Latest Updates
-
200 கிராம் பன்னீர் இருந்தா இந்த தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி கிரேவியை செய்யுங்க - டக்கரா இருக்கும் -
1.11 லட்சத்திற்கு விற்கப்படும் இந்தியாவின் காஸ்ட்லியான தீபாவளி ஸ்வீட் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
தீபாவளிக்கு 15 நிமிடத்தில் அதிரசம் செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சிம்ம ராசியில் குரு-செவ்வாய் சேர்க்கை: மார்ச் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழ்வாங்க.. -
தீபாவளிக்கு இந்த அவல் முறுக்கை செஞ்சு பாருங்க - வாரக்கணக்கில் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
புதன்-சுக்கிரனால் உருவாக்கப்படும் லட்சுமி நாராயண யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
எம தீபத்தை எப்போது ஏற்ற வேண்டும்? எந்த இடத்தில் மற்றும் திசையில் ஏற்றி வைக்க வேண்டும்? -
இந்தியாவின் 'ஐஸ்க்ரீம் தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? இங்க தினமும் ஐஸ்க்ரீம் சாப்பிடணுமாம் -
தீபாவளி ஸ்பெஷல் பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
தீபாவளி ஸ்பெஷல் காரசாரமான மட்டன் குழம்பு ரெசிபி - இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - தீபாவளியே ஸ்பெஷலாகிரும்
கோடை வெயிலால் எரியும் சருமத்தைக் குளிரச் செய்யும் சில தர்பூசணி ஃபேஸ் பேக்குகள்!
இங்கு கோடையில் முகத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும் தர்பூசணி ஃபேஸ் பேக் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், மார்கெட்டில் உடலையும், சருமத்தையும் குளிர்ச்சியுடனும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளும் பழங்களின் விற்பனை அதிகரித்துவிட்டது. இதனால் பல பழங்கள் விலைக் குறைவில் கிடைக்கிறது. இப்படி விலைக்குறைவில் பழங்கள் கிடைக்கும் போதே, அவற்றை முடிந்த அளவு சாப்பிட்டும், பயன்படுத்தியும் கொள்வது தான் புத்திசாலித்தனம்.

கோடையில் அளவுக்கு அதிகமாக வியர்வை வெளியேறும். மேலும் வெயிலில் சிறிது நேரம் சென்றாலே, சருமம் பயங்கரமாக எரியும். அதோடு, கோடையில் தான் பருக்கள், வியர்க்குரு போன்ற சரும பிரச்சனைகளை அதிகம் சந்திக்கக்கூடும்.
இக்காலத்தில் விலைக்குறைவில் கிடைக்கும் தர்பூசணியைக் கொண்டு சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், கோடையில் சருமத்தை புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் வைத்துக் கொள்ள முடியும். சரி, இப்போது அந்த தர்பூசணி ஃபேஸ் பேக்குகளைப் பார்ப்போம்.

தர்பூசணி மற்றும் தயிர்
வறட்சியான சருமத்தினருக்கு இது ஏற்றது. தர்பூசணி ஜூஸ் மற்றும் தயிரை சரிசம அளவில் எடுத்துக் கொண்டு, முகம், கழுத்து, கை, கால்களில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இதனால் தயிர் சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றும் மற்றும் தர்பூசணி சரும செல்களில் உள்ள பாதிப்பை சரிசெய்யும்.

தர்பூசணி மற்றும் வாழைப்பழம்
வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் தர்பூசணி சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் மட்டுமின்றி கை, கால் முழுவதும் தடவி, ஊற வைத்துக் கழுவுங்கள். இதனால் சருமத்தின் ஈரப்பசை தக்க வைக்கப்படுவதோடு, முகப்பரு பிரச்சனையும் தடுக்கப்படும்.

தர்பூசணி மற்றும் அவகேடோ
தர்பூசணி மற்றும் அவகேடோ இரண்டிலுமே வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் உள்ளது. முக்கியமாக அவகேடோவில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது முதுமையைத் தடுக்கும். அதற்கு அவகேடோ மற்றும் தர்பூசணி சாற்றினை ஒன்றாக கலந்து, முகத்திற்கு பயன்படுத்தி, ஊற வைத்து கழுவ வேண்டும்.

தர்பூசணி மற்றும் தேன்
கோடையிலும் சரும வறட்சியை சந்திப்பவர்களுக்கு இந்த ஃபேஸ் பேக் சிறந்தது. அதற்கு தர்பூசணி சாற்றுடன் சிறிது தேன் கலந்து, முகம், கை, கால்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் தேன் சருமத்தில் ஈரப்பசையை தக்க வைப்பதோடு, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கும்.

தர்பூசணி மற்றும் வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணியை அரைத்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி 20 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் வெயிலால் பாதிக்கப்பட்ட சரும செல்கள் புத்துயிர் பெறுவதோடு, சரும எரிச்சலும் தடுக்கப்படும்.

தர்பூசணி மற்றும் பால் பவுடர்
பால் பவுடரை தர்பூசணி சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும். இதனால் வெயிலால் சருமத்தில் ஏற்படும் எரிச்சல் குறைவதோடு, சரும கருமையும் நீங்கும்.



Click it and Unblock the Notifications
