மேடிட்ட தழும்பை மறையச் செய்யும் சில எளிய வீட்டு சிகிச்சை முறைகள்!!

By: Balakarthik Balasubramanian
Subscribe to Boldsky

இந்த உலகமானது நிலையாக இயங்கிக் கொண்டிருக்க, விபத்துக்கள் என்பது பெரும்பாலும் ஏற்பட, அறுவை சிகிச்சைகளும் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. இந்த அறுவை சிகிச்சையிலிருந்து நாம் முற்றிலும் மீள, வாரங்கள் ஆகிறது.

ஒரே வாரத்தில் சருமத்தில் இருக்கும் அசிங்கமான தழும்புகளைப் போக்க வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க.

இத்தகைய அறுவை சிகிச்சையிலிருந்து முற்றிலும் குணமடைய நம் சருமம் கொஞ்சம் அதிகமாகவே நேரத்தை எடுத்து கொள்கிறது. மேலும் இந்த அறுவை சிகிச்சை வடுவானது ஒழுங்காக சரி ஆவதும் கிடையாது.

அதனால், குணமடையும் பகுதிக்கு வெளிப்புறத்தில் தடித்த திசுக்களும் உருவாகிறது. இந்த வெளியில் வளரும் நாற் போன்ற திசுவினை தான் நாம் 'வளர்வடு' என்றழைக்கிறோம்.

Keloids – Simple Home Remedies To Get Rid Of It

மேடிட்ட தழும்பு என்பது திடமான ரப்பர் போன்ற, தொடுவதற்கு மிருதுவாக வளரும் ஒன்றாகும். இருப்பினும், இது வலிப்பதில்லை, சில வளர்வடுக்கள் மட்டும் நாம் தொடும்போது லேசாக வலிக்க கூடும்.

இது நார் கொண்டு உருவாக அதனை நாம் 'இணைப்புத்திசு வெண்புரதம்' என்றும் அழைக்கிறோம்.

இந்த இணைப்புத்திசு வெண்புரதமானது காயம்பட்ட பகுதிக்கு வெளியே உருவாகிறது. அதுமட்டுமல்லாமல், வளர்வடுவும் காயப் பகுதியில் உண்டாகும் பொதுவான பிரச்சனையாகும். இவ்வாறு அந்த பகுதி காணப்பட, அரிப்பு, முகப்பரு, மற்றும் துளையிடுதல் பிரச்சனையும் உண்டாகிறது. சில பதிவுகளின்படி, இந்த வளர்வடுவானது தங்கம், பிளாட்டினம் போன்ற உலோக பயன்பாட்டின் அலெர்ஜியினால் உண்டாவதாக கூறுகிறது.

தழும்பை போக்க பல வகையான சிகிச்சைகள் காணப்படுகிறது. க்ரையோதெரபி எனப்படும் சிகிச்சையின் மூலமாக, மருந்தை செலுத்தி, கதிர்வீச்சு அல்லது அறுவை சிகிச்சையின் மூலமாக இதனை நாம் நீக்கலாம். ஆனால், இத்தகைய சிகிச்சைகளுக்கு அதிக பணம் தேவைப்படுகிறது.

இதனால் முழுவதுமான தீர்வு கிடைக்குமா என்பதும் உறுதியாக சொல்ல இயலாது. அதனால், இயற்கை தீர்வுகள் தான் இவற்றிற்கு சிறந்த வழியாக அமைகிறது.

கீழ்க்காணும் பத்திகளின் மூலமாக வளர்வடுவிற்கான தீர்வினை தரும் இயற்கை மூலப்பொருட்களை பார்ப்பதோடு அவை நம் வீட்டில் எளிதாக கிடைக்க கூடியது என்பதையும் தெரிந்துகொள்வோம். இவை நமக்கு முற்றிலும் பாதுகாப்பாக அமைய, இதனால் ஏற்படும் நல்ல விளைவுகளும் அதிகமே. வாருங்கள் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 கற்றாழை :

கற்றாழை :

அலோ வேரா சுத்தமாக இருப்பின், வளர்வடுவை சிறந்த முறையில் நீக்குகிறது. ப்ரெஷ்ஷான கற்றாழை ஜெல்லை கொண்டு வளர்வடுவை நாம் எப்படி நீக்குவது என கீழே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கற்றாழை ஜெல் (தூய்மையானது, நறுக்கப்பட்டது)

வைட்டமின் E - 1 மாத்திரை

கொக்கோ வெண்ணெய் - 1 டீ ஸ்பூன்

செய்முறை:

1. முதலில் மேலே குறிப்பிட்டிருக்கும் அனைத்து மூலப்பொருட்களையும் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

2. அதனை, பாதிக்கப்பட்ட பகுதியில் தேய்த்து, சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும்.

3. ஒரு நாளைக்கு இரண்டு தடவை என இம்முறையை தினமும் பின்பற்ற வேண்டும்.

வெங்காயம்:

வெங்காயம்:

‘க்யூயர்சிடின்' எனும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்பு கொண்ட வெங்காயம், இணைப்புத்திசு வெண்புரத உற்பத்தியை குறைக்க உதவுகிறது. அதோடுமட்டுமல்லாமல், வளர்வடுவின் தோற்றத்தையும் குறைக்கிறது.

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 1

செய்முறை:

1. வெங்காயத்தை நறுக்கி பிழிந்து கொள்ள வேண்டும்.

2. அந்த சாறை கொண்டு பாதிக்கப்பட்ட பகுதியில் தேய்க்க வேண்டும்.

3. ஒரு நாளைக்கு பல முறை என பத்து முதல் இருபத்தைந்து நாட்கள் வரை இதனை செய்து வர, வித்தியாசத்தை நீங்களே காண்பீர்கள்.

எலுமிச்சை ஜூஸ்:

எலுமிச்சை ஜூஸ்:

இந்த எழுமிச்சையில் வைட்டமின் சி இருப்பதால், வடுவை லேசாக்குவதோடு, அதன்பிறகு கவனத்தையும் குறைவாகவே செலுத்த வைக்கிறது. மேலும், உள்புறத்திலிருந்து திசுக்களையும் சரி செய்கிறது.

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை - 1

செய்முறை:

1. எலுமிச்சையை கசக்கி பிழிந்து கொள்ள வேண்டும். அதனை கொண்டு பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரு நாளைக்கு இரண்டு முறை தேய்க்க வேண்டும்.

ஆஸ்பிரின்:

ஆஸ்பிரின்:

தேவையான பொருட்கள்:

ஆஸ்பிரின் மாத்திரைகள் - 2

தண்ணீர் - சில அளவு

செய்முறை:

1. மாத்திரையை நொறுக்கி கொள்ள வேண்டும்.

2. அதனை தண்ணீரில் கலந்து, மிருதுவான பேஸ்டை போல் வைத்துக்கொள்ள வேண்டும்.

3. ஒரு நாளைக்கு ஒரு தடவை என பாதிக்கப்பட்ட பகுதியில் தினமும் தேய்த்து வர வேண்டும்.

சமையல் சோடா:

சமையல் சோடா:

உராய்வு தன்மை கொண்ட சமையல் சோடா, உங்கள் சருமத்தை தளரவும், ஆற்றவும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்:

சமையல் சோடா - 1 டீ ஸ்பூன்

ஹைட்ரஜன் பெராக்சைட் - 3 டீ ஸ்பூன்

செய்முறை:

1. ஒரு பௌல் எடுத்துக்கொண்டு சமையல் சோடாவையும், ஹைட்ரஜன் பெராக்சைடையும் கலந்து கொள்ள வேண்டும்.

2. ஒரு சுத்தமான துணியை கொண்டு பாதிக்கப்பட்ட பகுதியில் இந்த கலவையை தேய்க்க வேண்டும்.

3. ஒரு நாளைக்கு இரண்டு தடவை நாம் தொடர்ந்து வர, நல்லதோர் விளைவினை காண்பீர்கள்.

 தேயிலை எண்ணெய்:

தேயிலை எண்ணெய்:

வளர்வடுவின் வளர்ச்சியை தடுக்க இந்த தேயிலை எண்ணெய் பயன்பட, அரிப்பையும் குறைக்கிறது.

தேவையான பொருட்கள்:

தேயிலை எண்ணெய் - 4 முதல் 5 சொட்டு

வைட்டமின் E மாத்திரை

செய்முறை:

1. வைட்டமின் E மாத்திரையை நறுக்கி பிதுக்கி கொள்ள வேண்டும்

2. அதனை தேயிலை எண்ணெய்யுடன் கலந்துவிட்டு, வளர்வடு இருக்கும் இடத்தில் தேய்க்க வேண்டும்.

3. இந்த முறையை வீக்கம் குறையும் வரை தினமும் பின்பற்ற வேண்டும்.

பூண்டு:

பூண்டு:

வடுவின் வளர்ச்சியினால் உருவாகும் நார் போன்றதை குறைக்க பூண்டு பயன்படுகிறது. இதில் இருக்கும் பாக்டீரியா மற்றும் அலர்ஜியை எதிர்க்கும் பண்பானது வடுவை முற்றிலும் குணமடைய செய்ய உதவுகிறது.

தேவையான பொருட்கள்:

பூண்டு - 4 முதல் 5 பற்கள்

செய்முறை:

1. பூண்டு பற்களை நறுக்கி கொண்டு, அதனை பாதிக்கப்பட்ட பகுதியில் நேரடியாக தடவ வேண்டும்.

2. ஒரு நாளைக்கு இரண்டு முறை இவ்வாறு செய்துவர, நற் விளைவையும், முடிவையும் நீங்கள் விரைவில் பெறுவீர்கள்.

தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய்:

சுத்தமான தேங்காய் எண்ணெய்யுடன் லாவண்டெர் எண்ணெய் சேர்த்து பயன்படுத்த, வளர்வடுவை நம் உடம்பிலிருந்து போக்க முடிகிறது.

தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய் - 5 டீ ஸ்பூன்

லாவண்டெர் எண்ணெய் - 3 டீ ஸ்பூன்

செய்முறை:

1. ஒரு பௌலில் இரண்டு மூலப்பொருட்களையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

2. அதனை கொண்டு மெதுவாக, வளர்வடு காணப்படும் இடத்தில் தடவி பதினைந்து நிமிடங்களுக்கு வைத்திருக்க வேண்டும்.

3. மீதமிருக்கும் கலவையை குளிர்ந்த, இருள் இடத்தில் வைத்து, தினமும் இந்த முறையை நாம் தொடர்ந்து வரலாம்.

புல்லர் எர்த்:

புல்லர் எர்த்:

இந்தியாவின் ‘மல்டினி மிட்டி' என்று இதனை அழைக்கப்படுகிறது. சருமத்தில் ஏற்படும் வீக்கத்தை இது குறைக்க, ரத்த ஓட்டத்தின் அளவையும் உயர்த்துகிறது. மேலும், இது வளர்வடுவின் வடிவத்தையும் குறைக்கிறது.

தேவையான பொருட்கள்:

புல்லர் எர்த் - 1 டேபிள் ஸ்பூன்

ரோஸ் வாட்டர் - 1 டீ ஸ்பூன்

செய்முறை:

1. புல்லர் எர்த்தை ரோஸ் வாட்டருடன் கலந்து பேஸ்டைபோல் வைத்துக்கொள்ள வேண்டும்.

2. வளர்வடு காணப்படும் இடத்தில் இதனை மெதுவாக தடவ வேண்டும்.

3. பத்து நிமிடங்களுக்கு காயும் வரை விட்டுவிட வேண்டும்.

4. அதன் பிறகு துடைக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது என, இதனை தினமும் தொடர்ந்து வர வேண்டும்.

பெட்ரோலியம் ஜெல்லி:

பெட்ரோலியம் ஜெல்லி:

வளர்வடுவானது உலர்ந்து, சுரசுரப்புடன் காணப்படும். அதனை ஈரப்பதத்துடன் நாம் வைத்து கொள்வது அதன் தோற்றத்தை குறைக்கும். தினசரி பயன்படும் இந்த பெட்ரோலியம் ஜெல்லியானது வளர்வடுவில் ஈரப்பதத்தை மூட்டி, நீரேற்றம் தங்க வைக்கவும் உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Keloids – Simple Home Remedies To Get Rid Of It

Keloids – Simple Home Remedies To Get Rid Of It
Story first published: Monday, July 31, 2017, 12:20 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter