அம்மை தழும்புகளை இருந்த இடம் தெரியாமல் செய்யும் இயற்கை பொருட்கள்!

Written By: Lakshmi
Subscribe to Boldsky

முகத்தில் மாசு மருக்கள் இல்லாமல் இருக்கும் சருமத்தை பெறவே அனைவரும் விரும்புகிறார்கள். சிலருக்கு அம்மை வந்திருக்கும். இது சில நாட்களில் குணமாகிவிடும். ஆனால் இதன் தழும்புகளில் இருந்து விடுதலை பெறுவது குதிரை கொம்பாக தான் இருக்கும். சிறிய வயதில் வந்த அம்மையின் தழும்புகள் கூட இன்றும் சிலருக்கு இருப்பதை காணலாம். இதிலிருந்து விடுபட வீட்டிலேயே செய்யக்கூடிய சில டிப்ஸ்களை காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. ஓட்ஸ்

1. ஓட்ஸ்

டயட்டை கடைபிடிப்பவர்கள் ஓட்ஸ் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். இதில் பைபர் நிறைந்துள்ளது. ஓட்ஸ் அம்மை தழும்புகளை போக்குவதிலும் உதவுகிறது.

பயன்படுத்தும் முறை:

ஒட்ஸை மிதமான சூடுள்ள நீரில் கலந்து கொள்ளவும். இந்த பேஸ்டின் சூடு ஆறியதும் முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். தழும்புகள் உள்ள இடத்தில் நன்றாக மசாஜ் செய்து 10 நிமிடங்கள் கழித்து முகத்தை மிதமான சூடுள்ள நீரில் கழுவி விட வேண்டும்.

2. பேக்கிங் சோடா

2. பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா பலகாரங்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இது சருமத்தில் பயன்படுத்துவதற்கும் சிறந்தது. இது முகத்தில் அரிப்பு உண்டாவதை தடுக்கிறது. இதனை கொண்டு முகத்தில் உள்ள தழும்புகளை எவ்வாறு நீக்குவது என காணலாம்.

பயன்படுத்தும் முறை:

இரண்டு டிஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு கப் தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். இது பேஸ்டாக ஆகும் வரை நன்றாக கலந்து தழும்புகள் உள்ள இடங்களில் தடவ வேண்டும். பின்னர் சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவிக்கொள்ள வேண்டும்.

3. தேங்காய் தண்ணீர்

3. தேங்காய் தண்ணீர்

தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருக்கும். நீங்கள் அம்மை தழும்புகளை போக்கவும் இதனை பயன்படுத்தலாம். இதில் நிறைய சத்துக்கள் உள்ளன. இதில் மினரல்கள் மற்றும் விட்டமின்கள் அதிக அளவில் இருப்பதால் இது சரும ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

பயன்படுத்தும் முறை:

தேங்காய் தண்ணீரை தழும்புகள் உள்ள இடங்களில் தடவுங்கள். இல்லை என்றால் நீங்கள் முகம் கழுவ பயன்படுத்தும் தண்ணீரில் இதை கலந்து உபயோகப்படுத்துங்கள். தினமும் தேங்காய் தண்ணீர் குடிப்பதும் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

4. தேன்

4. தேன்

தேனீக்களால் இயற்கையான முறையில் உருவாக்கப்படுவது தேன் ஆகும். இது சருமத்திற்கு பல விதங்களில் நன்மை தருகிறது. இது சருமத்திற்கு இயற்கையாகவே ஈரப்பதத்தை அளிக்கிறது. இது சருமத்தின் உள்ளே இருக்கும் ஆரோக்கியமான செல்களை வெளியே வர வைத்து தழும்புகளை போக்க உதவுகிறது.

பயன்படுத்தும் முறை:

நீங்கள் தேன் மற்றும் ஒட்ஸ் இரண்டையும் கலந்து பயன்படுத்துவது சிறந்த பலனை தரும். தேன் மற்றும் ஓட்ஸ் கலந்த கலவையை அம்மை தழும்புகளால் பாதிக்கப்பட்ட இடங்களில் தடவ வேண்டும். பின்னர் தழும்புகள் உள்ள இடங்களில் அழுத்தமாக தேய்க்க வேண்டும். இதனை அரை மணி நேரம் கழித்து சுத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும்.

5. பப்பாளி

5. பப்பாளி

பப்பாளி பொதுவாக செரிமானத்திற்கு உதவுகிறது. இது அம்மை தழும்புகளை போக்கவும் உதவுகிறது. இது முகத்தில் உள்ள இறந்த செல்களை நீங்குவதன் மூலம் முகத்திற்கு ஜொலிப்பை கொடுத்து முகத்தை பிரகாசமாக்குகிறது.

பயன்படுத்தும் முறை:

ஃபிரஷ் ஆன பப்பாளியுடன் கரும்பு சக்கரை மற்றும் பாலை நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் நன்றாக தடவ வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழித்து மிதமான சோப்பு போட்டு சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவி விட வேண்டும்.

6. கற்றாளை

6. கற்றாளை

கற்றாளையில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. இது சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாத்து முகத்திற்கு ஈரப்பதம் அளிக்கிறது. இதில் உள்ள அதீத மருத்துவ குணங்களால் இது தலைக்கும் சரும ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.

பயன்படுத்தும் முறை:

கற்றாளையின் ஜெல்லை நன்றாக முகத்தில் அப்ளை செய்து அதனை மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் அது காயும் வரை விட்டு விட வேண்டும். பின்னர் முகத்தை கழுவி விட வேண்டும். இந்த முறையை தினமும் மூன்று அல்லது இரண்டு முறைகள் தினமும் செய்து வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.

7. எலுமிச்சை

7. எலுமிச்சை

எலுமிச்சையில் சிட்ரஸ் அமிலம் கலந்துள்ளது. இது சருமத்தின் நிறத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது. இயற்கையான பிளிச்சிங் ஏஜென்ட்டாக இது செயல்படுகிறது. இதனை அம்மை தழும்புகளை போக்க எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றி காணலாம்.

பயன்படுத்தும் முறை:

எலுமிச்சையின் சாற்றை பஞ்சில் நனைத்து முகத்தில் தழும்புகள் உள்ள இடத்தில் வைத்து தேய்க்க வேண்டும். பின்னர் இதனை 15 நிமிடங்கள் விட்டுவிட வேண்டும். பின்னர் நீரினால் முகத்தை கழுவி விட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Home Remedies For Chicken Pox Scars

Natural Home Remedies For Chicken Pox Scars
Story first published: Wednesday, June 21, 2017, 10:00 [IST]