For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்ன தான் செஞ்சாலும் இந்த பரு போகாம தொல்லை பண்ணுதா? இத டிரை பண்ணுங்க!

முகப்பருக்கள் போக சில குறிப்புகள்

By Lakshmi
|

முகப்பருக்கள் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் வரக்கூடியதாகும். 13 வயதில் இருந்தே முகப்பருக்களினால் 15 சதவீதம் பேர் முகப்பருக்களினால் பாதிக்கப்படுகின்றனர். இந்த முகப்பருக்களை கிள்ளிவிடுவது போன்றவை முகப்பரு தழும்புகளை உண்டாக்குகின்றன. இதனை செய்யாமல் இருப்பது நல்லது. எண்ணெய் சருமம் முகப்பருக்களை உண்டாக்குகிறது. மாசடைந்த காற்று, தூசி, புகை போன்றவற்றின் மூலமாகவும் முகப்பருக்கள் ஏற்படுகின்றன. வெளியில் செல்லும் போது, ஸ்கார்ப் அணிந்து செல்வது தூசி புகை போன்றவற்றினால் முகத்தில் பருக்கள் வருவதை தடுக்கிறது. இந்த பகுதியில் முகப்பருக்களில் இருந்து தப்பிக்க சில முக்கிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. ஆவி பிடித்தல்

1. ஆவி பிடித்தல்

சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளைப் போக்க ஆவிப்பிடிப்பது முக்கியமான ஒன்றாகும். ஆவிப்பிடித்தால், முகத்துவாரங்கள் திறந்து, அதில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் தளர்ந்துவிடும். இவ்வாறு செய்வதன் மூலம் பருக்களை உண்டாக்கும் மாசுக்கள் மற்றும் இறந்த செல்கள் முழுவதுமாக வெளியேறி விடலாம்.

2. வாழைப்பழ தோல்

2. வாழைப்பழ தோல்

வாழைப்பழத்தின் தோலை அரைத்து, அதில் சிறிது தயிர் சேர்த்து முகத்திற்கு தடவி ஊற வைக்க வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழித்து கழுவினால், முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளில் இருந்து விடைபெறலாம்.

3. கிராம்பு

3. கிராம்பு

கிராம்பும் பருக்களை போக்கக்கூடிய பொருட்களில் ஒன்றாகும். முதலில் கிராம்பை நீரில் போட்டு கொதிக்கவிட்டு பின்னர் குளிர வைத்து விடவேண்டும், பிறகு அதனை எடுத்து அரைத்து, பருக்கள் உள்ள இடங்களில் தடவி சில நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

4. தக்காளி

4. தக்காளி

தக்காளியும் சருமத்தை சுத்தப்படுத்தி, அழகாக வைத்துக் கொள்ள உதவும் சிறப்பான ஒரு பொருள். எனவே தினமும் தக்காளி துண்டைக் கொண்டு, சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவினால், முகப்பருக்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட தழும்புகளில் இருந்தும் விடுபடலாம்.

5. சந்தன பொடி

5. சந்தன பொடி

சந்தனப் பொடியுடன், தயிர், கடலை மாவு மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், பருக்கள் நீங்குவதோடு, முகமும் பொலிவு பெறும்.

6. தேன் மற்றும் பால்

6. தேன் மற்றும் பால்

தேனைக் கொண்டு பருக்கள் உள்ள இடங்களில் மசாஜ் செய்து ஊற வைத்த பின்னர் பால் கொண்டு முதலில் கழுவி, அதன் பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால்,சரும வறட்சியை தவிர்ப்பதோடு, பருக்களையும் போக்கலாம்.

7. எலுமிச்சை சாறு

7. எலுமிச்சை சாறு

எலுமிச்சையின் சாற்றினைக் கொண்டு, பரு உள்ள இடத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவி வர பருக்கள் நீங்கி முகம் பொலிவு பெரும்.

8. பேக்கிங் சோடா

8. பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பருக்களை எளிதில் நீக்கிவிடலாம்.

9. தண்ணீர் குடிக்கவும்

9. தண்ணீர் குடிக்கவும்

சருமம் பொலிவோடு இருக்க வேண்டுமெனில், உடலில் உள்ள நச்சுக்களை முழுவதும் வெளியேற்ற வேண்டும். அதற்கு தினமும் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இதனாலும் பருக்களில் இருந்து தப்பிக்கலாம்.

10. அடிக்கடி முகத்தை கழுவுதல்

10. அடிக்கடி முகத்தை கழுவுதல்

அடிக்கடி முகத்தை கழுவுவதன் மூலம் சருமத்தில் படியும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள், எண்ணெய் சுரப்பிகளில் இருந்து வெளியேறும் எண்ணெய்களில் கலந்து முகப்பரு உருவாக்குவதில் இருந்து தடுக்கலாம்.

11. பப்பாளி பால்

11. பப்பாளி பால்

பப்பாளி மரத்திலிருந்து எதை உடைத்தாலும் பால் வரும். அதைச் சிறிதளவு சேகரித்து அத்துடன் கொஞ்சம் தண்ணீரையும் சேர்க்கவும். இந்தக் கலவையில் சிறிதளவு சீரகத்தை ஊறப் போடவும். இதை கால் மணி நேரம் வைத்திருக்கவும். பின் முகப்பரு எங்கே உள்ளதோ அங்கே இக்கலவையை நன்றாகத் தடவி விடவும். முகப்பருக்கள் மறைந்து, இருந்த சுவடு தெரியாமல் போய்விடும்.

12. மஞ்சள், வேப்பில்லை

12. மஞ்சள், வேப்பில்லை

மஞ்சள் மற்றும் வேப்பில்லையை ஒன்றாக வைத்து ஒன்றாக அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இதனால் முகத்தில் உள்ள பருக்கள் அகலும். அதோடு முகம் பளபளப்பாகவும் இருக்கும்.

13. களிம்பு

13. களிம்பு

முகத்தில் எந்தக் களிம்பைப் (ஆயில்மென்ட்) பூசினாலும், 20 நிமிடங்களுக்கு மேல் அதை வைத்திருக்கக் கூடாது. காரணம், அதற்கு மேல் களிம்பு தங்கினால், அதில் தூசு சுலபமாக ஒட்டிக்கொள்ள, எண்ணெய்ச் சுரப்பிகள் அடைபட்டு முகப்பருவுக்கு வழி அமைத்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

pimple care natural remedies

pimple care natural remedies
Story first published: Tuesday, October 31, 2017, 12:39 [IST]
Desktop Bottom Promotion