For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்ன பண்ணினபலும்இத சரி பண்ண முடியலையா?... நீங்க ஏன்இத ட்ரை பண்ணக்கூடாது?...

உங்கள் முகழகுக்கு கூடுதல் அழகூட்டுவது இந்த கழுத்துப் பகுதி தான்.உங்கள் கழுத்தை சுற்றி கருத்து போயிருந்தால் எப்படி உங்கள் முகம் ஜொலிக்கும். எனவே கழுத்தழகுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அ

|

உங்கள் முகத்தை அழகுபடுத்துவதிலயே ஒட்டுமொத்த நேரத்தையும் செலவழிக்கும் நீங்கள் என்றாவது உங்கள் கழுத்தழகை பற்றி கவலை பட்டது உண்டா? உங்கள் முகழகுக்கு கூடுதல் அழகூட்டுவது இந்த கழுத்துப் பகுதி தான். தினமும் கண்ணாடி பார்க்கும் போது முகத்திற்கு மட்டும் ஏகப்பட்ட க்ரீம் மேக்கப் போட்டு வெளியே செல்லும் நாம் மற்றவர்கள் பார்வையில் நம் கழுத்தழகும் இடம்பெறும் என்பதை மறந்தே போய்விடுகிறோம். உங்கள் கழுத்தை சுற்றி கருத்து போயிருந்தால் எப்படி உங்கள் முகம் ஜொலிக்கும். எனவே கழுத்தழகுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்கு தான் நாங்கள் சில டிப்ஸ்களை இங்கே வழங்க உள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தினசரி பராமரிப்பு

தினசரி பராமரிப்பு

உங்கள் கழுத்தை தினசரி பராமரிப்பது முக்கியம். நன்றாக சுத்தம் செய்து அந்த பகுதியில் உள்ள இறந்த செல்களை நீக்கி பராமரித்து வர வேண்டும். இல்லாவிட்டால் அந்த பகுதி கருப்பாக மாறி பார்ப்பதற்கே அசிங்கமாக மாறி விடும்.

பயன்படுத்தும் முறைகள்

பயன்படுத்தும் முறைகள்

பாலை எடுத்து கழுத்துப் பகுதியில் நன்றாக தேய்க்க வேண்டும். இதன் மூலம் கழுத்துப் பகுதி சுத்தமாகி நல்ல நிறம் கிடைக்கும். இதற்கு பிறகு ஆலிவ் ஆயில் மற்றும் சர்க்கரை ஸ்க்ரப் கொண்டு அந்த பகுதியில் உள்ள இறந்த செல்களை நீக்க வேண்டும். இல்லையென்றால் இயற்கை ப்ளீச்சிங் ஏஜெண்ட் ஆன லெமன் ஜூஸ் போன்றவற்றை கூட பயன்படுத்தி கொள்ளலாம். பிறகு தண்ணீரை கொண்டு கழுவி மாய்ஸ்சரைசர் அப்ளே செய்ய வேண்டும். நீங்கள் முகத்திற்கு சன்ஸ்க்ரீன் பயன்படுத்தும் போது கழுத்திற்கும் அதை பயன்படுத்துங்கள். இதன் மூலம் ஆங்காங்கே நிறத்திட்டுகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

குறிப்பு

கழுத்தில் லெமன் ஜூஸ் அப்ளை செய்து சூரிய ஒளியில் செல்லாதீர்கள். அது உங்கள் கழுத்தை இன்னும் கருமையாக்கிவிடும். இந்த முறையைப் பின்பற்றி வந்தால் கழுத்துக் கருமையை நீக்கி விடலாம்.

லெமன் ப்ளீச்

லெமன் ப்ளீச்

இது ஒரு இயற்கையான ப்ளீச்சிங் ஏஜெண்ட். இதிலுள்ள விட்டமின் சி உங்கள் கழுத்தில் உள்ள கருமையை லேசாக்கி சருமத்தை நல்ல நிறமாக்கும்.

முறை 1

தேவையான பொருட்கள்

லெமன் ஜூஸ் - 1 டீ ஸ்பூன்

ரோஸ் வாட்டர் - 1 டீ ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இரவு படுப்பதற்கு முன் இந்த கலவையை கழுத்தில் தடவி கொள்ளுங்கள். அப்படியே விட்டு விடுங்கள்

காலையில் எழுந்ததும் நீரில் கழுவி விடவும். லெமன் ஜூஸ் மற்றும் ரோஸ் வாட்டரை கலந்து ஒரு பாட்டிலில் அடைத்து கூட ஸ்டோர் செய்து வைத்து கொள்ளலாம். ஒரு மாதத்தில் உங்கள் கழுத்துப் பகுதி நல்ல நிறத்தை பெற்றிருக்கும்.

முறை 2:

முறை 2:

தேவையான பொருட்கள்

லெமன் ஜூஸ்

மஞ்சள் தூள் - கொஞ்சம் (விருப்பத்திற்கேற்ப)

காட்டன் பஞ்சு (விருப்பத்திற்கேற்ப)

பயன்படுத்தும் முறை

காட்டன் பஞ்சில் இந்த கலவையை நனைத்து கழுத்து பகுதியில் தடவவும்

10-15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். மஞ்சள் தூள் சேர்த்து பயன்படுத்துவதால் உங்கள் கழுத்துப்பகுதி பளபளக்கும். மஞ்சள் பயன்படுத்தினால் 10-15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

குறிப்பு - லெமன் ஜூஸ் அப்ளே செய்து வெளியில் வெயிலில் செல்ல கூடாது. இது உங்கள் சருமத்தை பாதிக்கும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஓட்ஸ் ஒரு இயற்கை ஸ்க்ரப் மாதிரி செயல்படுகிறது. இதைக் கொண்டு கழுத்தில் படிந்து இருக்கும் கருமை திட்டுகளை எளிதாக நீக்கலாம்.

தேவையான பொருட்கள்

ஓட்ஸ் - கொரகொரவென அரைத்து வைத்து கொள்ளவும்

தக்காளி கூழ்

தண்ணீர்

மாய்ஸ்சரைசர்

பயன்படுத்தும் முறை

ஒட்ஸ்யை கொரகொரவென பவுடராக்கி கொள்ளுங்கள். அதனுடன் தக்காளி கூழை கலந்து கொள்ளவும். இதை கழுத்துப் பகுதி முழுவதும் தடவி கொள்ளவும். 15-20 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். விரல்களை தண்ணீரில் நனைத்து கொண்டு கழுத்தில் வட்ட இயக்கத்தில் தேய்க்க வேண்டும். இதன் மூலம் இறந்த செல்களை நீக்கி விடலாம். 5-7 நிமிடங்கள் பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும்.

மாய்ஸ்சரைசர் அப்ளே செய்து மசாஜ் செய்யவும். இதை வாரத்திற்கு 2-3 நாட்கள் செய்து வந்தால் கழுத்தில் உள்ளஅழுக்கு, இறந்த செல்கள், கருமை எல்லாம் நீங்கி விடும்.

ஓட்ஸ் மாஸ்க்

ஓட்ஸ் மாஸ்க்

இதில் ஓட்ஸ்யை கொரகொரவென அரைக்காமல் நன்றாக பவுடராக அரைத்து பயன்படுத்த வேண்டும்.

ஒட்ஸ் பவுடர் மற்றும் பார்

ஓட்ஸ் பவுடர் மற்றும் தேன்

ஓட்ஸ் பவுடர் மற்றும் யோகார்ட்

மேலே குறிப்பிட்டுள்ள மாஸ்க்கில் ஏதாவது ஒன்றை அப்ளே செய்து 15-20 நிமிடங்கள் அப்படியே வைத்து இருந்து பிறகு தண்ணீரில் கழுவவும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

கழுத்துப் பகுதியில் உள்ள ஹைபர் பிக்மன்டேஷன் (அதிக நிறத்திட்டுகளை) நீக்க இந்த முறை பயன்படுகிறது.

தேவையான பொருட்கள்

பேக்கிங் சோடா

தண்ணீர்

பயன்படுத்தும் முறை

பேக்கிங் சோடா மற்றும் தண்ணீரை கலந்து கொள்ளவும். இதை கழுத்தில் தடவவும்

15 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு தண்ணீரில் கழுவவும்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

இந்த முறை கழுத்துப் பகுதிக்கு ஒரு பொலிவை தருகிறது. மேலும் இறந்த செல்களை நீக்கி கருமையை போக்கிடும்.

தேவையான பொருட்கள்

துருவிய வெள்ளரிக்காய் அல்லது வெள்ளரிக்காய் ஜூஸ்

ரோஸ் வாட்டர்

பயன்படுத்தும் முறை

வெள்ளரிக்காய் துருவலை கழுத்தில் தடவிக் கொள்ளவும். 10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். நன்றாக தேய்த்து ஸ்க்ரப் மாதிரி வெள்ளரிக்காயை பயன்படுத்தவும். தண்ணீர் கொண்டு கழுவி விட்டு கொஞ்சம் ரோஸ் வாட்டர் அப்ளே செய்யவும். அதேபோல் வெள்ளரிக்காய் ஜூஸ் என்றால் ஒரு காட்டன் பஞ்சில் நனைத்து கழுத்தில் தடவி 15-20 நிமிடங்கள் வைத்து இருக்க வேண்டும். கழுவிய பிறகு ரோஸ் வாட்டர் அப்ளே செய்யவும்.

யோகார்ட்

யோகார்ட்

கழுத்தில் அசிங்கமாக இருக்கும் ஏஜ் ஸ்பாட்ஸ்யை போக்க இந்த முறை உதவுகிறது. மேலும் யோகார்ட்டில் உள்ள அமிலம் சருமத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்கும்.

பயன்படுத்தும் முறை

யோகார்ட்டை கழுத்துப் பகுதியில் அப்ளே செய்து 15 நிமிடங்கள் வைத்து இருக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

யோகார்ட் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் வைத்து இருக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

யோகார்ட் மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து அப்ளே செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவவும்

ப்ரஷ் க்ரீம் மற்றும் யோகார்ட் சேர்த்து கழுத்தில் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு மில்க் சோப்பு கொண்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். சோப்பிற்கு பதிலாக வெதுவெதுப்பான நீரில் லெமன் ஜூஸ் கலந்து கூட கழுவிக் கொள்ளலாம். மேலே குறிப்பிட்டுள்ள முறைகளுள் ஒன்றை வாரத்திற்கு 2-3 நாட்கள் பயன்படுத்தி வந்தால் கருமை சருமம் மறைந்து கழுத்துப் பகுதி பளபளக்கும்.

உருளைக் கிழங்கு ஜூஸ்

உருளைக் கிழங்கு ஜூஸ்

உருளைக்கிழங்கு ஒரு இயற்கையான ப்ளீச்சிங் ஏஜெண்ட் ஆகும். இதிலுள்ள என்சைம் கேட்டேகொலேஸ் சருமத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்கிறது. கழுத்தில் ஏற்படும் கோடுகள், பருக்கள் போன்றவற்றையும் போக்குகிறது.

குளிர்ந்த உருளைக்கிழங்கை துண்டு துண்டாக வெட்டி 5-10 நிமிடங்கள் கழுத்துப் பகுதியில் தேய்க்க வேண்டும். இதை 2-3 மாதங்கள் வரை செய்ய வேண்டும்

உருளைக் கிழங்கு ஜூஸ் உடன் லெமன் ஜூஸ் கலந்து கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடங்கள் கழித்து நீரை கொண்டு கழுவவும்.

உருளைக் கிழங்குடன் நீங்கள் மற்ற பராமரிப்பு பொருட்களை சேர்த்து கூட கழுத்துப் பகுதியில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

பழங்கள் மாஸ்க்

பழங்கள் மாஸ்க்

வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி, அவகேடா போன்ற பழங்கள் கழுத்துப் பகுதியை நிற மாக்க உதவுகிறது. இதில் இயற்கையாகவே விட்டமின்கள், மினிரல்கள், என்சைம் கள் உள்ளன.

வாழைப்பழ மாஸ்க்

வாழைப்பழ மாஸ்க்

தேவையான பொருட்கள்

பழுத்த வாழைப்பழம்

ஆலிவ் ஆயில்

பயன்படுத்தும் முறை

வாழைப்பழத்தை நன்றாக மசித்து கூழாக்கி கொள்ளுங்கள். அதனுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ளவும். கழுத்துப் பகுதியில் இதை தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு தண்ணீரை கொண்டு கழுவவும்

இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கழுத்துப் பகுதியில் உள்ள கருமையை போக்கி சருமத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்கும்.

ஸ்ட்ராபெர்ரி பப்பாளி மாஸ்க்

ஸ்ட்ராபெர்ரி பப்பாளி மாஸ்க்

பப்பாளி கூழ் - 1-2 டேபிள் ஸ்பூன்

ஸ்ட்ராபெர்ரி - 2

பயன்படுத்தும் முறை

ஸ்ட்ராபெர்ரியை மசித்து கொள்ளவும். இப்பொழுது இதை பப்பாளி கூழுடன் கலக்கவும். இதை கழுத்துப் பகுதியில் தடவிக் கொள்ளுங்கள். 10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு தண்ணீரை கொண்டு கழுவவும்.

இதிலுள்ள விட்டமின்கள் மினிரல்கள் சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தையும், பப்பாளியில் உள்ள பப்பைன் என்சைம் இறந்த செல்களை நீக்குகிறது. ஸ்ட்ராபெர்ரியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் பாதிக்கப்பட்ட சருமத்தை சரி செய்கிறது.

பப்பாளி மாஸ்க்

பப்பாளி மாஸ்க்

தேவையான பொருட்கள்

பப்பாளி

தண்ணீர்

பயன்படுத்தும் முறை

பப்பாளியை அரைத்து கொள்ளவும். வடிகட்டி கொண்டு ஜூஸை மட்டும் வடிகட்டி கொள்ளுங்கள். கொஞ்சம் தண்ணீர் தேவையென்றால் கலந்து கொள்ளலாம்.

இதை கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும்

பிறகு நீரில் கழுவி விடவும். பப்பாளி பழத்தில் உள்ள என்சைம் புதிய சரும செல்களை தோற்றுவித்து கழுத்துப் பகுதியை அழகாக்குகிறது.

ஆரஞ்சு தோல் மாஸ்க்

ஆரஞ்சு தோல் மாஸ்க்

தேவையான பொருட்கள்

உலர்ந்த ஆரஞ்சு தோல் (நிழலில் மட்டும் காய வையுங்கள்)

பால்

பயன்படுத்தும் முறை

ஆரஞ்சு தோலை அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இதனுடன் பால் சேர்த்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். கழுத்துப் பகுதியில் இதை தடவுங்கள். 15-20 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு தண்ணீரை கொண்டு கழுவி விட வேண்டும். இதிலுள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ப்ளீச்சிங் செய்யப் பயன்படுகிறது. இதனுடன் பால் சேர்க்கும் போது க்ளன்சர் மாதிரி செயல்படுகிறது.

வால்நட் ஸ்க்ரப்

வால்நட் ஸ்க்ரப்

தேவையான பொருட்கள்

வால்நட்ஸ்

பால்

பயன்படுத்தும் முறை

வால்நட்ஸ்யை கொரகொரவென அரைத்து கொள்ளவும். இதனுடன் பால் சேர்க்கவும்

கழுத்துப் பகுதியில் இதை தடவி 10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். விரல்களை கொண்டு நன்றாக 5-7 நிமிடங்கள் தேய்க்கவும்

பிறகு தண்ணீரை கொண்டு கழுவி விட வேண்டும். இதை வாரத்திற்கு 2-4 தடவை செய்து வந்தால் வால்நட்டில் உள்ள விட்டமின்கள் மற்றும் ஜிங்க் இறந்த செல்களை நீக்கி சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கிறது.

பாதாம் மாஸ்க்

பாதாம் மாஸ்க்

இதிலுள்ள விட்டமின்கள் சருமத்திற்கு மாய்ஸ்சரைசர் மாதிரி மிருதுவாக செயல்படுகிறது.

தேவையான பொருட்கள்

பாதாம் பருப்பு

மில்க் பவுடர்

தேன்

பயன்படுத்தும் முறை

பாதாம் பருப்பை நன்றாக பவுடராக்கி கொள்ளவும். இதனுடன் பால் பவுடர், தேன் சேர்த்து கலக்கி பேஸ்ட்டாக்கவும். இதை கழுத்துப் பகுதியில் தடவவும். 1/2 மணி நேரம் அப்படியே வைத்து இருக்கவும். பிறகு நீரைக் கொண்டு கழுவவும்.

கடலை மாவு

கடலை மாவு

கழுத்தில் இருக்கும் கருமையை போக்க இது ஒரு நல்ல ஸ்க்ரப்.

தேவையான பொருட்கள்

கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் - கொஞ்சம்

தண்ணீர்

பயன்படுத்தும் முறை

கடலை மாவை எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் மஞ்சள் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். கழுத்து பகுதியில் தடவவும். 1/2 மணி நேரம் காய விடவும். வெதுவெதுப்பான நீரில் கழுவவும். உங்களுக்கு வறண்ட சருமமாக இருந்தால் இதனுடன் ப்ரஷ் க்ரீம்யை சேர்த்து கொள்ளுங்கள். கடலை மாவு சருமத்தை சுத்தப்படுத்தி, மஞ்சள் கழுத்தில் உள்ள கருமையை போக்குகிறது.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கழுத்தில் உள்ள கருமையை போக்குவதோடு கழுத்து சருமத்திற்கும் நல்ல அழகிய நிறத்தை கொடுக்கிறது. நீங்கள் ப்ரீயா இருக்கும் நாட்களில் இந்த கற்றாழை ஜெல்லை கழுத்துப் பகுதியில் தடவி சிறிது நேரம் உட்கார்ந்து இருந்து கழுவினாலே போதும் உங்கள் கழுத்து பளபளக்கும்.

அரிசி ஸ்டார்ச்

அரிசி ஸ்டார்ச்

அரிசி தண்ணீர் அல்லது அரிசி ஸ்டார்ச் இதுவும் ஒரு சிறந்த முறையாகும்.

தேவையான பொருட்கள்

அரிசி - 1 கப்

தண்ணீர் - 2 கப்

பயன்படுத்தும் முறை

அரிசியை தண்ணீரில் கலக்கவும். அரிசி தண்ணீர் நன்றாக கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும். தண்ணீரையும் அரிசியையும் வடிகட்டி தனித்தனியாக பிரித்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் தான் ஸ்டார்ச் உள்ளது. ஆற விடுங்கள்.

வெதுவெதுப்பாக இருக்கும் போது இந்த வடிகஞ்சியை கழுத்தில் நன்றாக தேய்த்து கொடுங்கள். குளிப்பதற்கு முன் 10 நிமிடங்கள் இதை கொண்டு மசாஜ் செய்யவும்.

கழுத்தில் உள்ள கருப்பு நீங்கி உங்கள் கழுத்தழகும் ஜொலிக்கும்.

இயற்கை எண்ணெய்கள்

இயற்கை எண்ணெய்கள்

இயற்கை எண்ணெய்கள் சருமத்திற்கு ஈரப்பதத்தையையும், புதிய சரும செயல்களையும் உருவாக்குகிறது. விட்டமின் ஈ ஆயில் :சரும பிரச்சினைகளை தீர்க்கிறது.

பாதாம் எண்ணெய் : இறந்த செல்களை நீக்கி கருமையை போக்குகிறது

பாதாம் எண்ணெயை சூடாக்கி கழுத்துப் பகுதியில் 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.

சூடான பாதாம் எண்ணெய் மற்றும் விட்டமின் ஈ ஆயில் சேர்த்து கழுத்துப் பகுதியில் 10 நிமிடங்கள் மசாஜ் செய்து பிறகு கழுவவும். வெதுவெதுப்பான நீரில் கூட கழுவிக் கொள்ளலாம்.

பாதாம், ஆலிவ் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து படுப்பதற்கு முன் கழுத்தில் தடவி வந்தால் நல்ல ஈரப்பதமும் கிடைத்து கழுத்து சருமம் அழகாகும்.

தேங்காய் எண்ணெய் உடன் தண்ணீர் சேர்த்து மசாஜ் செய்து வரலாம்

இதைத் தவிர கெமோமில் ஆயில், யூகாப்லிட்டஸ் ஆயில், ரோஸ் ஆயில் கூட பயன்படுத்தி கொள்ளலாம்.

மில்க் க்ரீம்

மில்க் க்ரீம்

க்ளீன்சர் மற்றும் மாய்ஸ்சரைசர் மாதிரி செயல்படுகிறது

இதனுடன் யோகார்ட் சேர்த்து தினமும் கழுத்தில் தடவி வெதுவெதுப்பான நீரில் அல்லது மைல்டு சோப்பு கொண்டு கழுவி வந்தால் நல்ல கிடைக்கும்

ப்ரஷ் க்ரீம்யை கழுத்தில் தடவி வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

கடலை மாவுடன் ப்ரஷ் க்ரீம் சேர்த்து ஸ்க்ரப் செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

மஞ்சள் மற்றும் ப்ரஷ் கிரீம் சேர்த்து கழுத்தில் தடவினால் பொலிவான கழுத்தழகை பெற இயலும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: neck skin care
English summary

14 Easy Ways to Get Rid of Dark Neck

A dark neck may really put your personality in a poor light. I am not saying that a dark neck comes in between your success but when you can have a clean neck region matching with your sparkling face, why not! Aloe vera gel, yogurt, gram flour, oats, fresh cream, papaya, orange So We use these remedies.
Desktop Bottom Promotion