி கொள்ளவும். தேவையான அளவு அதனை முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழிவி விடவும். சில சமயங்களில் பப்பாளி பழத்தையும் சேர்த்து அரைத்து முகத்தில் பூசலாம். இவ்வாறு வாரத்திற்கும் 2 முறை செய்து வந்தால் உங்கள் முகம் மிகவும் பொலிவு தரும். மேலும் முகப்பருக்களையும் நீக்கி விடும்.

சுருக்கங்களை போக்க :-

சுருக்கங்களை போக்க :-

இளம் வயதிலேயே பலருக்கு பலருக்கு முகத்தில் சுருக்கங்கள் வர தொடக்கி விடும். இது மிகுந்த வேதனையை தர கூடியது. இந்த சுருக்கங்கள் முகத்தை மிகவும் வயதானவர் போல காட்ட கூடியது. எனவே இதனை சரி செய்ய பப்பாளி டீ போதும். 5 அல்லது 6 பப்பாளி இலையை எடுத்து, நீரில் அலசி கொள்ளவும். பிறகு சிறிது சிறிதாக நறுக்கி 1 லிட்டர் தண்ணீரில் போட்டு, 1/4 பங்கு வந்தவுடன் இறக்கி வைத்து விடவும். பின்பு அதனை வடிகட்டி குடித்து வந்தால் முகம் மிகவும் இளமையாக காட்சியளிக்கும்.

முக அழுக்கை சுத்தம் செய்ய :-

முக அழுக்கை சுத்தம் செய்ய :-

வெளியில் அடிக்கடி ஆண்கள் செல்வதால் வளிமண்டலத்தில் உள்ள மாசுக்கள் முகத்தில் ஒட்டி கொள்ளும். அத்துடன் முகத்தையும் கருமையாக மாற்றி விடும். இதற்கு தீர்வு, 2 டேபிள்ஸ்பூன் பப்பாளி இலை சாற்றை எடுத்து 1 டேபிள்ஸ்பூன் வேப்பிலை சாற்றுடன் நன்கு கலந்து முகம் மற்றும் கழுத்தில் ஃபேஸ் பேக் போல போடவும். 20 நிமிடம் கழித்து இதனை மிதமான சுடு நீரில் கழுகினால், முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி பொலிவான முகம் கிடைக்கும்.

பொடுகு தொல்லை நீங்க :-

பொடுகு தொல்லை நீங்க :-

பலருக்கு தலையில் ஏற்படும் பிரச்சினைகளில் முதன்மையானது இந்த பொடுகுதான். முடி உதிர்வதற்கு முக்கிய காரணம் இதுவே. இதனை குணப்படுத்த அரைத்து வடிகட்டிய பப்பாளி இலை சாற்றை தலையில் தடவி மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடத்திற்கு பின் வெதுவெதுப்பான நீரில் தலையை அலசுங்கள். இவ்வாறு செய்தால் உங்கள் பொடுகு தொல்லை விரைவில் குணமடையும். மேலும் அதிக அழுக்கு தலையில் சேர்வதையும் தடுக்கும்.

தோல் வியாதிகளுக்கு :-

தோல் வியாதிகளுக்கு :-

உடலில் ஏதேனும் ஒவ்வாமை அல்லது தோல் சார்ந்த வியாதிகள் இருந்தால் அத்தனையும் பப்பாளி இலைகள் சரி செய்து விடுகிறது. 1 டேபிள்ஸ்பூன் இதன் சாற்றை எடுத்து கொண்டு 1 டீஸ்பூன் மஞ்சளை அதனுடன் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால் தோல் சம்பந்தமான எல்லா பிரச்சினைகளும் குணமடையும். இதனால் தோலின் சருமமும் அழகாக இருக்கும்.

செய்ய கூடாதவை :-

செய்ய கூடாதவை :-

1. பப்பாளி இலையின் சாற்றை கர்ப்பிணி பெண்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். மீறி குடித்தால் கரு கலைப்பு கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது.

2. உடலில் அதிக அளவில் ஒவ்வாமை ஏற்பட்டவர்கள் இதனை குடிக்க வேண்டாம். உடலுக்கு வெளியில் ஏற்பட்ட தோல் வியாதிகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.

3. வயிற்று வலியால் அவதிப்படுவோருக்கு பப்பாளி இலை சாற்றை கொடுக்க கூடாது.

எனவே குறிப்பிட்ட அளவே இதனை பயன்படுத்தி நலமுடன் வாழுங்கள். மேலும் உங்கள் மருத்துவரை ஒரு முறை ஆலோசித்து இவற்றை பயன்படுத்துங்கள். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முக ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

amazing Uses Of Papaya Leaf Juice For Glowing Skin And Well-being

Juicing papaya leaves is a great way to take advantage of their tremendous beauty benefits. This concentrated extract is topically applied to treat skin allergies, wounds, scars, blemishes, hair fall, dandruff, and fungal or bacterial infections.
Story first published: Monday, July 30, 2018, 16:22 [IST]
Desktop Bottom Promotion