உங்களுடைய கை, கால் மூட்டுகள் எல்லாம் கருப்பா அசிங்கமா இருக்கா? இத யூஸ் பண்ணுங்க!

Written By:
Subscribe to Boldsky

சருமம் உடல் முழுவதும் ஒரே நிறத்தில் காணப்பட்டால்தான் அழகு. சிலர் சிவந்த நிறமாய் இருந்தாலும் முழங்கை மற்றும் கால் மூட்டுகள் மட்டும் கருப்பாக பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும். நீங்கள் என்ன தான் நிறமாக இருந்தாலும் கூட உங்களது கருமை தான் மற்றவர்களது கண்களுக்கு தெரியும்...!

மூட்டுகளில் கருமை வருவதற்கு காரணம், அங்கே மெலனின் செல்களின் சுரப்பு அதிகமாகியிருக்கும். இறந்த செல்கள் தங்கி, அந்த இடம் பாதிப்படைந்து கருமையாக காண்பிக்கிறது. இந்த பகுதியில் உங்களது முழங்கைகள் மற்றும் முழங்கால்கள் நிறம் பெற சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள் :

தேவையான பொருட்கள் :

  1. சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
  2. சமையல் சோடா - 2 டீ ஸ்பூன்
  3. கற்றாழை - 1 டேபிள் ஸ்பூன்

இந்த கலவை மூட்டுகளில் தினமும் தேய்த்து வந்தால், அங்கு தேங்கியிருக்கும் இறந்த செல்கள் வெளியேறி, புதிய செல்கள் உருவாகும். இவை சருமத்தில் ஆழமாக சென்று, அழுக்குகளை நீக்குகிரது. இதனால் மெல்ல மெல்ல கருமை போய்விடும். சமையல் சோடா கருமையை போக்கும் இயற்கையான ப்ளீச்சாக செயல்படுகிறது. சருமத்தை பளிச்சென்று ஆக்கிவிடும்.

செய்முறை :

செய்முறை :

மேலே சொன்ன மூன்றையும் நன்றாக கலந்து, மூட்டுகளில் சில நிமிடங்கள் தேய்க்கவும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து, கழுவலாம். தினமும் இதனை செய்யுங்கள் 2 வாரங்களிலேயே கருமை போய்விடும். இன்னும் விரைவான ரிசல்ட் கிடைக்க தினம் காலை மாலை என இருவேளைகளிலும் பயன்படுத்துங்கள்

 பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது. பால் அழுக்கை நீக்க பயன்படுகிறது. இவை இரண்டும் சேர்ந்து சருமத்தில் உள்ள இறந்த செல்களைப் புதுப்பிக்கும்.

ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் பால் சேர்த்து பேஸ்ட்டாக்கி, முழங்கை, முழங்கால்களில் தடவி, 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கழுவவும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இந்த முறையைப் பயன்படுத்தவும்.

மஞ்சள் பொடி

மஞ்சள் பொடி

ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடியுடன் இரண்டு ஸ்பூன் தேன் ஆகியவற்றைச் சேர்த்து, நன்கு பேஸ்ட்டாக்கி, தோல் கருமையுள்ள இடங்களில் தடவி, 20 நிமிடங்கள் வைத்திருந்து நன்கு தேய்த்துக் கழுவவும். மஞ்சள் சிறந்த ஆன்டி-செப்டிக்காகவும் தேன் சிறந்த மாய்ச்சரைஸராகவும் பயன்படுகிறது.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை சருமத்தை ஈரப்பதமுடன் வைத்திருக்கும். கற்றாழை சிறந்த மாய்ச்சரைஸராகப் பயன்படுகிறது. அதனால் இயற்கையாகவே சரும நிறத்தை மேம்படுத்துகின்றது. இற்றாழையை கருமையுள்ள இடங்களில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து வெந்நீரில் கழுவவும்.

எலுமிச்சை தேன்

எலுமிச்சை தேன்

எலுமிச்சையும் தேனும் கலந்து தோலில் கருமையாக உள்ள இடத்தில் தடவி, அரை மணி நேரம் கழித்து நன்கு கழுவவும்.

தயிர் மற்றும் வினிகர்

தயிர் மற்றும் வினிகர்

தயிருடன் வினிகர் சேர்த்து கலந்து கருமையான இடத்தில், தேய்க்க வேண்டும். வினிகர் கருமையைப் போக்கவும் தயிர் சிறந்த மாய்ச்சரைஸராகவும் பயன்படுகிறது.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் சிறந்த மாய்ச்சரைஸராக்ப பயன்படும்.. தினமும் இரவு தூங்கும் போது, முழங்கை மற்றும் முழங்கால் பகுதியில் ஆலிவ் ஆயிலை தேய்த்து, காலையில் எழுந்ததும் வெந்நீர் கொண்டு கழுவ வேண்டும்.

அரிசி மாவு

அரிசி மாவு

அரிசி மாவை சூடான பாலில் கலந்து கை, கால், விரல்களின் மூட்டுகளில் ஸ்கிரப் செய்து வந்தால் விரைவில் உங்களது மூட்டுக்கள் உங்களது சருமத்தின் நிறத்திற்கே திரும்பிவிடும். இவற்றைத் தொடர்ந்து செய்து வந்தால், முழங்கை மற்றும் முழங்கால் பகுதிகளில் உள்ள கருமையை எளிதாகப் போக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

how whiten your elbow

how whiten your elbow
Story first published: Friday, December 1, 2017, 16:49 [IST]