விரைவில் தழும்புகளை போக்கி பளிச்சென சருமம் பெற தேங்காய் எண்ணெய்யை இப்படி யூஸ் பண்ணுங்க!

Written By:
Subscribe to Boldsky

இன்று அனைவரும் மாசு மருக்கள் இல்லாத தூய சருமத்தையே விரும்புகின்றனர். நிறம் அதிகமாக இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை. மாசு மருக்கள் இல்லாத தூய மென்மையான சருமம் மட்டும் இருந்தால் போதும் என்பதே பலரின் கருத்தாகும். சற்று நிறமாக இருப்பவர்களுக்கு சிவப்பு, வெள்ளை கலரில் தழும்புகள் இருந்தால் அது சற்று அசிங்கமாக இருக்கும்.

இதனை தேங்காய் எண்ணெய் கொண்டு மறைய செய்ய முடியும். தேங்காய் எண்ணெய் புண்களை கூட ஆற்றும் தன்மை கொண்டது. முகத்தில் உள்ள தழும்புகளை போக்க தேங்காய் எண்ணெய்யை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. தேங்காய் எண்ணெய் மசாஜ்

1. தேங்காய் எண்ணெய் மசாஜ்

சில துளிகள் சுத்தமான தேங்காய் எண்ணெய்யை எடுத்து அதனை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி நன்றாக மசாஜ் செய்யுங்கள். சருமத்தில் தேங்காய் எண்ணெய் நன்றாக உறிஞ்சப்படும் வரை விட்டுவிட்டு, பின்னர் முகத்தை கழுவி விட வேண்டும். இதனை தினமும் செய்யலாம்.

2. தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணை

2. தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணை

தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணையை சம அளவு கலந்து, பாதிக்கப்பட்ட இடங்களில் நன்றாக மசாஜ் செய்து, சருமத்தில் எண்ணெய் உறிஞ்சப்படும் வரை விட்டுவிட்டு, பின்னர் முகத்தினை நன்றாக கழுவி விட வேண்டும். இதனை தினமும் செய்து வர நல்ல பலன் தெரியும்.

3. தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள்

3. தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள்

தேங்காய் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் 1 டீஸ்பூன் எலுமிச்சையை சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையை தழும்புகள் உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து இதனை கழுவி விட வேண்டும். இந்த முறையை தினமும் செய்யலாம். கூடுதல் பலன் பெற இதனுடன் எலுமிச்சை சாறும் சேர்த்துக்கொள்ளலாம்.

4. தேங்காய் எண்ணெய், உப்பு மற்றும் சர்க்கரை

4. தேங்காய் எண்ணெய், உப்பு மற்றும் சர்க்கரை

ஒரு கப் தேங்காய் எண்ணெய்யுடன், உப்பு மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் இட்டு 5 நிமிடங்கள் நன்றாக தேய்க்க வேண்டும். 10 நிமிடங்கள் இந்த பேஸ்ட்டை முகத்திலேயே விட்டுவிட வேண்டும். பின்னர் முகத்தை சுத்தமான நீரினால் கழுவிவிடுங்கள். இதனையும் தினமும் செய்ய நல்ல பலன் கண்கூடாக தெரியும்.

5. தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில்

5. தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில்

சம அளவு தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயிலை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை பாதிக்கப்பட்ட இடங்களில் தேய்க்க வேண்டும். சருமம் எண்ணெய்யை உறிஞ்சும் வரை காத்திருந்து பின்னர் முகத்தை கழுவிக்கொள்ளுங்கள்.

6. பாதுகாப்பானது

6. பாதுகாப்பானது

நவீன மருத்துவத்தில் தழும்புகளை போக்க ஏராளமான மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் இருக்கின்றன. ஆனால் எப்போதுமே இயற்கை மருத்துவம் தான் சருமத்திற்கு ஆரோக்கியமானது. தேங்காய் எண்ணெய் மிகச்சிறந்த ஒரு மருந்தாக அமைகிறது.

7. பயன்கள்

7. பயன்கள்

தேங்காய் எண்ணெய் தழும்புகளுக்கு மட்டும் இல்லாமல் முழு சரும பிரச்சனைகளையும் போக்க உதவுகிறது. இதில் தொற்றுக்களை எதிர்க்கும் தன்மை உள்ளது. இதில் உள்ள விட்டமின் ஈ மற்றும் விட்டமின் கே ஆகியவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை போக்குவதன் மூலம் தழும்புகளை நீக்குகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

scar removal treatments using coconut oil

scar removal treatments using coconut oil
Story first published: Friday, August 11, 2017, 11:08 [IST]