காலை முதல் மாலை வரை உங்கள் முகம் புத்துணர்வோடு இருக்க அழகுக் குறிப்புகள்!!

Posted By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

உங்கள் முகங்களின் தன்மையை பொருத்து ஒவ்வொருவரும் இரவில் தூங்கி காலையில் எழும் போது கருமை மற்றும் வறண்ட சருமத்துடன் காணப்படுவீர்கள். நிறைய பேர்கள் காலையில எழும் போது அவர்களின் சருமம் மோசமான தன்மையுடன் காணப்படுகிறது.

எனவே உங்களுக்காகவே தமிழ் போல்டு ஸ்கை இதற்காக சில குறிப்புகளை வழங்க உள்ளது. இந்த குறிப்புகள் உங்கள் சருமத்தை அழகாக்கி பொலிவுறச் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Natural Remedies That Can Make Your Facial Skin Look Better By Morning

இந்த இயற்கை பொருட்களில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் புதுப்பிக்கும் பொருட்கள் எல்லாம் சேர்ந்து உங்கள் சரும பிரச்சினைகளை எதிர்த்து போரிடுகிறது.

நீங்கள் இரவில் பயன்படுத்தும் விலை உயர்ந்த அழகு க்ரீம்களை விட இந்த இயற்கை பொருட்கள் விலை குறைந்த மற்றும் பாதுகாப்பான பொருளாகவும் உள்ளது.

இது உங்கள் இரவு நேர சருமத்தை பாதுகாத்து அதன் அழகு விஷயங்களை அப்படியே வைத்திருக்க உதவுகிறது.

சரி வாங்க அந்த இயற்கை பொருட்களை பற்றி பார்க்கலாம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் உள்ள அதிகபட்ச நீர்ச்சத்து உங்கள் சருமத்தை இரவு முழுவதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. எனவே காலையில் எழும் போது நீங்கள் ஒரு விதமான புத்துணர்வை பெறுவீர்கள்.

பயன்படுத்தும் முறை

வெள்ளரிக்காயை நறுக்கி பிறகு மசித்து கொள்ள வேண்டும். பிறகு தூங்குவதற்கு முன்பு உங்கள் சுத்தமான முகத்தில் இந்த பேஸ்ட்டை நன்றாக தடவிக் கொள்ள வேண்டும். பிறகு காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும். இப்படி செய்தால் காலையில் உங்கள் முகம் புத்துணர்வுடன் பளபளக்கும்.

தக்காளி

தக்காளி

தக்காளி உங்கள் முகச் சருமத்தை புதிப்பொலிவாக்க உதவுகிறது. ஒரே இரவில் நல்ல ஜொலி ஜொலிப்பான சருமத்தை பெற முடியும்.

பயன்படுத்தும் முறை

இரவில் படுப்பதற்கு முன் தக்காளி சாறை பிழிந்து உங்கள் முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும். அப்படியே இரவில் தூங்கி விடுங்கள். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

இந்த ஜெல் சரும பிரச்சினைகளை சரி செய்யும் பொருளாக பயன்படுகிறது. இதை இரவில் தடவி விட்டு தூங்கும் போது உங்கள் முகத்திற்கு இயற்கையாகவே ஈரப்பதத்தை கொடுத்து ஜொலி ஜொலிக்க வைக்கிறது.

பயன்படுத்தும் முறை

கற்றாழை ஜெல்லை தனியாக பிரித்தெடுத்து உங்கள் முகம் முழுவதும் நன்றாக தடவ வேண்டும். இந்த மாஸ்க் கண்டிப்பாக இரவு முழுவதும் உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். பிறகு காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

இது மற்றொரு இயற்கை அழகு பொருளாகும். இந்த பழத்தில் முகத்தை பளபளப்பாக்கும் பொருள் உள்ளது. இந்த பொருட்கள் காலையில் எழும் போது உங்கள் முகத்தை ஜொலிக்க வைக்கிறது.

பயன்படுத்தும் முறை

ஸ்ட்ராபெர்ரி பழத்தை நன்றாக மசித்து அதன் பேஸ்ட்டை இரவில் படுப்பதற்கு முன் முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும். இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும். பிறகு காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

 பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்யில் இயற்கையாகவே ஈரப்பதத்தை கொடுக்கும் தன்மை உள்ளது. இதனால் காலையில் எழும் போது கண்டிப்பாக புத்துணர்வுள்ள முகழகு கிடைக்கும்.

பயன்படுத்தும் முறை

இரவில் படுப்பதற்கு முன் உங்கள் முகத்தில் சிறிது அளவு பாதாம் எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும் மைல்டு க்ளீன்சர் மற்றும் வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவ வேண்டும். நல்ல ஈரப்பதம் உள்ள மென்மையான சருமத்தை பெறலாம்.

பால் க்ரீம்

பால் க்ரீம்

காலையில் எழும் போது அழகான சருமம் மற்றும் மென்மையான முகம் கிடைக்க மில்க் க்ரீம் மிகவும் சிறந்தது. இரவு முழுவதும் இந்த கலவை நன்றாக செயல்பட்டு சரும பிரச்சினைகளை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படுகிறது.

பயன்படுத்தும் முறை

1/2 டீ ஸ்பூன் பால் க்ரீம் மற்றும் 3-4 துளிகள் லெமன் ஜூஸ் கலந்து கொள்ள வேண்டும். இரவில் படுப்பதற்கு முன் இந்த கலவையை முகத்தில் தடவி கொள்ள வேண்டும். இந்த கலவை இரவு முழுவதும் நன்றாக செயல்பட்டு பளபளக்கும் முகத்தை கொடுக்கிறது. காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும்.

 ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள் உங்கள் முகத்திற்கு இரவு நேரத்தில் சரியான ஈரப்பதத்தை கொடுக்கும் மிகச் சிறந்த பொருளாகும். இந்த ஆப்பிள் சாறு நன்றாக சருமத்தின் துளைகளில் ஊடுருவி அழுக்குகளை நீக்குகிறது. இதனால் உங்கள் முகம் சுத்தமாக இருக்கும்.

பயன்படுத்தும் முறை

ஆப்பிளை துண்டுகளாக நறுக்கி பிறகு மசித்து கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் 1/2 டீ ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி கொள்ளவும். இரவு முழுவதும் நன்றாக உலர விடவும். பிறகு காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவும்.

விட்டமின் ஈ எண்ணெய்

விட்டமின் ஈ எண்ணெய்

விட்டமின் ஈ எண்ணெய் சருமத்திற்கு மிகவும் சிறந்தது. இந்த எண்ணெய் இரவில் சருமத்தால் உறிஞ்சப்பட்டு சரும பிரச்சினைகளை சரி செய்கிறது.

பயன்படுத்தும் முறை

விட்டமின் ஈ மாத்திரையில் உள்ள எண்ணெய்யை எடுத்து முகத்தில் இரவில் தடவிக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Natural Remedies That Can Make Your Facial Skin Look Better By Morning

Natural Remedies That Can Make Your Facial Skin Look Better By Morning
Story first published: Tuesday, November 28, 2017, 19:25 [IST]