முகத்தில் அசிங்கமாக இருக்கும் கருமைப் புள்ளிகளை மறைக்க உதவும் சில வழிகள்!

Posted By:
Subscribe to Boldsky

நல்ல அழகான முகத்தைப் பெற தான் அனைவருமே விரும்புவோம். ஆனால் அம்மாதிரியான முகம் அனைவருக்குமே அமைவதில்லை. சிலருக்கு முகத்தில் ஆங்காங்கு கருமையான புள்ளிகள் இருக்கும். இது முதுமைத் தோற்றத்தைத் தருவதோடு, தினமும் கண்ணாடியில் முகத்தைப் பார்க்கும் போது, நாம் அசிங்கமாக இருக்கிறோம் என்ற எண்ணத்தை உருவாக்கி, மனக் கஷ்டத்தை ஏற்படுத்தும்.

Simple & Most Trusted Home Remedies For Hyperpigmentation

இப்படி முகத்தில் அசிங்கமாக இருக்கும் கருமையான புள்ளிகளைப் போக்க கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட பொருட்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை வழிகளை நாடினால், விரைவில் நல்ல பலன் கிடைப்பதோடு, சரும ஆரோக்கியமும் மேம்படும்.

சரி, இப்போது முகத்தில் உள்ள கருமையான புள்ளிகளைப் போக்க உதவும் சில வழிகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால்

பால்

பாலில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தில் உள்ள கருமையை மறைக்க உதவும். அதற்கு தினமும் பாலை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீர் பயன்படுத்தி துடைத்து எடுக்க வேண்டும். இப்படி அன்றாடம் செய்வதன் மூலம், கருமையான புள்ளிகளை விரைவில் மறைக்கலாம்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் பொருட்கள், சரும நிறத்தை அதிகரிக்க உதவும். அதற்கு எலுமிச்சை சாற்றினை நீரில் சரிசம அளவில் கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். சென்சிடிவ் சருமத்தினர் இம்முறையைக் கையாள வேண்டாம்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல் சருமத்தின் வறட்சியைக் கட்டுப்படுத்துவதோடு, கருமையான புள்ளிகளையும் மறைக்கும். அதற்கு தினமும் இரவில் படுக்கும் முன், கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவிக் கொள்ளுங்கள்.

கடலை மாவு

கடலை மாவு

கடலை மாவை முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் இருக்கும் அசிங்கமான புள்ளிகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கிவிடும்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராப்பெர்ரியில் உள்ள அமிலம், சரும கருமையைப் போக்க உதவும். அதற்கு ஸ்ட்ராபெர்ரியை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் கழித்துக் கழுவ வேண்டும்.

பப்பாளி

பப்பாளி

பப்பாளியில் உள்ள நொதிகள், சருமத்தில் இருக்கும் கருமையான புள்ளிகளைப் போக்க வல்லது. எனவே பப்பாளியை அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவுங்கள். இதனால் கருமையான புள்ளிகள் நீங்குவதோடு, முகத்தில் உள்ள முடியின் வளர்ச்சியும் தடுக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Simple & Most Trusted Home Remedies For Hyperpigmentation

Here's how you can get rid of hyperpigmentation at home. Read on to know more...
Story first published: Thursday, February 16, 2017, 13:39 [IST]
Subscribe Newsletter