For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகத்தில் ஆங்காங்கு ப்ரௌன் நிற புள்ளிகள் உள்ளதா? அதை போக்குவது எப்படி?

இங்கு அசிங்கமாக காணப்படும் ப்ரௌன் நிற புள்ளிகளைப் போக்கும் இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

உங்கள் சருமத்தில் ப்ரௌன் நிறத்தில் புள்ளிகள் ஆங்காங்கு காணப்படுகிறதா? இதைப் போக்க பல க்ரீம்களைப் பயன்படுத்தியும் எவ்வித பலனும் கிடைக்கவில்லையா? இந்த ப்ரௌன் புள்ளிகளைப் போக்க வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா? இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் 'ஆம்' என்றால், இக்கட்டுரை உங்களுக்கானது.

Amazing Natural Remedies To Remove Brown Spots On Skin

ஏனெனில் இன்று நாம் பார்க்கப் போவது முகத்தில் அசிங்கமாக இருக்கும் ப்ரௌன் நிற புள்ளிகளைப் போக்க உதவும் சில வழிகள் குறித்து தான். அதற்கு முன் இந்த ப்ரௌன் நிற புள்ளிகள் வருவதற்கான காரணிகள் எவையென்று தெரிந்து கொள்ளும். முதுமைத் தோற்றத்தைத் தரும் ப்ரௌன் நிற புள்ளிகளானது அளவுக்கு அதிகமாக வெயிலில் சுற்றினால், வைட்டமின் குறைபாடு மற்றும் மன அழுத்தம் போன்றவற்றால் தான் வருகிறது.

இந்த பிரச்சனைக்கு நம் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே எளிய வழியில் போக்க முடியும். சரி, இப்போது அசிங்கமாக காணப்படும் ப்ரௌன் நிற புள்ளிகளைப் போக்கும் இயற்கை வழிகளைக் காண்போம் வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

* முதலில் ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் சரிசம அளவில் கலந்து கொள்ளுங்கள்.

* பின் ஒரு பஞ்சுருண்டையை ஆப்பிள் சீடர் வினிகரில் நனைத்து ப்ரௌன் புள்ளிகள் உள்ள இடத்தில் தடவுங்கள்.

* 10-15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3-4 முறை செய்து வந்தால், ப்ரௌன் நிற புள்ளிகள் போய்விடும்.

மோர்

மோர்

* மோரில் பஞ்சுருண்டையை நனைத்து, ப்ரௌன் நிற புள்ளிகள் உள்ள இடத்தின் மேல் வைத்து, 15 நிமிடம் ஊற வையுங்கள்.

* பின் வெதுவெதுப்பான நீரால் அப்பகுதியைக் கழுவுங்கள். இந்த சிகிச்சையை வாரத்திற்கு 2-3 முறை செய்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய்

* விளக்கெண்ணெயை ப்ரௌன் புள்ளிகள் உள்ள இடத்தில் தடவுங்கள்.

* பின் 10-15 நிமிடம் கழித்து, அப்பகுதியை நீரில் கழுவுங்கள்.

* இந்த முறையை வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள ப்ரௌன் நிற புள்ளிகள் மாயமாய் மறைந்துவிடும்.

தக்காளி

தக்காளி

* நற்பதமான தக்காளியை அரைத்து கூழ் எடுத்து, அதனை ப்ரௌன் நிற புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 20-25 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின் வெதுவெதுப்பான நீரால் அப்பகுதியைக் கழுவ வேண்டும். இந்த சிகிச்சையை தினமும் செய்து வந்தால், சருமத்தில் அசிங்கமாக இருந்த ப்ரௌன் நிற புள்ளிகள் போய்விடும்.

எலுமிச்சை

எலுமிச்சை

* 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை, அசிங்கமாக காணப்படும் ப்ரௌன் நிற புள்ளிகளின் மீது தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் சாதாரண நீரில் கழுவ வேண்டும்.

* இந்த முறையை வாரத்திற்கு 4-5 முறை செய்து வந்தால், சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

சந்தன பவுடர்

சந்தன பவுடர்

* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் சந்தன பவுடர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த பேஸ்ட்டை ப்ரௌன் நிற புள்ளிகளின் மீது தடவி 15 நிமிடம் நன்கு காய வைக்க வேண்டும்.

* பின்பு குளிர்ந்த நீரால் அப்பகுதியைக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், அந்த புள்ளிகள் காணாமல் போய்விடும்.

தயிர்

தயிர்

* தயிர் பல்வேறு சரும பிரச்சனைகளைப் போக்க வல்லது. இதற்கு அதில் உள்ள லாக்டிக் அமிலம் தான் முக்கிய காரணம்.

* தயிரை ப்ரௌன் நிற புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து பின் நீரில் கழுவ வேண்டும்.

* இந்த முறையை தினமும் செய்து வந்தால், சரும பிரச்சனைகள் அகலுவதோடு, ப்ரௌன் நிற புள்ளிகளும் மறைந்துவிடும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

* கற்றாழையின் மருத்துவ குணம் எப்பேற்பட்ட சரும பிரச்சனைகளையும் போக்கும். அதிலும் ப்ரௌன் நிற புள்ளிகளை விரைவில் போக்கும்.

* அதற்கு கற்றாழை ஜெல்லை சருமத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

* இப்படி ஒரு நாளைக்கு பலமுறை செய்து வந்தால், சீக்கிரம் அசிங்கமான ப்ரௌன் நிற புள்ளிகள் மறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing Natural Remedies To Remove Brown Spots On Skin

Do you have prominent brown spots on your skin? Are you still looking for a way to get rid of these spots? Natural remedies are the best solution for this.
Story first published: Thursday, January 4, 2018, 16:15 [IST]
Desktop Bottom Promotion